முகம் முழுக்க காயம்.. நடிகை சித்ரா மரண வழக்கில் முக்கிய தீர்ப்பு! கணவர் ஹேம்நாத்துக்கு வந்த சிக்கல்!
சென்னை : நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய மறுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என்றதோடு அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
பிரபல சீரியல் நடிகை விஜே சித்ரா சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சித்ரா தற்கொலை செய்துகொள்ள அவரின் கணவர் மற்றும் தாய் கொடுத்த மனஅழுத்தமே காரணம் என காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விஜே சித்ரா
அடுத்தடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மதுபோதையில் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று சித்ராவுடன் பிரச்னை செய்தது அம்பலமாகியுள்ளது. அதனால், ஹேம்நாத்தை விட்டு பிரிந்து வருமாறு தாய் விஜயா சித்ராவிடம் தெரிவித்ததாகவும், இருவரால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் கூறினர். சித்ராவின் செல்ஃபோனில் இருந்த SMS, புகைப்படங்கள், ஆடியோ போன்ற ஆதாரங்கள் அழிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

கணவர் ஹேம்நாத்
இந்நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத்தை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கில் அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தன்மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை ரத்து செய்ய கோரிக்கை
இந்நிலையில் ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்த சித்ராவின் தந்தை காமராஜும் ஹேம்நாத் மனுவில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து aவர் தாக்கல் செய்த பதில் மனுவில், உயிரிழந்த சித்ராவின் முகத்தில் காயங்கள் காணப்பட்டன. விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காகவே தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோருகிறார். போதிய ஆதாரங்கள் உள்ள நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை எதிர்கொள்வதே சரியானது. எனவே ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யாமல், அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

அதிரடி தீர்ப்பு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இவ்வழிக்கில் இன்று தீர்ப்பளித்தனர். அதில் நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதி, குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரிய ஹேம்நாத் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications