இடியை இறக்கிய இந்தியன் ஆயில்..சென்னையில் வணிக கேஸ் சிலிண்டர் டெலிவரி நிறுத்தம்! ஹோட்டல் ஓனர்கள் ஷாக்
சென்னை: சென்னையில் வணிக ரீதியான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஹோட்டல்கள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியன் ஆயின் கார்ப்பரேசன் நிறுவனம் மார்ச் 9ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை தற்போது வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உணவகங்கள், ஹோட்டல்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நாட்டின் பிற நகரங்களிலும் இதே போன்ற நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக பெங்களூர் நகரில் சிலிண்டர் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக மார்ச் 10ஆம் தேதி முதல் பல உணவகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள உணவக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலைமை உணவக தொழிலில் பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மும்பை நகரிலும் ஹோட்டல்களுக்கு வழங்கப்படும் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அங்குள்ள உணவக உரிமையாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
எரிவாயு தட்டுப்பாட்டுக்கு சர்வதேச அரசியல் சூழல் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலை உலக சந்தையில் எரிபொருள் கிடைப்பை பாதித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சமையலுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி எனப்படும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெறப்படுகிறது.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செயல்முறையில் பல்வேறு வகையான எரிபொருட்களுடன் சேர்ந்து எல்பிஜியும் பிரித்தெடுக்கப்படுகிறது. தற்போது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொடர்பாகவும் பல கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
இதற்கிடையே இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் சென்னை மண்டலம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், உலகளாவிய அரசியல் சூழ்நிலை காரணமாக எரிவாயு விநியோக சங்கிலியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தொழில் மற்றும் வணிக வாடிக்கையாளர்களுக்கு தேவையான அளவில் எரிவாயு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள உணவக உரிமையாளர்கள் சங்கம் இந்த பிரச்சினையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவக தொழிலுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கமாக வீட்டு பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்தால் ஒரு அல்லது இரண்டு நாட்களுக்குள் விநியோகம் செய்யப்படும். ஆனால் தற்போது எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சில இடங்களில் எட்டு நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலைமையால் பொதுமக்கள் முன்கூட்டியே சிலிண்டர்களை முன்பதிவு செய்து வைத்துக்கொள்ள தொடங்கியுள்ளனர். எப்போது வேண்டுமானாலும் தட்டுப்பாடு அதிகரிக்கலாம் என்ற அச்சம் காரணமாக பலர் முன்பதிவு செய்து வருகின்றனர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications