திமுக மகளிரணிச் செயலாளர்! கனிமொழி வகித்த பதவியை கைப்பற்றிய ஹெலன் டேவிட்சன்! பின்னணி என்ன?
சென்னை: திமுக மகளிரணிச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சனை நியமித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன்.
கனிமொழி வகித்து வந்த திமுக மகளிரணிச் செயலாளர் பதவியை கைப்பற்ற பெண் நிர்வாகிகள் பலரும் முட்டி மோதிய நிலையில் சத்தமின்றி சாதனை படைத்திருக்கிறார் ஹெலன் டேவிட்சன்.
ஹெலன் டேவிட்சனுக்கு திமுக மகளிரணிச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதன் பின்னணியில் கனிமொழி இருப்பது குறிப்பிடத்தக்கது.

திமுக மகளிரணி
திமுகவின் சார்பு அணிகளில் இளைஞரணிக்கு அடுத்தபடியாக அதிக முக்கியத்துவம் வாய்ந்த அணி என்றால் அது மகளிரணி தான். இந்த அணியின் செயலாளராக கனிமொழி இருந்து வந்த நிலையில், அண்மையில் திமுக துணைப் பொதுச்செயலாளராக அவர் புரோமோஷன் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் வசம் இருந்த மகளிரணிச் செயலாளர் பதவி யாருக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்தது. திமுகவில் உள்ள முக்கிய பெண் பிரமுகர்கள் பலரும் இந்தப் பதவியை கைப்பற்ற முயற்சித்து வந்தனர்.

ஹெலன் டேவிட்சன்
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கன்னியாகுமரி தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சனுக்கு திமுக மகளிரணிச் செயலாளர் பதவியை வழங்கியுள்ளார் ஸ்டாலின். ஹெலன் டேவிட்சனை திமுக மகளிரணிச் செயலாளர் பதவிக்கு தேர்வு செய்து அவரை ஸ்டாலினிடம் பரிந்துரை செய்ததே கனிமொழி எம்.பி. தான் என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல் ஹெலன் டேவிட்சனை பொறுத்தவரை நீண்ட காலமாக கனிமொழிக்கு பக்க பலமாக நின்று வருபவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அமைதியான சுபாவம்
குறிப்பாக 2ஜி வழக்கில் கனிமொழி சிறைவாசம் அனுபவித்த போது ராஜாத்தி அம்மாளுக்கு ஹெலன் டேவிட்சன் துணையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் டெல்லியில் அவருக்கு தேவையான உதவிகளை செய்தவர் என்பதும் திரும்பிப் பார்க்கத் தக்கது. மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக ஆர்ப்பாட்டமின்றி அமைதியான சுபாவம் கொண்டவர் ஹெலன் டேவிட்சன் என்பதும் கனிமொழி அவரை தேர்வு செய்ததற்கான முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.

நம்பிக்கைக்கு உரிய
இதேபோல் திமுக மகளிரணித் தலைவராக விஜயா தாயன்பனும், மகளிரணி இணைச் செயலாளராக குமரி விஜயகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் இருவரும் கனிமொழியின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் தாம் பார்த்து பார்த்து வளர்த்த திமுக மகளிரணியை தனது நம்பிக்கைக்குரியவர்கள் கைகளிலேயே வழங்கி கண்காணிக்கவுள்ளார் கனிமொழி.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications