சட்டசபையில் ஆளுநர் உரை.. அதிமுக வெளிநடப்பு... விசிக வெளியேறியது இதற்குத்தானாம்
ஆளுநர் உரையுடன் சட்டசபைக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில் அதிமுக, மற்றும் திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியுள்ளது. ஆளுநர் உரையைப் புறக்கணித்து இன்று அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் அனுமதி அளிக்காததைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் முதல்முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்த்தாய் வாழ்த்து நேரடியாக பாடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இசைக்கல்லூரியை சேர்ந்த பணியாளர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடினார்.
அம்மா கிளினிக் மூடல், அம்மா பல்கலைக்கழகம் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து திமுக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.

எதுவும் சரியில்லை
ஆளுநர் உரையை வாசிக்கத் தொடங்கும் போதே அதிமுகவினர் கூச்சலிட்டனர். அம்மா மினி கிளினிக் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். வெளி நடப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுவதாகவும் குற்றம் சாட்டினார். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்படவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

விசிக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
சட்டசபைக் கூட்டத்தொடரில் இருந்து திமுக கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிந்தனைச் செல்வன், ஆளூர் ஷாநவாஸ், செய்யூர் பாபு, திருப்போரூர் பாலாஜி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தாக தெரிவித்தனர்.

விசிக விளக்கம்
வெளிநடப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏக்கள் "அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றிய The Undergraduate Medical Degree Courses Bill, 2021 யை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் சட்டசபையை மேதகு ஆளுநர் சிறுமைப்படுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசையும் அதைத் தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு மக்களையும், அரசியலமைப்பு சட்டத்தையும் அவமதிக்கிற ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உரையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புறக்கணித்து வெளிநடப்புச் செய்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்
Recommended Video


நீட் தேர்வு தேவையில்லை
இந்நிலையில், ஆளுநர் உரையில், பொதுவாக நுழைவுத்தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு சமனற்ற தளத்தையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. எனவே தொழில் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் தேவையற்றது என இந்த அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications