இன்னும் 12 நாட்கள்.. ஓபிஎஸ் கேட்ட 2 "அப்பாயிண்ட்மெண்ட்".. டெல்லி பின்னும் வலை.. சிக்க போவது யார்?
சென்னை: அதிமுகவில் கடுமையான மோதல் நிலவி வரும் நிலையில் 2 முக்கியமான தலைகளை நேரில் சந்திக்க ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஜூலை 28ம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ள சந்திப்புதான் அதிக கவனத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் மிகப்பெரிய இடைவெளிக்கு பின் மீண்டும் பொதுச்செயலாளர் சீட் நிரம்பி உள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகி இருக்கிறார். இந்த பதவியில் எடப்பாடி பழனிசாமி நிரந்தரமாக அமரும் வகையில்.. பொதுச்செயலாளர் தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடக்க உள்ளது.
இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டு உள்ளார். அதோடு அவரது ஆதரவாளர்களும் மொத்தமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

அதிமுக
அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் ஆதரவை இழக்க முக்கிய காரணமே ஓ பன்னீர்செல்வத்திற்கு போதிய முக்குலத்தோர் சொந்தங்களின் ஆதரவு இல்லாததுதான். எடப்பாடி - வேலுமணி ஆகியோர் பக்கம் முழுக்க முழுக்க கொங்கு சாதி பிரிவினர் ஆதரவாக நின்றனர். சிவி சண்முகத்திற்கும் அதேபோல் வன்னியர் - படையாச்சி பிரிவினர் ஆதரவாக நின்றனர். ஆனால் ஓ பன்னீர்செல்வதற்கு அவரின் முக்குலத்தோர் சொந்தங்களே பெரிதாக ஆதரவு தரவில்லை.

ஆர்பி உதயகுமார்
பலர் ஆர்பி உதயகுமார் பக்கம் சென்றனர். சிலர் இன்னும் சசிகலா பக்கம் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் தென் மண்டல பயணத்தை நடத்தி அதன் மூலம் ஆதரவை திரட்ட ஓ பன்னீர்செல்வம் நினைத்தார். ஆனால் அதுவும் பாதியில் நின்று போனது. இதனால் தேனியிலேயே கூட ஓ பன்னீர்செல்வத்திற்கு பெரிதாக ஆதரவு கிடைக்கவில்லை. இதுதான் அவர் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை இழக்க முக்கிய காரணமாக அமைந்தது.

சசிகலா
இனத்தின் நிலையில்தான் சசிகலாவை சந்திக்கும் திட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் இருப்பதாக கூறப்படுகிறது. சசிகலாவை நேரடியாக சந்தித்தால் அது சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் மறைமுகமாக சந்திக்க ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சசிகலாவும் முன்பு புரட்சி பயணத்தை முடித்துவிட்டு, ஓ பன்னீர்செல்வத்தை சந்திப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

திவாகரன்
இந்த நிலையில்தான் தற்போது சசிகலா தன்னை விட்டு பிரிந்து போன சொந்தங்கள், ஜாதி ரீதியான உறவுகள், நிர்வாகிகளை மீண்டும் சந்தித்து வருகிறார். சமீபத்தில் கூட திவாகரன் - சசிகலா இருவரும் மீண்டும் ராசியானார்கள். அதேபோல்தான் சசிகலா ஓ பன்னீர்செல்வத்தையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முக்குலத்தோர் ஆதரவை திரட்ட இவர்கள் முயற்சி செய்யலாம் என்று கூறப்படுகிறது.

சென்னை மோடி
இது போக சென்னை வரும் பிரதமர் மோடியை வரும் 28ம் தேதி சந்திக்க ஓ பன்னீர்செல்வம் நேரம் கேட்டு இருக்கிறாராம். எம்பி ஓ பி ரவீந்திரநாத் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். அப்படி இருக்கும் போது ஓபிஆர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதனால் மோடியிடம் இதை பற்றி பேச ஓ பன்னீர்செல்வம் முடிவு செய்து இருக்கிறாராம். இதில் டெல்லி யார் பக்கம் நிற்கும், யாருக்கு வலை விரிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் ஆணையம்
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இனி எடுக்கும் முடிவுதான் இறுதியானது. அதிமுக யாருக்கு சொந்தம்.. பொதுக்குழு நடந்தது சரியா, தவறா என்பதை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். இதற்காக ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் ஓ பன்னீர்செல்வமும் மனு கொடுத்துவிட்டார். அதேபோல் சிவி சண்முகமும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துவிட்டார்.
Recommended Video

யாருக்கு ஆதரவு?
இதில் தேர்தல் ஆணையம் யாருக்கு ஆதரவாக இருக்கும்.. யாருக்கு எதிராக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக இது போன்ற சமயங்களில் நம்பர் அடிப்படையில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்ற அடிப்படையில்தான் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். அதே சமயம் விதிகள் மீறப்பட்டு இருந்தாலும் தேர்தல் ஆணையம் அதை கேள்வி கேட்கும். எனவே தேர்தல் ஆணையம் யார் பக்கம் நிற்க போகிறது என்ற கேள்வி அதிமுக வட்டாரத்தில் தீவிரமாக எழுந்துள்ளது.
-
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications