Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவர் எப்படி அவமதிக்கிற மாதிரி பேசலாம்?.. பாமக ராமதாஸ் மன்னிப்பு கேட்கணும்.. கருணாஸ் தடாலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வழக்கறிஞர்கள், நீதிபதிகளை அவமானப்படுத்திய பாமக நிறுவனர் ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகர் கருணாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கருணாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில் வன்னியர் உள் இடஒதுக்கீடு 10.5 சதவீதம் தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முக்குலத்தோர் புலிப்படை உட்பட பலர் வழக்கு தாக்கல் செய்து அவரவர் தரப்பிலும், எதிர்த்தரப்பில் பாமக மற்றும் அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.

 மேல்முறையீடு

மேல்முறையீடு

இதில் அரசின் மேல்முறையீட்டை எதிர்த்து வாதாடிய வழக்கறிஞர்களில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்துவும் ஒருவர். இவ்வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பின் பாமக அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

அதில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து தனிப்பட்ட முறையில் அவர் சார்ந்த சாதிக்காக உதவியதாக குற்றம் சாட்டியது மட்டுமல்லாமல், அவர் நீதிபதி அல்ல நீதி பாதி என பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையிலேயே இருவரும் வசைபாடியுள்ளனர்.

ரசித்த ராமதாஸ்

ரசித்த ராமதாஸ்

இதனை கண்டிக்காமல் அவர் ரசித்துக் கொண்டிருந்தது பெரும் கண்டனத்துக்குரியது. மேலும் நீதித்துறைக்கு அவமானம் ஏற்படுத்திய ராமதாஸ் மன்னிப்பு கோர வேண்டும். இவர்களின் பேச்சு நீதித் துறையை மிரட்டும் தொனியில் உள்ளது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு விரைவாக நடைபெற வேண்டும் என கருணாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    Vanniyar மட்டும் வளரக்கூடாது அப்படிதானே! பொங்கிய Anbumani | Oneindia Tamil
    10.5 சதவீதம் இடஒதுக்கீடு

    10.5 சதவீதம் இடஒதுக்கீடு

    10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியே என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அதற்காக உயர்நீதிமன்றம் கூறிய சில காரணங்களை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதால் இந்த இடஒதுக்கீடு விரைவில் வெற்றியடையும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+