“டைம் மெஷின் கிடைத்தால் 2014க்கு போய் பிரதமர் மோடியை மாற்றி விடுவேன்” - நடிகர் கிஷோர் பதில் வைரல்
சென்னை: "டைம் மெஷின் கிடைத்தால் 2014 ஆம் ஆண்டுக்குச் சென்று பிரதமர் மோடியை மாற்றி விடுவேன். இந்தியாவே மாறியிருக்கும். நாடு இப்போது ஆபத்தான நிலைமையில் இருக்கிறது. வெறுப்புணர்வு நாட்டில் அதிகம் இருக்கிறது. இப்படியே போனால் இதை மாற்றுவதற்கு பல வருடங்கள் ஆகும்" என நடிகர் கிஷோர் கூறிய பதில் வைரலாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என திரைத்துறையில் முக்கிய நடிகராக இருப்பவர் கிஷோர். பொல்லாதவன் திரைப்படம் மூலம் பெரிதாகக் கவனிக்கப்பட்டவர் கிஷோர். ஆடுகளம், ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடி குழு, விடுதலை உள்ளிட்ட பல படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கி பாராட்டுகளைப் பெற்றார்.

ஹரிதாஸ் திரைப்படத்தில் நாயகனாக நடித்ததுடன் தொடர்ந்து, விசாரணை, வடசென்னை என வெற்றி மாறன் திரைப்படங்கள் உள்பட பல படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது, இவர் நடிப்பில் உருவான மெல்லிசை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றின் போது, டைம் மெஷின் கிடைத்தால் எதை மாற்றுவீர்கள்? என நடிகர் கிஷோரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கிஷோர், "அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் 2014-க்குச் சென்று பிரதமர் மோடியை மாற்றிவிடுவேன். இந்தியாவே மாறி இருக்கும். இப்போது ஆபத்தான நிலைமையில் நாடு இருக்கிறது. நம் நாடு மட்டுமல்ல, பல நாடுகள் அப்படிதான் இருக்கின்றன. இன்று ட்ரம்பையே எடுத்துக் கொள்ளுங்களேன். இப்படியே போனால் இதை மாற்றுவதற்கு பல ஆண்டுகள் ஆகிவிடும்.
வெறுப்புணர்வை முதலீடாக வைத்து ஆட்சிக்கு வருபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இப்போது, நாட்டில் வெறுப்புணர்வு அதிகமாக இருக்கிறது. இப்படியே சென்றால், இதனை மாற்ற பல ஆண்டுகள் ஆகும். அன்பு இல்லையென்றால் இங்கு எதுவும் இருக்காது" என பதிலளித்துள்ளார்.
மேலும், ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சிக்கலில் இருப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஜனநாயகன் பட ரிலீஸ் தாமதம் குறித்து சிலர் ஒரு கடமைக்காக ட்வீட் போட்டிருக்கிறார்கள் என்றும் திரைத்துறையில் இருந்து வலுவான ஆதரவு கிடைக்கவில்லை என்றும் சொல்கிறார்களே என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "அரசியல் என்பது அதிகார பதவி போல் ஆகிவிட்டது. ஆனால் அது அதிகார பதவி கிடையாது. மக்களுக்காக வேலை செய்கிற ஒரு சேவகன். முன்னாள் பிரதமர் நேருவும் இதைதான் சொல்லி இருக்கிறார். அதாவது நான் தான் முதன்மை சேவகன் என்று சொல்லி இருக்கிறார். பிரதமர் மோடி நான் தான் பிரதம சேவகன் என்று சொல்கிறார். தற்போது ஜனநாயகம் தவறாக வழிநடத்தப்படுகிறது. வெறுப்புணர்வுகள் அதிகமாகி விட்டன" எனத் தெரிவித்துள்ளார். கிஷோரின் இந்த பதில்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications