Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

7 கடல்கள்.. 7 மலைகளை தாண்டி.. "தனித்து" விடப்பட்ட எடப்பாடி.. பாஜக அனுப்பிய ரெட் சிக்னல்.. சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 7 கடல்கள்.. 7 மலைகளை தாண்டி தனித்து விடப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி என்றுதான் சொல்ல வேண்டும். ஆம் தமிழ்நாடு அரசியலில் அவருக்கு உட்கட்சி நிர்வாகிகள் சிலரை தவிர வெளியில் இருந்து பெரிதாக ஆதரவு எதுவும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    OPS EPSஅ சேர்த்துக்கணுமா? வேண்டாமா? ADMK தொண்டன் குரல்!

    கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்றது. ஓ பன்னீர்செல்வம் இந்த பொதுக்குழுவை ஏற்றுக்கொள்ளாத நிலையில் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தார். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று.. வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிமன்ற ஜெயசந்திரன் வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

    தீர்ப்பில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது ஜூலை 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும். அந்த பொதுக்குழுவில் எந்த பதவியும் உருவாக்கப்படவில்லை, நீக்கப்படவில்லை. அது தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுக்குழு

    பொதுக்குழு

    அதிமுக பொதுக்குழு வழக்கில் இப்படி தனக்கு எதிராக தீர்ப்பு வரும் என்பதை எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே உணர்ந்து இருந்தார் என்றே கூறுகிறார்கள். இதன் காரணமாகவே அவர் டெல்லியின் உதவியை நாடினார் என்றும் கூறப்படுகிறது. இந்த வழக்கிற்கு முன்பாக டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு பிரதமர் மோடியை சந்தித்தார். ஆனால் அவரை தனியாக சந்தித்து பேச முடியவில்லை. தனியாக சந்திக்க நேரம் கேட்டும் கிடைக்கவில்லை.

    டெல்லி பயணம்

    டெல்லி பயணம்

    அப்போதே எடப்பாடியின் டெல்லி பயணம் தோல்வியில் முடிந்ததாக கூறப்பட்டது. அதாவது எடப்பாடி பழனிசாமி எதை எதிர்பார்த்து டெல்லிக்கு சென்றாரோ அது அவருக்கு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில்தான் மீண்டும் பிரதமர் மோடி சென்னை வந்த போது அவரை சந்திக்க எடப்பாடி முயன்றார் . ஆனால் அவருக்கு கைகுலுக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. ஓ பன்னீர்செல்வத்திற்கு தனியாக கிடைத்த 5 நிமிடம் கூட எடப்பாடிக்கு கிடைக்கவில்லை.

    உதவவில்லை

    உதவவில்லை

    அப்போதே எடப்பாடிக்கு உதவி செய்ய பாஜக முன் வரவில்லை என்பது உறுதியானது. பாஜக தலைவர்கள் யாரும் எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளர் ஆன போது அவரை வாழ்த்தவில்லை. அப்போதே பாஜக இந்த விஷயத்தில் எடப்பாடிக்கு எதிராக நிற்கிறது போல என்ற விவாதம் எழுந்தது. டெல்லியின் ஹெல்ப் கிடைக்காத நிலையில்தான் தற்போது வழக்கிலும் எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைந்துள்ளார். இதில் இன்று எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்வார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மீண்டும் கேட்டாலும் வாய்ப்பு இல்லை

    மீண்டும் கேட்டாலும் வாய்ப்பு இல்லை

    இது போக இந்த மாத கடைசியில் கோவை வரும் அமித் ஷாவை சந்திக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதிமுக ஒற்றை தலைமை குறித்து பேச அமித் ஷாவை அவர் சந்திக்க முயல்வார் என்கிறார்கள். ஆனால் இதுவரை அதற்கு டைம் ஒதுக்கப்படவில்லை என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் எடப்பாடி பாஜக தரப்பிடம் உதவி கேட்டாலும் அவர் கிரீன் சிக்னல் கிடைக்க வாய்ப்பே இல்லை. இந்த முறையும் ரெட் சிக்னல்தான் கிடைக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

     பாஜக ஏன் உதவவில்லை

    பாஜக ஏன் உதவவில்லை

    எடப்பாடி ஒற்றை தலைமைக்கு வருவதை பாஜக விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. அவர் ஒற்றை தலைமைக்கு வந்தால் கட்சி ஒரு தலைமைக்கு கீழ் வந்துவிடும். இது அதிமுகவை வலுப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இரட்டை தலைமை, மூன்று தலைமை என்று அதிமுக மோதிக்கொண்டு இருந்தால், அது பாஜகவிற்கு மறைமுகமாக உதவும். பாஜக எதிர்க்கட்சியாக தன்னை முன்னிறுத்த உதவியாக இருக்கும். அதிமுக ஒரு தலைமைக்கு கீழ் செல்வது பாஜகவிற்கு பலன் அளிக்காது.

    பாஜக திட்டம் என்ன

    பாஜக திட்டம் என்ன

    இதன் காரணமாக அதிமுகவில் எடப்பாடியின் எழுச்சிக்கு பாஜக எந்த வகையில் உதவவில்லை. ஓபிஎஸ் பக்கம் பாஜக கொஞ்சம் சாய்ந்து இருக்க இதுவே காரணம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். சட்ட ரீதியான போராட்டங்களிலும் இதன் காரணமாகவே எடப்பாடி சறுக்கி வருகிறார் என்கிறார்கள். எடப்பாடிக்கு நெருக்கமானவர்களிடம் சமீபத்தில் வருமான வரித்துறை ரெய்டு செய்ததே.. பாஜக - எடப்பாடி இடையே உறவு சரியில்லை என்பது உறுதிப்படுத்துகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

    தனித்துவிடப்பட்ட எடப்பாடி?

    தனித்துவிடப்பட்ட எடப்பாடி?

    எடப்பாடிக்கு ஆளும் திமுக சப்போர்ட் இல்லை. ஆளுநர் சப்போர்ட்டும் எடப்பாடிக்கு இருப்பதாக தெரியவில்லை. இன்னொரு பக்கம் பாஜகவின் டெல்லி சப்போர்ட்டும் அவருக்கு இருப்பதாக தெரியவில்லை. கட்சிக்கு உள்ளே என்னதான் எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலும்.. கடலுக்கு நடுவே தனித்துவிடப்பட்ட மன்னன் போல எடப்பாடி "அவுட்சைட்" சப்போர்ட் இல்லாமல் தவித்து வருகிறார் எடப்பாடி என்றே அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+