சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதை கவனிச்சீங்களா.. உங்களை சுற்றி கடந்த 18 மாதத்தில் நடந்த பெரிய மாற்றம்

Google Oneindia Tamil News

சென்னை : கொரோனாவால் வாழ்க்கை முறையே அடியோடு மாறி போய் உள்ளது,. ஒரு பக்கம் சாப்பாடு, சுற்றுலாவிற்காக ஏங்கி அதன் மீது மக்கள் கவனம் செலுத்துகிறார்கள். இன்னொரு பக்கம் வாழ்வாதாரத்திற்கான வழிகளை இழந்து அடுத்த வேளை சோற்றுக்கே பரிதவிக்கிறார்கள் ஏழை மக்கள்

இந்த இரண்டுக்கும் மிகப்பெரிய ஒற்றுமைகள் உள்ளது. கொரோனா காரணமாக சாப்பாடு, சுற்றுலா, கொண்டாட்டங்களுக்கு பணக்காரர்கள் செலவு செய்ய முடியால் போனதால், பணம் வெளியே வராமல் நின்று போனது.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் பண சுழற்சியே மொத்தமாக நின்றுவிட்டது. இதனால் பணக்காரர்கள் கைகளில் பலகோடி செல்வம் முடங்கிவிட்டது. இன்னொரு பக்கம் பணத்தை எல்லா தரப்பு மக்களும் தாராளமாக செலவு செய்ததால் அடுத்த வேளை சோற்றுக்கு நிச்சயம் இல்லாத நிலையை ஏழை மக்கள் சந்தித்திருக்கிறார்கள்.

இது உங்களுக்கு வேணா குஷியா இருக்கலாம்.. ஆனா எங்களுக்கு அப்டியில்ல.. கவலையில் கடைசி பென்ஞ்!இது உங்களுக்கு வேணா குஷியா இருக்கலாம்.. ஆனா எங்களுக்கு அப்டியில்ல.. கவலையில் கடைசி பென்ஞ்!

என்ன பாதிப்பு

என்ன பாதிப்பு

கொரோனா தொற்றால் கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கை முறையை மாற்றிவிட்டது. வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாம் என்ற நடைமுறை சென்னை போன்ற பெருநகர மக்களின் வாழ்வியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. டீ கடை, உணவகங்கள், சின்ன சின்ன தள்ளு வண்டி கடைகள், பழக்கடைகள், ஆட்டோ ஓட்டுநர்கள், கால் டாக்சி ஓட்டுநர்கள், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் நிறுவனங்கள்

தனியார் நிறுவனங்கள்

இது ஒருபுறம் எனில் ஐடி ஊழியர்கள் உள்பட தனியார் நிறுவன ஊழியர்களை நம்பி வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டவர்கள் , மாதாந்திர தவணைகள் கட்ட முடியாமல், தவிக்கிறார்கள். பல நிறுவனங்கள் மூடப்பட்டதால் நடுத்தர மக்கள் வேலைகளை இழந்து தவிக்கிறார்கள். படித்த இளைஞர்கள் வேலை கிடைக்காமல் முடங்கிபோய் உள்ளனர். கொரோனா ஊரடங்கு பணக்காரர்களை விட ஏழைகளின் வாழ்வில் கொரோனா ஏற்படுத்திவிட்டு போன பாதிப்பு கற்பனை செய்யவே முடியாதது. எப்போது சரியாகும் என்பது மிகப்பெரிய கேள்வி.

கொண்டாட்டங்கள்

கொண்டாட்டங்கள்

ஏனெனில் சுற்றுலாக்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள், கோயில் திருவிழாக்கள், முகூர்த்த நாட்களின் போது தான் மக்கள் ஏரளாமான பணத்தை செலவு செய்வார்கள். இந்த சமயத்தில் தான் மக்கள் தங்களுக்கு வேண்டிய அனைத்தையும் வாங்குவார்கள். இதனால் ஜவுளி கடை, நகைக்கடைகளில் கூட்டம் வழியும். பூங்காக்களில், கறிக்கடைகளில், கோயில்களில் கூட்டம் வழிந்தால் தான் மக்கள் அதிக செலவு செய்வார்கள்.

கோயில்களில் கூட்டம்

கோயில்களில் கூட்டம்

ஒரு சின்ன உதாரணத்தை பார்ப்போம். கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாள், அன்றை தினம் ஏராளமான திருமணங்கள் நடந்தன. அன்றைக்கு மொகரம் பண்டிகையும் கூட. அன்றை நாள் வெள்ளிக்கிழமை என்பதால் கோயில்களில் கூட்டம் அலைமோதியது. அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் சுற்றுலா தளங்களிலும் கூட்டம் அலைமோதியது. இதன் மூலம் ஏராளமான பணம் அப்போது செலவு செய்யப்பட்டது. மக்கள் கடைக்கு போக ஆட்டோவை நாடினார்கள். ஆட்டோகாரர் சந்தோஷப்பட்டார். பூக்கடையில் பூ அதிகம் விற்பனையானது, பூவிற்கும் அம்மா சந்தோஷமானார். ஜவுளி, நகைக் கடைகளில் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சுற்றுலா தளங்களுக்கு மக்கள் குவிந்தால் விடுதி உரிமையாளர்கள், கால் டாக்ஸி ஓட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர்கள், சுற்றுலா தளங்களில் கடை வைத்துள்ளவர்கள் என ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். காரணம் மக்கள் இடம் பெயர்வால் பணம் அதிகம் புழங்கியது.

மக்கள் திண்டாட்டம்

மக்கள் திண்டாட்டம்

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக எந்த சுழற்சி எதுவும் நடைபெறவில்லை. இதனால் பணம் பணக்காரர்களிடம் முடங்கியது. கோடிக்கணக்கான செல்வம் முடங்கியதால் ஏழைக்கள் பாடு திண்டாட்டம் ஆனது. லாக்வுடனால் ஏற்பட்ட பேரழிவுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பணக்காரர்களுக்கு பணத்தை செலவு செய்து ஜாலியாக இருக்க முடியவில்லை என்ற கவலையையும், ஏழைகளுக்கு அடுத்த வேலை சோற்றுக்கே வழி இல்லை என்ற வலையையும் லாக்டவுன் ஏற்படுத்தி உள்ளது. லாக்டவுன் என்ற வார்தைக்கு தமிழில் சரியான விளக்கம் பூட்டுதல் என்பதுதான்,. அதாவது எதுவுமே முடியாத பட்சத்தில் அந்த பகுதிகளில் அனைத்து நடவடிக்கைகளை நிறுத்தி முடக்குவது அதைத்தான் அரசுகள் கொரோனாவின் போது செய்தன. சிறு தொழில்கள் சீரழிந்துவிட்டன. அதை எப்படி மீட்டெடுக்க போகிறோம் என்பது தெரியவில்லை

செலவு செய்யும் பொருளாதாரம்

செலவு செய்யும் பொருளாதாரம்

நம் மக்களுக்கு சேமிப்பு பொருளாதாரம் மகிழச்சி தருமா அல்லது செலவு செய்யும் பொருளாதாரம் நல்லதா என்றால் செலவு செய்யும் பொருளாதாரமே அதிக மகிழ்ச்சியை அதிகம் பேருக்கு மகிழ்ச்சியை தரும், பணக்கார நடுத்தர மக்கள் அண்மைக்காலமாக நல்ல உணவு எங்கு கிடைக்கும் தேடுவதை அதிகம் பார்க்க முடியும்.. நல்ல உணவு என்றால் ருசியான உணவு எங்கு கிடைக்கும் என்று தேடுகிறார்கள். சுற்றுலா தளங்கள் எப்போது திறக்கும் என்று தவிக்கிறார்கள்.

பரம ரகசியம்

பரம ரகசியம்

பணக்கார்கள் செலவு செய்தால் தான் ஏழைகளின் கைகளுக்கு பணம் வரும் என்பதால் ஏழைகளும் என்றைக்கு கொரோனா என்ற பெயரில் போடப்பட்டுள்ள கைவிலங்கை உடைப்பார்கள் என்ற ஏக்க பெருமூச்சுடன் காத்துக்கிடக்கிறார்கள். ஆனால் அரசுளுமே என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன. ஏனெனில் விடை தெரியா கேள்வி கொரோனா,.. அதற்கான விடை பரமரகசியம்.. அதை படைத்தவனுக்கு தெரியும். ஏனெனில் மூன்றாவது அலை வந்து கொண்டிருக்கிறது..

English summary
Life after the corona has changed drastically, respectively. The rich crave for food and tourism and people focus on it. On the other hand, poor people are losing their livelihoods and are desperate for the next time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X