ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய்
சென்னை: தமிழக அரசியல் களம் தகித்து கொண்டிருக்கிறது.. இந்த பரபரப்பில், மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி தமிழக களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.. நாளை அல்லது நாளை மறுநாள் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.. இப்படிப்பட்ட சூழலில் திரைக்கு பின்னால் நடக்கும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் அனல் பறக்கின்றன.. அதுகுறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
நடிகர் விஜய்யின் தவெகவை, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக மேலிடம் அதீத ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.. இதுதான் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியலில் ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது..

தவெகவிற்கு இருக்கும் இளையோர் பலத்தையும், விஜய்யின் மக்கள் செல்வாக்கையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் டெல்லியின் கணக்காக இருக்கிறது.. இதற்காக "ஆட்சியில் பங்கு" என்ற மெகா ஆஃபரை பாஜக முன்வைத்துள்ள நிலையில், விஜய்யின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது தவெகவின் முடிவில் ஒரு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளதாம்.
"பாஜகவின் B டீம்"
ஜான் ஆரோக்கியசாமியின் வாதம் மிகவும் தர்க்கரீதியானது மற்றும் அரசியல் முதிர்ச்சி கொண்டது.. ஏற்கனவே தவெகவையும் விஜய்யையும் திராவிடக் கட்சிகள் "பாஜகவின் B டீம்" என்று முத்திரை குத்தி விமர்சித்து வருகின்றன..
இந்நிலையில், இப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்தால், அந்த விமர்சனத்தை தவெகவே உறுதி செய்தது போல் ஆகிவிடும் என்று அவர் எச்சரிக்கிறாராம்.. இது வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல, கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கே ஒரு தடையாக அமையும் என்பது அவரது பார்வையாக இருக்கிறது.. பாஜகவுடன் கைகோர்க்கும் பட்சத்தில், தவெகவின் தனித்துவம் மற்றும் சுயம் பாதிக்கப்பட்டு, நாளடைவில் அக்கட்சி பாஜகவின் "எடுப்பார் கைப்பிள்ளை"யாக மாறிவிடும் ஆபத்து இருப்பதையும் ஜான் ஆரோக்கியசாமி சுட்டிக்காட்டுவதாக தெரிகிறது.
நெகட்டிவ் இம்பேக்ட்
உண்மையில், ஒரு புதிய அரசியல் கட்சிக்கு தேவையான மிக முக்கியமான விஷயம் அதன் தனித்துவமான அடையாளமாகும்.. அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது கூட அந்த அளவிற்கு ஒரு நெகட்டிவ் இம்பேக்ட்டை உருவாக்காது, காரணம், அது ஒரு பிராந்தியக் கட்சி..
ஆனால், தேசியக் கட்சியான பாஜகவுடன் இணையும்போது, தமிழகத்தின் உணர்வுகளுக்கு எதிராக கட்சி தலைமை முடிவெடுக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.. இது தவெகவின் அடிப்படை தொண்டர்களிடையே கண்டிப்பாக சலசலப்பையே ஏற்படுத்தும்..
விஜய்யை பொறுத்தவரை, கட்சியின் எதிர்காலத்திற்கு ஆட்சியில் பங்கு என்பது ஒரு பாதுகாப்பான விஷயமாகத் தெரிந்தாலும், ஜான் ஆரோக்கியசாமி போன்ற அனுபவம் மிக்க ஆலோசகர்கள் காட்டும் "லாங் டெர்ம்" விளைவுகளை புறக்கணிக்க முடியாது..
பாஜக ஆஃபரை ஏற்பாரா விஜய்
இப்போதைக்கு பந்து விஜய்யின் பக்கமே இருக்கிறது.. மாவட்ட செயலாளர்களின் விருப்பம் ஒருபுறம், அரசியல் ஆலோசகரின் எச்சரிக்கை மறுபுறம் என விஜய் ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறார்..
தமிழகத்தின் அரசியல் பல்ஸை நன்கு அறிந்த ஜான் ஆரோக்கியசாமியின் வார்த்தைகளுக்கு விஜய் முக்கியத்துவம் கொடுப்பாரா அல்லது பாஜகவின் அதிகாரப் பகிர்வு ஆஃபரை ஏற்றுக்கொள்வாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.. ஆனால் எதுவாக இருந்தாலும், தவெக எடுக்கும் இந்த முடிவு தமிழகத் தேர்தல் களத்தின் திசையை தீர்மானிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
நமது சிறப்பு நிபுணர்
-
விஜய் பற்றி.. டெல்லிக்கு பறந்த உளவுத்துறை ரிப்போர்ட்.. ஆட்டத்தை கலைத்து ஆடப்போகும் அமித் ஷா? -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
நீட் கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு.. ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? வெளியான ஷாக் தகவல்! -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா!












Click it and Unblock the Notifications