"உடலுறவின் போது" திடீர் மரணங்கள்.. ஆண்களே இந்த அறிகுறி இருந்தால் உடனே டாக்டரிடம் போங்க! பகீர் ஆய்வு
சென்னை: உடலுறவின் போது பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உண்மையில் அப்படி நடக்க வாய்ப்பு உள்ளதா? யாருக்கு எல்லாம் இந்த ஆபத்து உள்ளது? வாங்கப் பார்க்கலாம்.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 67 வயதான தொழிலதிபர் ஒருவர் தனது வீட்டில் பணிபுரியும் 35 வயதான பெண் ஒருவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து உள்ளார். இவர்கள் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர்.
அப்படித்தான் கடந்த நவ. 16ஆம் தேதி அந்த பெண்ணின் வீட்டிற்கு அந்த தொழிலதிபர் சென்ற நிலையில், இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த நபர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

உடலுறவில் மரணம்
இதையடுத்து அந்த பெண் தனது கணவரின் உதவியுடன் தொழிலதிபர் சடலத்தை அப்புறப்படுத்தியுள்ளார். கடந்த நவ. 16ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விசாரணை ஒரு பக்கம் இருக்க உண்மையில் உடலுறவு கொள்ளும் போது உயிரிழப்புகள் ஏற்படுமா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டு உள்ளது. உண்மையில் அப்படி உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவே சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

வாய்ப்பு உள்ளது
உடலுறவு காரணமாக ரத்த அழுத்தம் குறைவது, நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடைவது, சிறந்த தூக்கத்திற்கு உதவுவது என உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பல்வேறு பலன்கள் உள்ளது. உடலுறவு வைத்துக் கொள்ளும் போது ஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோன் வெளியிடுகிறது. இது தான் காதல் ஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது. இது இருவருக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்துவதில் முக்கியமானது. ஆனால் உடலுறவுக்குச் சின்ன இருண்ட பக்கமும் உள்ளது..

ஆபத்து உள்ளதா
அதாவது சில நேரங்களில் உடலுறவின் போது அல்லது உடலுறவுக்குப் பிறகு உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. நல்வாய்ப்பாக இதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. உடலுறவு காரணமாக இப்படி திடீர் உயிரிழப்புகள் ஏற்பட 0.6% மட்டுமே வாய்ப்புகள் உள்ளன. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலான நேரங்களில் உடலுறவு கொள்ளும் போது உடலில் ஏற்படும் அழுத்தம் காரணமாகவே மரணங்கள் ஏற்படுகிறது. சில நேரங்களில் பாலியல் நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகள், அல்லது கோகைன் போன்ற போதைப்பொருட்களாலும் கூட இதுபோன்ற மரணங்கள் ஏற்படும்.

வயதானவர்கள்
உடலுறவின் போது என்று இல்லாமல் பொதுவாகவே வயதானவர்களுக்கு திடீர் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம். இது தொடர்பாக ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 30 ஆண்டுகளில் 32,000 மராடைப்பால் உயிரிழந்த நிலையில், அவர்களில் 0.2% பேர் உடலுறவு கொள்ளும் போது உயிரிழந்துள்ளனர். பொதுவாக ஆண்களுக்குத் தான் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுகிறது. சராசரியாக 59 வயதானவர்களுக்கு இதுபோன்ற மரணங்கள் ஏற்படுவதாகவும் பெரும்பாலும் மாரடைப்பே இதற்குக் காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வயது குறைந்தவர்கள்
அமெரிக்கா, பிரான்ஸ், தென் கொரியா நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்விலும் இதே முடிவுகள் தான் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே லண்டனில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் ஆய்வில் வேறு பகீர் முடிவுகள் தெரிய வந்துள்ளது. அதாவது இது வயதான ஆண்களுக்கு மட்டுமின்றி, வயது குறைந்த ஆண்களுக்கும் ஏற்படும் அபாயம் உள்ளதாம். பிரிட்டனில் உடலுறவு காரணமாக உயிரிழக்கும் ஆண்களின் சராசரி வயது 38ஆக உள்ளது. அதேபோல பெண்களுக்கும் கூட இதுபோன்ற உயிரிழப்புகள் நடந்துள்ளதாம். இதில் 0.2% பேர் உடலுறவுக்குப் பின், ஒரு மணி நேரத்திற்குள் உயிரிழந்துள்ளனர்.

என்ன காரணம்
இந்த மரணங்கள் வயதான ஆண்களில் காணப்படுவது போல் மாரடைப்பால் ஏற்படவில்லை. சுமார் 53% கேஸ்களில் இதயம் அசாதாரணமாகத் துடிப்பது, அதாவது அரித்மிக் டெத் சிண்ட்ரோம் என்பதால் மரணம் ஏற்பட்டு உள்ளது. Aortic dissection காரணமாக 12% மரணம் ஏற்பட்டு உள்ளது. இதயத்தின் பெரிய தமனியின் (artery) சுவர் வீங்கி வெடிக்கும் போது, உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. உடலில் ஏற்படும் வேறு சில ரசாயன மாற்றங்கள் காரணமாக மற்ற உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

டாக்டரிடம் ஆலோசனை தேவை
இந்த புதிய ஆய்வில் 50 வயதிற்குப்பட்டவர்கள் உடலுறவில் போது திடீரென உயிரிழக்க அரித்மிக் டெத் சிண்ட்ரோம் தான் முக்கிய காரணமாக உள்ளது. இதுபோன்ற பாதிப்புகள் உள்ள இளைஞர்கள் பாலியல் செயல்பாடு தொடர்பான ஆபத்து குறித்து தங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.. இருப்பினும், இந்த ஆய்வுகளில் உடலுறவின் போது ஏற்படும் உயிரிழப்புகள் ரொம்பவே குறைவு என்றே கூறப்பட்டு உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications