• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சல்லி சல்லியாக நொறுங்கிய “தீவு” பிளான்.. இதுக்குதான் இவ்ளோ லட்சமா? ஆப்பிளை அதிரவைத்த ஆண்டிராய்டு

Google Oneindia Tamil News

சென்னை: சமீபத்தில் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடல் மொபைலின் இடம்பெற்ற டைனமிக் தீவு என்ற தொழில்நுட்பத்தை ஆண்டிராய்டில் ரூ.10,000 மதிப்புள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகளவில் இயங்கி வரும் தொழில்நுட்ப நிறுவனங்களிலேயே தலைசிறந்த நிறுவனமாக திகழ்வது ஆப்பிள். கணினி, லேப்டாப், செல்போன், டிஜிட்டல் வாட்ச், ஹெட் செட் என எலெக்டிரானிக் கருவிகளை தயாரித்து வருகிறது.

உலகளவில் முக்கிய பிரபலங்கள் பலரும் ஆப்பிள் கருவிகளையே பயன்படுத்த விரும்புகின்றனர். அதற்கு காரணம் அதன் வடிவமைப்பு, வசதிகள் மட்டுமின்றி, கவுரத்துக்கான அடையாளமாகிவிட்டது என்பதால்.

கவுன் பனேகா குரோர்பதி சீசன் 14.. ரூ 1 கோடியை வென்றார் பிளஸ் 2 படித்த குடும்பத் தலைவி கவிதா சாவ்லாகவுன் பனேகா குரோர்பதி சீசன் 14.. ரூ 1 கோடியை வென்றார் பிளஸ் 2 படித்த குடும்பத் தலைவி கவிதா சாவ்லா

ஆப்பிள்

ஆப்பிள்

உலகளவில் இயங்கி வரும் தொழில்நுட்ப நிறுவனங்களிலேயே தலைசிறந்த நிறுவனமாக திகழ்வது ஆப்பிள். கணினி, லேப்டாப், செல்போன், டிஜிட்டல் வாட்ச், ஹெட் செட் என எலெக்டிரானிக் கருவிகளை தயாரித்து வருகிறது. உலகளவில் முக்கிய பிரபலங்கள் பலரும் ஆப்பிள் கருவிகளையே பயன்படுத்த விரும்புகின்றனர். அதற்கு காரணம் அதன் வடிவமைப்பு, வசதிகள் மட்டுமின்றி, கௌரவத்துக்கான அடையாளமாகிவிட்டது என்பதால்.

செப்டம்பர் மாதம்

செப்டம்பர் மாதம்

நமது உறவினர்கள் நண்பர்களில் சிலர் வாங்கினால் ஆப்பிள்தான் வாங்குவேன் என்று அடம்பிடித்து கையில் ஐபோன், மேக் புக், ஐ வாட்ச் என்று சுற்றுவார்கள். செப்டம்பர் மாதம் வந்துவிட்டால் அனைத்தையும் புதிதாக வாங்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஏனென்றால் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம்தான் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய கருவிகளை அறிமுகம் செய்கிறது.

ஐபோன் 14 புரோ

ஐபோன் 14 புரோ

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 மேக்ஸ் என 4 மொபைல் போன்களை அறிமுகம் செய்தது. அவை வழக்கம்போல் ஐபோன் 13 வடிவமைப்பை போன்றே இருந்தது வாடிக்கையாளர்களை ஏமாற்றமடைய செய்தது. ஆனால், அதில் இடம்பெற்ற ஒரு அம்சம் பலரையும் கவர்ந்து இருக்கிறது.

 ஐபோன் தீவு

ஐபோன் தீவு

அது தான் டைனமிக் ஐலாண்ட் என்ற வசதி. இது ஐபோன் 14 ப்ரோ, மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் போன்களில் மட்டுமே இடம்பெற்று உள்ளது. ஆண்டிராய்டு போன்களில் 4 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்ட பஞ்ச் ஹோல் டிஸ்பிளேவைதான் பெயர் மாற்றி டைனமிக் ஐலாண்ட் என்று அழைக்கிறது ஆப்பிள் நிறுவனம். ஆனால், அது பழைய அம்சம் என்று தெரியாத அளவுக்கு சில கவர்ச்சிகரமான வசதிகளை ஆப்பிள் நிறுவனம் சேர்த்து இருக்கிறது.

வசதிகள்

வசதிகள்

அதாவது டிஸ்பிளேவுக்கு நடுவில் இருக்கும் கேமரா மற்றும் சென்சார்களுக்காக இடம்பெற்றுள்ள பஞ்ச் ஹோல் கருப்பு நிறத்தில் விரிவடைந்து அதில், செல்போன் அழைப்புகள், நோட்டிபிகேசன்கள், மியூசிக் பிளேயர் போன்றவை வரும். ஒரு பெரிய டிஸ்பிளேவுக்குள் சிறிதாக தனி டிஸ்பிளேவாக அது செயல்படுவதால் அதற்கு டைனமிக் ஐலாண்ட் என்று பெயரிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

விலை

விலை

ஆனால் இந்த டைனமிக் வசதியை கொண்ட ஐபோன் 14 ப்ரோவின் இந்திய மதிப்பு ரூ.1.30 லட்சம். ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் இந்திய மதிப்பு ரூ.1.40 லட்சம் என்று சொல்கிறார்கள். இந்த வசதி இல்லாத ஐபோன் 14 விலை ரூ.80,000 என்றும் ஐபோன் 14 பிளஸ் விலை ரூ.90,000 என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்திய மார்க்கெட்டில் இது விற்பனைக்கு வரும்போது வரியோடு சேர்த்து இதன் விலை மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.

ஆண்டிராய்டு செயலி

ஆண்டிராய்டு செயலி

ஐபோனில் வரும் இந்த டைனமிக் தீவு தொழில்நுட்பத்தை ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்த அதன் ரசிகர்கள், வெளிநாட்டுக்கு சென்றெல்லாம் பணத்தை வாரி இரைத்து புதிய போனை வாங்கி வந்துள்ளனர். ஆனால், ஆப்பிளின் இந்த பிளானை தகர்க்கும் வகையில் ஆண்டிராய்டு செயலி ஒன்று தயாரிக்கப்பட்டு உள்ளது. டைனமிக் ஐலாண்ட் என தயாரிக்கப்பட்டுள்ள செயலியை செண்டர் நாட்ச் எனப்படும் நடுவில் செல்பி கேமரா இருக்கும் ஆண்டிராய்டு மொபைல்களில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தினால் அப்படியே ஆப்பிள் புதிய மாடல் போன்றே மாறிவிடும்.

English summary
New application is designed for Android phones to use the technology called Dynamic Island featured in the recently released Apple iPhone 14 model mobile.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X