ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!
சென்னை: தவெக தலைவர் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படம் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு பிறகே வெளியாகும் என சொல்லப்படுகிறது.
Amazon Prime Video-க்கு ₹120 கோடிக்கு ஓடிடி உரிமை விற்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் படத்தின் தியேட்டர் ரிலீஸ் தொடர்ந்து தாமதமாவதால் (சென்சார் சான்றிதழ் பிரச்சினை காரணமாக) ஓடிடி தளம் பட உரிமையை ரத்து செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பு நிறுவனம் கலங்கி போயிருக்கிறது.

ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சினை காரணமாக இந்த படம் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. உடனே சென்சார் சான்று வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை தயாரிப்பு குழு நாடியது.
அப்போது தனி நீதிபதி ஆஷா, ஜனநாயகனுக்கு படத்திற்கு உடனே தணிக்கை சான்றிதழ் வழங்குமாறு உத்தரவிட்டார். இதை எதிர்த்து தணிக்கை வாரிய அதிகாரிகள் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கில் நீதிபதி ஆஷாவின் உதத்ரவை ரத்து செய்த நீதிமன்ற நீதிபதிகள் மீண்டும் தனி நீதிபதியிடம் அனுப்பினர்.
பிப்ரவரி 10ஆம் தேதி தயாரிப்பாளர்கள் வழக்கை வாபஸ் பெற்றனர். இதையடுத்து படத்தை தணிக்கை குழுவின் மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜனநாயகன் படம் கடந்த 9ஆம் தேதி மறு ஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த உறுப்பினரில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அன்று திரையிடுவது ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜனநாயகன் படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ 120 கோடி கொடுத்து ஓடிடி ரிலீஸுக்கு வாங்கியதாக சொல்லப்படுகிறது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய் கொண்டே இருப்பதால் ஓடிடி உரிமைத்தை ரத்து செய்ததாக சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே ரிலீஸ் தேதியை தெளிவுப்படுத்துங்கள் என தயாரிப்பு நிறுவனத்தை ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைம் நெருங்கியதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது படத்தின் உரிமத்தையே ரத்து செய்தது விஜய்க்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கரூர் கூட்ட நெரிசல் 41 பேர் பலி, ஜனநாயகன் பட ரிலீஸ் ஆகாதது, விவாகரத்து விவகாரம், திரிஷாவுடன் திருமணத்திற்கு சென்றதால் ஏற்பட்ட அவப்பெயர் உள்ளிட்டவைகளால் விஜய்க்கு தொடர்ந்து பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications