Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

U/A சான்றிதழ் ஜனநாயகன் படத்துக்கு வழங்க உத்தரவு.. முட்டுக்கட்டை நீங்கியது.. விஜய் ரசிகர்கள் குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய்யின் ‛ஜன நாயகன்' படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரொடக்சன்ஸ் சென்னையில் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி பி.டி. ஆஷா இன்று அதாவது ஜனவரி 9-ம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கினார்.. அதன்படி, படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. இதுவிஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

பொங்கல் பண்டிகையொட்டி, ஜனவரி 9ம் தேதி ‛ஜன நாயகன்' படம் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. டிக்கெட் ரிசர்வேஷன்கள் விறுவிறுப்பாக நடந்தாலும், சென்சார் சான்று இல்லாததால் ரிலீஸ் தற்காலிகமாக தள்ளப்பட்டது.

Jana Nayagan verdict Vijay Jana nayagan censor issue

ஜன நாயகன் தீர்ப்பு

தயாரிப்பு நிறுவனம் வழக்கில் வாதிடும்போது, படத்திற்கு ரூ.500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களை செய்தும், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சில காட்சிகள் உள்ளதால் சான்று வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

சென்சார் வாரியம் இதற்கு பதிலளிக்கும்போது, குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க மனுதாரர் கோர முடியாது. படம் பார்க்கப்பட்ட தணிக்கை குழுவின் உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் மறுதணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக அளித்த புகாரில் சென்சார் சான்று வழங்கப்படவில்லை.

சென்சார் சான்றிதழ்

ராணுவ படைகளின் இலச்சினை பயன்படுத்தியுள்ளதால் அந்த துறை நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. 14 காட்சிகளை நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், படம் ரிலீஸ் செய்ய முடியாது என்றும் தெரிவித்தனர்.

இதை கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக கூறினார்.. அந்தவகையில் இன்று காலை 10.30 மணிக்கு ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்று வழங்க கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்க உள்ளது. இதனால் இந்த வழக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, படம் இன்று படம் வெளியாகிவிருந்த நிலையில், திட்டமிட்டபடி படம் வெளியாகாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.. இதையடுத்து, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் காட்சிகளை ரத்து செய்தனர். இதுபோக ஏற்கனவே ஆன்லைனில் புக்கிங் செய்தவர்களுக்கு பணத்தை திரும்ப அனுப்பும் பணிகளில் ஈடுபட்டனர்..

ஆர்வத்தில் ரசிகர்கள்

அதுமட்டுமல்ல, ஜனநாயகன் விவகாரம் அரசியலிலும் எதிரொலித்துள்ளது... காங்கிரஸ் கட்சியினர் கிரிஷ் சோடங்கர், எம்.பி. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஜய் வசந்த் உட்பட பலர் இந்த பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என்று வலியுறுத்தி வந்தனர்.

சோஷியல் விஜய்க்கு ஆதரவாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ரசிகர்கள் மீதான பதற்றம் குறையவில்லை. படம் எப்போது வெளியாகும் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் காத்துள்ளனர்,

ஜனவரி 9-ம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கினார்.. அதன்படி, படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. இதுவிஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

ஜனநாயகன் படத்துக்கு U/A சான்று வழங்குமாறு மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனநாயகன் படத்தை மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மறுஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், ஜனநாயகன் படத்திற்கு U/A சான்று வழங்குமாறு மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கும் உத்தரவிட்டது.

உடனே மேல்முறையீடு

ஜனநாயகன் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டதுமே, தணிக்கை வாரியம் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது.. அப்பீல் மனுவை தாக்கல் செய்ய தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டதையடுத்து, ஜனநாயகன் படத்துக்கு சான்று வழங்கும் உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் இந்த மேல்முறையீட்டை தலைமை நீதிபதி அமர்வில் தாக்கல் செய்துள்ளது..

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டு மனுவை வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்கவும் தணிக்கை வாரியம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு நீதிபதி மறுத்துவிட்டார்.. மனுவை மட்டும் தாக்கல் செய்யுங்கள், எப்போது விசாரிப்பது என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+