சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முகிலன் கடத்தப்பட்டிருந்தாரா.. ஜெயக்குமாருக்கு நிருபர்கள் கேள்விக் கணை.. பதில் இதுதான்

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் முகிலன் அனுமதி

    சென்னை: சமூக செயற்பாட்டாளர் முகிலன் விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணை முடிவில் உண்மை தெரியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

    சென்னை கிண்டியில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

    ராஜ்யசபாவிற்கு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவருக்கு எம்பி பதவி கொடுத்ததற்காக திமுக உள்நோக்கம் கற்பிக்கிறது. அவர்களும் இஸ்லாமிய சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் கொடுக்க மாட்டார்கள், அதிமுக கொடுப்பதையும் தடுக்க நினைக்கிறார்கள். திமுகவை போல நாங்கள் வாரிசுகளுக்காக, மன்னராட்சி நடத்தவில்லை. இங்கே உழைப்பவர்கள் உயர்வார்கள், என்றார்.

    Jayakumar says CBCID is inquiring over social activist Mugilan

    முகிலன் கண்டுபிடிக்கப்பட்டதில், தமிழக காவல்துறை தாமதமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுகிறதே, என்ற நிருபர்களின் கேள்விக்கு, நீங்கள் சொல்வது தவறு. என்ன நடந்தாலும் அதிமுக ஆட்சிதான் பொறுப்பு என்று குற்றம் சாட்டுவது வழக்கமாகிவிட்டது. அந்த அடிப்படையில்தான் முகிலன் காணாமல் போன விவகாரத்தில் ஆட்சி மீது குற்றம் சாட்டுகிறார்கள்.

    சமூக போராளி முகிலன் பிடிப்பட்டது எப்படி? திருப்பதி ரயில்வே காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேட்டி சமூக போராளி முகிலன் பிடிப்பட்டது எப்படி? திருப்பதி ரயில்வே காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேட்டி

    இந்த விவகாரத்தில் நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. சிபிசிஐடி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று நீதிமன்றமும் தெரிவித்திருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முகிலன் கடத்தப்பட்டாரா என்ற நிருபர்களின் கேள்விக்கு, அது விசாரணை முடிவில்தான் தெரியவரும் என்றும் ஜெயக்குமார் பதிலளித்தார்.

    English summary
    Minister Jayakumar says CBCID is inquiring over social activist Mugilan case, so he can't make any comment on that.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X