ரூல்ஸ் மாறியதா சொத்து பத்திர நகலில்? ஆவண எழுத்தருக்கு தமிழக பதிவுத்துறை ஆர்டர்.. ஸ்டார் 2.0 அப்டேட்
சென்னை: சொத்து மோசடிகளை தடுக்க, தமிழக பதிவுத்துறை முக்கிய அதிரடி ஒன்றை கையில் எடுத்துள்ளது.. ஒரு சொத்தின் வில்லங்க சான்றிதழ் நகலை வேறு யாராவது பெற்றால், அதுகுறித்து உடனடியாகச் சொத்து உரிமையாளருக்கு மெசேஜ் அனுப்ப பதிவுத்துறை முடிவு செய்துள்ளது.. இதற்காக மேலும் ஒரு அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அது என்ன?
சொத்துக்களை பத்திரம் செய்வது அத்தியாவசியமான விஷயமாகும்.. சொத்து விற்பனை, தானம் அல்லது பரிமாற்றம் போன்றவற்றை செய்யும்போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வது சட்டப்பூர்வமான முறையாகும்..

காரணம், ஒரு சொத்தின் உரிமையை பாதுகாக்கவும், எதிர்கால சிக்கல்களை தவிர்க்கவும் இந்த நடைமுறை மிகவும் தேவைப்படுகிறது..
சொத்துக்களை பதிவு செய்வது ஏன்
இதன் மூலம், சொத்துரிமை மாற்றம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, அரசு பதிவேட்டிலும் நிரந்தரமாகப் பதிவு செய்யப்படுகிறது... இந்த பதிவுதான், சொத்தின் சட்டபூர்வமான உரிமையாளர் நீங்கள்தான் என்பதற்கான அடிப்படை சான்றாகும்.
இப்படி சொத்துக்களை பத்திரம் செய்வதால், உங்களிடமிருந்து இன்னொருத்தருக்கு அந்த சொத்தை விற்கவோ, அடமானம் வைக்கவோ முடியாது.. பிற்காலத்தில் வேறு யாராவது உரிமை உங்கள் சொத்து என்று உரிமை கோரினாலும், பதிவு செய்யப்பட்ட பத்திரம் உங்களிடம் இருக்கும்போது, ஈஸியாக உரிமையை நீதிமன்றத்தில் நிரூபிக்கலாம்.. எனவே, பதிவு செய்யப்படாத ஆவணங்களுக்கு இப்படியான சட்டபூர்வமான மதிப்பு ரொம்பவே குறைவு.
இப்படி பதிவு செய்வதால், ஒரு சொத்தை வாங்க முற்படும்போது, அதன்மீது ஏதாவது கடன்கள் உள்ளனவா? என்பதையும் சரிபார்த்து கொள்ளலாம்.. பத்திரப்பதிவுக்கு முத்திரைத் தீர்வையும், பதிவுக்கட்டணமும் செலுத்தப்படுவதால், நம்முடைய அரசுக்கும் வருவாய் கிடைக்கிறது..
ஆவணங்கள், பத்திரப்பதிவு
எனவே ஒரு சொத்து வாங்குவது முக்கியமில்லை, அந்த சொத்தை சட்டப்படியும் பதிவுசெய்ய வேண்டியது அவசியமாக உள்ளது.
அதனால்தான், சொத்து பதிவை மிகவும் எளிமையாகவும், வேகமாகவும், வெளிப்படையாகவும் செய்வதற்கு ஸ்டார் 2.0 என்ற சாப்ட்வேர் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது..
இதனால் ஆவண பதிவுக்கு முன்பே, வரைவு ஆவணம், தேவையான ஆதாரங்களை ஆன்லைன் மூலமே அனுப்பி சார் பதிவாளரிடம் சரிபார்த்து கொள்ளலாம். இதனால், ஆவணத்தில் உள்ள பிழைகளை கண்டுபிடித்து, பதிவுக்கு திருப்பி அனுப்பப்படுவதை தவிர்க்க முடியும்..
ஸ்டார் 2.0 சாப்ட்வேர் பலன்
மேலும், ஆள்மாறாட்ட மோசடிகளையும் தடுக்கலாம்.. ஏனென்றால் ஸ்டார் 2.0 சாப்ட்வேர் மூலம், விற்பவரின் கைரேகை ஒப்பிட்டு சரிபார்க்கப்படுகிறது.. ஆவணங்களை அனைத்தும், முதல்கட்ட ஆய்வுக்கு பிறகு பத்திரங்கள் பதிவுக்கு நேரம் ஒதுக்கி, 'டோக்கன்' வழங்கப்படும்.
பெரும்பாலான மக்கள், ஆவண எழுத்தர்கள் வாயிலாகவே தகவல்கள் பதிவிடும் பணிகளை மேற்கொள்கிறார்கள்.. ஸ்டார் 2.0 சாப்ட்வேரில் தேவையான தரவுகளை உள்ளீடு செய்து, ஆவணத்தின் வரைவை சமர்ப்பது ஆவண எழுத்தர்கள்தான்..
செல்போன் நம்பர் கட்டாயம்
ஆனால், சொத்து வாங்கும் நபர்களின் செல்போன் நம்பருக்கு பதிலாக, சில ஆவண எழுத்தர், வழக்கறிஞரின் மொபைல் போன் எண்களை பதிவு செய்கிறார்களாம்.. இதன்காரணமாக, அந்த குறிப்பிட்ட பத்திரம் தொடர்பாக, சார் - பதிவாளர்கள், உரிய நபருக்கு தகவல்கள் தெரிவிக்க முடியாமல் போகிறது. அத்துடன், அந்த சொத்து தொடர்பான விபரங்களும் உரிய நபர்களுக்கு கிடைக்காமல் போகும் நிலைமை ஏற்படுகிறது.
எனவேதான், சொத்துக்கள் தொடர்பான வில்லங்க சான்றிதழ், நகல் பிரதியை வெளியார் பெற்றால், அதுகுறித்து உரிமையாளருக்கு தெரிவிக்க, பதிவுத்துறை தற்போது முடிவு செய்துள்ளதாம்..
புதிய கட்டுப்பாடுகள்
அதன்படி, உரிமையாளர்களின் செல்போன் எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. இனிமேல் ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்களின் செல்போன் எண்களை குறிப்பிட்டால், அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிவுத்துறை எச்சரித்துள்ளது.
ஸ்டார் 2.0 சாப்ட்வேரில் பத்திரம் குறித்த தகவல்களை பதிவிடும் பகுதியில், புதிய கட்டுப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது. ..
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications