Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடியின் பிடி ஆர்எஸ்எஸ் கையில் இருக்கு ... தமிழக ஆளுநர் பாஜக ஏஜென்ட் - கி. வீரமணி சாடல்

திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என கேட்பவர்களுக்கு அனைவரும் படிக்க வேண்டும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி என்று கி. வீரமணி கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடியின் பிடி ஆர்எஸ்எஸ் கையில் இருப்பதாக தி.க தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார். பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது என்றும் அதற்கு ஏஜென்டாக செயல்படுபவர் தான் தற்போதைய தமிழக ஆளுநர் எனவும் கி. வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.

திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு , புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயண பொது கூட்டம் தருமபுரியில் மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.

அப்போது அவர், இந்தியா முழுவதும் கொரோனா என்ற வைரஸ் தொற்று பல ரூபத்தில் வந்து மக்களை வாட்டி வதைத்தது. அதை விட மிக மோசமான கொடிய நோய் தான் நீட் தேர்வு மற்றும் தேசிய கல்வி கொள்கை என்ற குலதர்ம கல்வி திட்டம் என்றார்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

கொரோனா காலத்தில் உறவினர்கள் கூட நோயாளிகளை நெருங்க முடியாமல் யோசித்த நிலையில் நோயால் பாதிக்கபட்ட பொதுமக்களை எந்த முதல்வரும் செய்யாத ஒன்றை மருத்துவமனையில் நேரில் சென்று பார்த்த ஒரே தமிழக முதல்வர் ஸ்டாலின் தான்.

நீட் எதிர்ப்பு

நீட் எதிர்ப்பு


அதேபோல் கொடிய நோயான நீட் மற்றும் தேசிய கல்வி கொள்கையையும் துணிந்து எதிர்த்து போராடுவார் என்றார். சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என்ற நிலையை 100 ஆண்டுகளுக்கு முன்னறே ஒழித்து கட்டிய பெருமை திராவிட இயக்கத்தை சாரும் என்றார்.

திராவிட மாடல் ஆட்சி

திராவிட மாடல் ஆட்சி

அதனடிப்படையில் தமிழகத்தில் மாவட்டம் தோறும் அனைவரும் படிக்கும் வகையில் மருத்துவ கல்லூரிகள் துவக்கிய பெருமை திராவிட மாடல் ஆட்சியை சாரும் என்றார்.திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என கேட்பவர்களுக்கு அனைவரும் படிக்க வேண்டும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி ஆகும்.

Recommended Video

    காஞ்சிபுரம்: கல்வியை தராத தேசிய கல்விக் கொள்கை: மத்திய அரசு மீது பாய்ந்த கி. வீரமணி!
    பாஜக ஏஜென்ட்

    பாஜக ஏஜென்ட்

    குஜராத் முதல்வராக இருந்த மோடி அப்போது நீட் மற்றும் ஜிஎஸ்டிகளை எதிர்த்தவர். ஆனால் அவர் பிரதமராக வந்த பின்பு எதையெல்லாம் எதிர்த்தாரோ அதையெல்லாம் செய்து வருகிறார். காரணம் அவருடைய பிடி ஆர்.எஸ்.எஸ் கையில் உள்ளது. தற்போது பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. அதற்கு ஏஜென்டாக செயல்படுபவர் தான் தற்போதைய தமிழக ஆளுநர் எனவும் கி. வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+