விக்ரமனால் எனக்கு பெருமை.. என்னிடம் கேட்ட பிறகே பிக்பாஸ் சென்றார் - நெகிழ்ச்சியடைந்த திருமாவளவன்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னிடம் கேட்டபிறகே விக்ரமன் கலந்துகொண்டார் எனவும், அவர் தன்னுடைய அரசியல் அடையாளத்தை எந்த இடத்திலும் மறைக்காமல் செயல்பட்டு வருவது தனக்கு மிகுந்த பெருமையை தருவதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்து இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை எட்டிவிட்ட நிலையில், விக்ரமனுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை எட்டி இருக்கிறது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவரும், பத்திரிகையாளருமான விக்ரமன் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார்.
தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் ட்விட்டரில் சாதி, மத வெறிக்கு எதிராக அழுத்தமான கருத்துக்களை பதிவு செய்து வந்த விக்ரமன், அதையே பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் செய்து வருகிறார். பட்டியலின, பழங்குடியின மக்கள், பெண்கள், திருநங்கைகள் ஆதரவாக தொடர்ந்து அவர் பேசி வருகிறார்.

முற்போக்கு பேசும் விக்ரமன்
பிக்பாஸில் சக போட்டியாளர்கள் செய்யும் தவறுகளையும் தட்டிக்கேட்பவராக உள்ளார். பிக்பாஸ் வீட்டில் யாராவது ஒருவர் பிற்போக்குத் தனமான கருத்துக்களை தெரிவித்தாலோ, பிறரை உருவ கேலி செய்தாலோ, குறிப்பிட்ட தரப்பினர், சமூகத்தினர் மீது மேம்போக்கான விமர்சனங்களை பொது புத்தியிலிருந்தோ அல்லது காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவோ முன்வைத்தால் முதலில் அதை தட்டிக்கேட்பது விக்ரமன் தான்.

கொள்கையில் உறுதி
சக போட்டியாளரான ஷிவின் ஒரு முறை மீன்காரிபோல் கத்தாதே என சொன்னதை கண்டித்தது தொடங்கி, அந்நியன் திரைப்படத்தில் படத்தில் பிற்போக்கான கருத்துக்கள் இருந்ததால் அந்த கதாபாத்திரத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என கூறியது வரை தொடர்ந்து தன்னுடைய கொள்கைளை விட்டுக்கொடுக்காமல் விக்ரமன் விளையாடி வருகிறார்.

அம்பேத்கருக்கு கடிதம்
சமீபத்தில் அண்ணல் அம்பேத்கருக்கு விக்ரமன் எழுதிய கடிதம் பிக்பாஸில் ஒளிபரப்பு செய்யப்படாததற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், மறுநாள் அதை விஜய் டிவி ஒளிபரப்பியது. சனிக்கிழமை நிகழ்ச்சியில் கமல்ஹாசன் மீண்டும் ஒருமுறை விக்ரமனை எழுப்பி அம்பேத்கருக்கு எழுதிய கடிதம் குறித்து பேச வைத்து பாராட்டினார். இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்பியுமான திருமாவளவன், விக்ரமனால் தனக்கு பெருமை என்று கூறி இருக்கிறார்.

திருமாவளவன் பேட்டி
அந்த சேனலின் நெறியாளர், "விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த விக்ரமன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் பெரியாரிய, அம்பேத்கரிய கருத்துக்களை கொண்டு செல்கிறார். சாதி ஒழிப்பு பற்றி பேசி வருகிறார். இதை நீங்கள் பார்க்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.

விக்ரமன் பேச்சுக்களை பார்க்கிறேன்
இதற்கு பதிலளித்த திருமாவளவன், "என்னால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. ஆனால் அவருடைய பேச்சு, விமர்சனங்கள் எல்லாம் ஸ்க்ரீன் ஷாட் மூலமாக தோழர்கள் எனக்கு அனுப்புகிறார்கள். இப்போது கூட வோட்டிங் ஏதோ போடுகிறார்கள். அதை நான் பார்க்கவில்லை. நான் பெருமைப்படுகிறேன்.

விக்ரமனால் எனக்கு பெருமை
பிக்பாஸில் இருந்து எனக்கு ஒரு வாய்ப்பு வருகிறது. நான் போகலாமா என்று அவர் என்னிடம் கேட்டார். தாராளமாக செல்லுங்கள் என்று நான் சொன்னேன். மகிழ்ச்சியோடு நான் அவரை வழியனுப்பி வைத்தேன். அவர் தன்னுடைய அரசியல் அடையாளத்தை எந்த இடத்திலும் மறைக்கவில்லை. அது எனக்கு பெருமைதான். மகிழ்ச்சி." என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications