இது 2வது முறை.. ஜிஎஸ்டி இழப்பீடு எங்கே? ஆளுநர் உரையில் இருந்த "அந்த" கோரிக்கை.. முக்கியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தின் நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் தனது உரையை வாசித்தார். இந்த உரையில் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மேலும் இரண்டு ஆண்டுகளக்கு நீட்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி வருவதற்கு முன்னர் 17 வரிகள் இருந்த நிலையில், ஜிஎஸ்டி இதையனைத்தையும் ஒருங்கிணைத்தது. இதனையடுத்து கடந்தை 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டது. ஆனால் ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக மாநில அரசுகள் விமர்சித்தன. இதனையடுத்து இந்த இழப்புகளை ஈடு செய்ய 5 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

அப்படியாக வழங்கப்பட்டு வந்த தொகையும் உரிய காலத்தில் கிடைக்காததால் மாநில அரசுகள் மத்திய அரசை விமர்சித்து வந்தன. இந்நிலையில் இந்த இழப்பீட்டு தொகைக்காகன கால அவகாசம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. அதே மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சர்கள் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகைக்கான காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க கோரிக்கை வைத்தனர்.

ஜிஎஸ்டி நிலுவை

ஜிஎஸ்டி நிலுவை

ஆனால், இந்த கோரிக்கை குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படலாமலேயே இக்கூட்டம் நடந்து முடிந்தது. இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை இந்த கோரிக்கைகளை தமிழ்நாடு, கேரளா என பல்வேறு மாநிலங்கள் முன்வைத்து வருகின்றன. சில மாநிலங்கள் இந்த இழப்பீட்டு தொகை வழக்கும் காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. 2019ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு நாடு முழுவதும் பெரும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியது. வேலையிலன்மை, தொழில் முடக்கம் ஆகியவற்றால் மாநிலத்திற்கான வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டு

தொடர்ந்து இரண்டாவது ஆண்டு

இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு புதியதாக பொறுப்பேற்ற திமுக அரசு 2022ம் ஆண்டு முதல் சட்டப் பேரவை கூட்டத்தை கூட்டியது. அந்த முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையில் 'ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து வழங்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருந்தார். தற்போது இதே கோரிக்கையை இந்த ஆண்டு உரையைிலும் ஆளுநர் முன் வைத்துள்ளார். வருவாய் பற்றாக்குறை காரணமாக இதனை நீடித்து வழங்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய ஆளுநர், மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையிலிருந்து சிலவற்றை வாசிக்காமல் கடந்து சென்றிருக்கிறார். இதானல் அவையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இழப்பீடு

இழப்பீடு

தேசிய அளவில் ஒட்டுமொத்தாக 16 மாநிலங்கள் ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்கள் மட்டுமே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன. மறுபுறம் பாஜக ஆட்சியிலிருக்கும் மாநிலங்களும் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை கேட்கவில்லை. மறுபுறம் மேலும் சில பொருட்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

வரி வருவாய்

வரி வருவாய்

அதாவது பெட்ரோல், டீசல், மதுபானம், மின்சாரம் உள்ளிட்ட எரிபொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், சில மாநில அரசுகள் இதனை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. ஏனெனில் இம்மாநிலங்களின் வரிவருவாயில் மது மற்றும் பெட்ரோல், டீசல் ஆகியவை பிரதான பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+