ஃபிரிட்ஜ் உங்கள் கரண்ட் பில்லை உயர்த்துதா? மின் கட்டணம் குறைய பிரிட்ஜில் இந்த சூப்பர் விஷயம் பாருங்க
சென்னை: மாதம் மாதம் கரண்ட் பில் அதிகமாக வருகிறதா? வீட்டில் இருக்கும் ஃபிரிட்ஜ்தான் அதற்குப் பெரிய காரணம் என்பதை பலருக்கு தெரியாது.. இந்த சில எளிய பழக்கங்களை மாற்றினால் மின்சாரக் கட்டணத்தில் நல்ல சேமிப்பு கிடைக்கும்.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
நவீன காலத்தில் பெரும்பாலான வீடுகளில் தவிர்க்க முடியாத மின்சார சாதனமாக குளிர்சாதனப் பெட்டி மாறிவிட்டது.. உணவுப் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க இது பெரிய உதவியாக இருந்தாலும், சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் மின்சாரக் கட்டணத்தை அதிகப்படுத்தும் காரணமாகவும் மாறிவிடுகிறது..

மின்சார கட்டணம்
ஆனால் சில எளிய முறைகளைப் பின்பற்றினால் ஃபிரிட்ஜ் பயன்படுத்தியும் மாதந்தோறும் மின்சாரச் செலவை கணிசமாகக் குறைக்க முடியும்..
முதலில் ஃபிரிட்ஜ் வைக்கும் இடம் மிகவும் முக்கியம்.. சூரிய ஒளி நேரடியாகப் படும் இடத்திலோ அல்லது சமையல் எரிவாயு அடுப்பிற்கு அருகிலோ இதனை வைக்கக் கூடாது..
வெப்பம் அதிகமாக இருக்கும் இடத்தில் ஃபிரிட்ஜ் இருந்தால் அதன் உட்புறத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க மோட்டார் நீண்ட நேரம் இயங்க வேண்டியிருக்கும்.. இதனால் தேவையற்ற மின்சாரம் செலவாகும்.. அதேபோல் சுவருக்கும் ஃபிரிட்ஜுக்கும் இடையில் குறைந்தது 6 அங்குல இடைவெளி இருக்க வேண்டும்.. அப்போதுதான் அதன் பின்புறத்தில் உருவாகும் வெப்பம் வெளியேறி காற்று சுழற்சி சீராக நடைபெறும்..
ஃபிரிட்ஜ் - கரண்ட் பில் சேமிப்பு
அதேபோல உணவு பொருட்களை உள்ளே வைக்கும் முறையிலும் கவனம் தேவை.. சூடாக இருக்கும் உணவுகளை அப்படியே ஃபிரிட்ஜில் வைப்பது பெரிய தவறு..
அந்த வெப்பத்தை குளிர்விக்க இயந்திரம் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.. எனவே உணவுகளை அறை வெப்பநிலைக்கு குளிர்ந்த பிறகே உள்ளே வைக்க வேண்டும்..
அதேபோல் பொருட்களை மிகவும் நெருக்கமாக அடுக்கிவைப்பதும் சரியல்ல.. ஃபிரிட்ஜ் உள்ளே காற்று சுழல இடம் இருக்க வேண்டும்.. அதே நேரத்தில் ஃபிரிட்ஜ் முழுவதும் காலியாக இருந்தாலும் சரியல்ல.. மிதமான அளவில் பொருட்கள் இருந்தால் குளிர்ச்சி நீண்ட நேரம் இருக்கும்.. ஏற்கனவே குளிர்ந்திருக்கும் பொருட்கள் உள்ளே வெப்பநிலையை நிலையாக வைத்திருக்க உதவும்.. ஆனால் காற்று செல்லும் வழியை அடைக்காமல் பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைக்க வேண்டும்..
தமிழ்நாடு மின்சார வாரியம்
கதவை அடிக்கடி திறப்பதும் நீண்ட நேரம் திறந்து வைத்திருப்பதும் மின்சாரத்தை அதிகமாக செலவழிக்க வைக்கும்.. ஒவ்வொரு முறை கதவைத் திறக்கும்போதும் உள்ளே இருக்கும் குளிர்ந்த காற்று வெளியேறி வெளிக்காற்று உள்ளே நுழைகிறது.. இதனால் மீண்டும் குளிர்ச்சி ஏற்படுத்த மோட்டார் கடுமையாக வேலை செய்ய வேண்டியிருக்கும்.. எனவே தேவையான பொருட்களை ஒரே முறையில் எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்..
அதேபோல் கதவின் விளிம்பில் இருக்கும் ரப்பர் கேஸ்கெட் சரியாக உள்ளதா என்பதையும் அடிக்கடி பார்க்க வேண்டும்.. அதில் தளர்வு அல்லது விரிசல் இருந்தால் குளிர்ச்சி வெளியேறி மின்சாரச் செலவு அதிகரிக்கும்..
பழைய மாடல் ஃபிரிட்ஜ்களில் ஐஸ் கட்டிகள் அதிகமாக படிவது வழக்கமான விஷயம்.. இப்படி ஐஸ் கட்டிகள் அதிகமாக சேர்ந்தால் குளிர்ச்சி சரியாக பரவாது.. இதனால் மிஷினில் கூடுதல் அழுத்தம் ஏற்படும்.. எனவே அடிக்கடி அவைகளை அகற்றுவது நல்லது..
பழைய மாடல் பிரிட்ஜ்
வெப்பநிலையையும் தேவையில்லாமல் மிகவும் குறைந்த அளவில் வைத்திருக்கக் கூடாது.. பொதுவாக மிதமான அளவிலான டெம்பரேச்சர் போதுமானது.. மேலும் புதிய ஃபிரிட்ஜ் வாங்கும் போது அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட மாடல்களைத் தேர்வு செய்தால் மின்சாரச் சேமிப்பு அதிகமாக கிடைக்கும்..
இன்றைய காலத்தில் மின்சாரக் கட்டணம் குடும்பச் செலவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.. ஆனால் ஃபிரிட்ஜ் பயன்படுத்தும் போது இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் மின்சாரத்தை மிச்சப்படுத்துவதுடன் குடும்பச் செலவையும் குறைக்க முடியும்..!!
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications