• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிஸ்கவரி பிளஸ் நித்யானந்தா ஆவணப்படம்! பேஸ்புக்கில் சப்போர்ட் பண்ணுங்க..! கைலாசாவிலிருந்து பறந்த தகவல்!

Google Oneindia Tamil News

சென்னை : டிஸ்கவரி பிளஸ் தளத்தில் தலைமறைவாக உள்ள சாமியார் நித்யானந்தா குறித்து ஆவணப்படம் வெளியாகி உள்ள நிலையில், டிஸ்கவரி சேனல் இந்து மத குருமார்கள் குறித்த வெறுப்பு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதாகவும் பக்தர்கள் இதனை நம்ப வேண்டாம் எனவும் செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

பாலியல் பலாத்காரம், கடத்தல், மோசடி போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் சமூக வலைதளங்களில் தினந்தோறும் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.

ஐலேசாவான கைலாசா! கோமா என்பதெல்லாம் ட்ராமாவா? புது ரூட்டில் ஆட்டைய போட திட்டம் போட்ட நித்யானந்தா..! ஐலேசாவான கைலாசா! கோமா என்பதெல்லாம் ட்ராமாவா? புது ரூட்டில் ஆட்டைய போட திட்டம் போட்ட நித்யானந்தா..!

சாமியார் நித்யானந்தா

சாமியார் நித்யானந்தா

இதுகுறித்து நித்யானந்தா தனது கைப்பட எழுதிய கடிதத்தோடு வெளியிட்ட பதிவில், நான் இறக்கவில்லை. சமாதி நிலையில் இருக்கிறேன். 27 டாக்டர்கள் எனக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் என கூறியிருந்தார். அதன்பிறகு அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில் என்னால் உணவு சாப்பிட முடியவில்லை. எனக்கு தூக்கம் வரவில்லை என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நித்யானந்தா கோமா நிலைக்கு சென்று விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது.

ஆன்மீக வகுப்புகள்

ஆன்மீக வகுப்புகள்

அதனையும் மறுத்த நித்தியானந்தா பரமசிவனை சந்தித்துவிட்டு வருவதாகவும் அதன் பிறகு ஆன்மீக வகுப்புகள் எடுப்பேன் என கூறியிருந்தார். இது ஒரு மோசடித் திட்டம் என நித்தியானந்தாவுக்கு நன்கு தெரிந்தவர்கள் கூறியிருந்தனர். ஒவ்வொரு முறை பணத்தேவை ஏற்படும் போதெல்லாம் தான் சமாதி நிலைக்குச் சென்று பரமசிவனை சந்தித்ததாகவும் நித்தியானந்தா அதனை வைத்து பக்தர்களை ஏமாற்றி பணம் பறிப்பது வழக்கம் தான் என கூறியிருந்தனர். அந்த வகையிலேயே நித்யானந்தா தற்போது கோமா என டிராமா போட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

மோசடி குறித்து ஆவணப்படம்

மோசடி குறித்து ஆவணப்படம்

இந்நிலையில் சர்வதேச அளவில் பிரபலமான டிஸ்கவரி பிளஸ் சேனல் நித்தியானந்தா குறித்த ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. the daughter joined a cult என்ற பெயரில் வெளியான அந்த ஆவணப்படத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. குறிப்பாக தன்னிடம் சீடர்களாக இருப்பவர்களை ஆண் பெண் என்ற பேதமின்றி நித்யானந்தா பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாகவும் பலரை தனது வலையில் வீழ்த்தி அவர்களது பணத்தை பறித்துக் கொண்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் கிளம்பி வருகின்றன.

கைலாசா விளக்கம்

கைலாசா விளக்கம்

அதோடு தானே பணம் கொடுத்து தன்னைப்பற்றிய மீம்ஸ்களை உருவாக்கி வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. உலக அளவில் நித்யானந்தாவைப் பற்றி தெரிந்தவர்கள் மத்தியில் இந்த ஆவணப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதனை கைலாசா மறுத்துள்ளது. இதுகுறித்து கைலாசா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்து மதத்திற்கு எதிராக டிஸ்கவரி பிளஸ் நிறுவனம் குருமார்கள் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டு உள்ளதாகவும் பக்தர்கள் அதனை நம்ப வேண்டாம் என கூறியுள்ளது

பக்தர்களுக்கு வேண்டுகோள்

இதுபற்றி வெளியிட்டப்பட்டுள்ள வாட்ஸ் ஆப் செய்தியில்,"டிஸ்கவரி சேனலும் ஹிந்துமத குருமார்கள் வெறுப்பு பிரச்சாரமும் பின்னணி என்ன ? உண்மையை உடைக்கும் பக்தர்கள். உங்களது கருத்துக்களை இந்த முகநூல் பதிவில் கமெண்ட்களில் பதிவிடவும் Post Link : https://www.facebook.com/TheAvatarClicksTamil/posts/1097494897518002, மேலே கொடுக்கப்பட்டுள்ள link ஆனது வேலை செய்யவில்லை என்றால் இந்த 8072250413 எண்ணை உங்களது அலைபேசியில் பதிவு செய்துவிட்டு மீண்டும் லிங்க்கை கிளிக் செய்து திறக்க முயற்சியுங்கள் லிங்க் ஆனது வேலை செய்யும்." என கூறப்பட்டுள்ளது.

English summary
Following the release of a documentary on Samiyar Nithyananda hiding behind the Discovery Plus site, Kailash has been spreading rumors that the Discovery Channel has launched a hate campaign against Hindu clergy and that devotees should not believe this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X