பழனிசாமி பற்றவைத்த தீ.. மயிலாடுதுறையில் சூர்யா படம் நிறுத்தம்! தியேட்டருக்கு விரைந்த போலீஸ்! பதற்றம்
நடிகர் சூர்யா மீது மயிலாடுதுறை பாமகவினர் போலீசில் புகார் தந்துள்ளனர்
சென்னை: நடிகர் சூர்யா மீது நடவடிக்கை வேண்டும் என்று கோரி பாமவினர் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.. இதனிடையே, சூர்யாவை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் பரிசு என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் அறிவித்ததையடுத்து, "WestandWithSuriya" என்ற ஹேஷ்டேக்கை சூர்யா ரசிகர்கள் டிரெண்டாக்கி ட்விட்டரை பரபரப்புக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
Recommended Video
சூர்யாவின் ஜெய்பீம் பட சர்ச்சை இன்னும் ஓயவில்லை.. படத்தின் ஒரு காட்சியில் இடம்பெற்ற காலண்டர் மூலம் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்திருப்பதாக சர்ச்சை வெடித்தது.
இதனையடுத்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், சூர்யாவுக்கு 9 கேள்விகள் எழுப்பி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்... இதற்கு சூர்யாவும் விளக்கம் தந்து பதில் அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

புகார்
ஆனாலும் இன்னும் விவகாரம் சுற்றி கொண்டே இருக்கிறது.. தொடர்ந்து ஜெய் பீம் படத்திற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்... இந்நிலையில்தான் "நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி நேற்றைய தினம் பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பியது.

தியேட்டர்
"ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய சூர்யாவை மயிலாடுதுறை பகுதியில் நடமாடவிட மாட்டோம்... இந்த பக்கம் எந்த தியேட்டரிலும் அவரது படத்தை திரையிட விடமாட்டோம்... இது தமிழ்நாட்டின் அனைத்து இடங்களில் நடைபெறும்... இனி சூர்யா, ஃபிளைட்டில் தமிழ்நாட்டினுள் சுற்ற வேண்டும்... சாலை வழியில் போக முடியாது என்பதை எச்சரிக்கையாக சொல்லி கொள்கிறோம்..

அறிவிப்பு
ஜாதிகலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் சூர்யாவை தாக்கும் இளைஞர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும்" என்று அதிரடியாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு பெரும் அதிர்வலையை நேற்றைய தினம் ஏற்படுத்தியிருந்தது.. இப்படி ஒரு தகவல் அறிந்ததுமே மயிலாடுதுறை போலீசார், தியேட்டருக்கு விரைந்து சென்று திரைப்பட காட்சியை நடத்த சொன்னார்கள்.. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து நாங்கள் படத்தை மாற்றிகொள்கிறோம் என்றுகூறி, காட்சிகளையே ரத்து செய்துவிட்டனர்.

குற்றவாளி
இதனிடையே, மயிலாடுதுறை மாவட்ட எஸ்பியிடம் சுகுணாசிங்கிடம் பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமையில் பாமவினர் ஜெய்பீம் தயாரிப்பாளர், இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுஅளித்தார்.. அந்த மனுவில் உள்ள சுருக்கம் இதுதான்: "படத்தில் ஒரு குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் தங்கள் குலத்தின் அடையாளமான அக்னிகுண்டத்தை காட்டியும், மறைந்த வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குரு பெயரை அந்த வில்லனுக்கு வைத்து அவரது புகழுக்கும் மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

ஜெய்பீம்
வன்னிய சமுதாய மக்கள் அனைத்து சமுதாய மக்களுடன் இணக்கமாக பழகிவரும் வேலையில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிற சமுதாயத்தினருக்கு எதிராக வன்னியர்கள் செயல்படுவதுபோல் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்துவதுபோல் படத்தை எடுத்துள்ளனர். எனவே ஜெய்பீம் பட தயாரிப்பாளர்களான சூர்யா, ஜோதிகா இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹேஷ்டேக்
நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்ற மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதை சூர்யாவின் ரசிகர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.. இதையடுத்து, "WestandWithSuriya" என்ற ஹேஷ்டேக் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.. சூர்யாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் ட்விட்டரை ஆக்கிரமித்து வருகிறார்கள்.. ஒருபக்கம் சூர்யா மீது போலீசில் புகார், மற்றொரு பக்கம் சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு, இதற்கு நடுவில் வைரலாகும் ஹேஷ்டேக் என பெரும் பரபரப்பு சூழ்ந்து வருகிறது.
-
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications