இருந்ததும் போச்சே! தவெக கூட்டணியில் இருந்து முஸ்லீம் கட்சி கிரேட் எஸ்கேப்! அதிர்ச்சியில் விஜய்
சென்னை: தவெக கூட்டணியில் இருந்து விலகிய ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி தற்போது திமுக கூட்டணியை ஆதரிப்பதாகவும் அந்த கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட போவதாகவும் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி, ஜனநாயகன் சென்சார் பிரச்சனை, சங்கீதா விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியது, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ சம்மன் என விஜய்யை பிரச்சனைகள் வரிசையாக கட்டியுள்ள நிலையில் இந்த கட்சியும் தற்போது விலகிக் கொண்டது விஜய் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி கடந்த 8 மாதங்களாக தவெகவுடன் பயணித்து வந்தது. இந்த நிலையில் தவெகவின் செயல்பாடுகள் சரியில்லை என கூறி, அக்கட்சிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அக்கட்சியின் தலைவர் எம்.எஃப் தமீம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பதாக தெரிவித்த தமீம், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கெனவே திமுக கூட்டணியில் 21 கட்சிகள் உள்ள நிலையில் தற்போது 22 ஆவது கட்சியாக ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சியும் இணைந்துள்ளது.
திமுக கூட்டணியில் 22 கட்சிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
1. திமுக
2. காங்கிரஸ்
3. மதிமுக
4. இந்திய கம்யூனிஸ்ட்
5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
6. விடுதலை சிறுத்தைகள்
7. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
8. தேமுதிக
9. மனிதநேய மக்கள் கட்சி
10. மக்கள் நீதி மய்யம்
11. தமிழக வாழ்வுரிமை கட்சி
12. மக்கள் விடுதலை கட்சி
13. ஆதித்தமிழர் பேரவை
14. அகில இந்திய பார்வர்டு பிளாக்
15. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
16. எஸ்டிபிஐ
17. மனிதநேய ஜனநாயகக் கட்சி
18. முக்குலத்தோர் புலிப்படை
19. கொங்கு இளைஞர் பேரவை
20. திராவிட வெற்றிக் கழகம்
21. புதிய திராவிட கழகம்
22. ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி
தவெக கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் என கதவை திறந்து வைத்து காத்திருந்த நிலையில் காங்கிரஸோ திமுக கூட்டணிக்கே சென்றது. திமுகவிடம் அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு உள்ளிட்டவைகளை காங்கிரஸ் கேட்ட நிலையில் அந்த ஆஃபர்களை தருவதாக தவெக கூறியும் பனையூர் பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை.
ஏற்கெனவே தவெக கூட்டணியில் இருந்த தமிழ்நாடு முஸ்லீம் லீக் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இருந்த ஒரு கட்சியும் எஸ்கேப் ஆகிவிட்டது.
-
விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்.. ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.. செங்கோட்டையன் விளக்கம் -
என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்! -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
அத்தனை வலிகளையும் தாங்கி கொண்டிருக்கிறேன்.. தவெக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் விஜய் உருக்கம் -
ஸ்டாலினுக்கு எதிராக கொளத்தூரில் விஜய் டிக் அடித்த அந்த பழைய முகம்! திமுக வளர்த்தெடுத்த புள்ளி! யார்? -
விஜயை வீழ்த்தினால் அமைச்சர் பதவி கன்பார்ம்.. ஜெயிண்ட் கில்லர் "இனிகோ".. ஸ்டாலின் திருச்சி சர்ப்ரைஸ் -
மார்ச் 30ல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட.. 3 தொகுதிகளுக்கு அனுமதி -
திமுகனாலும்.. தவெகனாலும்.. சீட்டுகளை அள்ளும் மாஜி அதிமுக தலைகள்! விஜய் லிஸ்ட்டில் யார் யார் பாருங்க! -
என் மகிழ்ச்சி இதுதான்! இறுதியாக ஒரே ஊரில் சேர்ந்து விட்டோம்! திரிஷாவின் பீலிங் ஆன போஸ்ட்! இதுதான் பதிலடியா? -
திருச்சி கிழக்கில் தேர்தல் அலுவலகம் கூட அமைக்காத தவெக.. 25 நாட்களில் விஜய்யால் மாற்றிவிட முடியுமா?












Click it and Unblock the Notifications