Karur stampede: கரூர் கூட்ட நெரிசல்.. தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும்.. விஜய்யின் தவெக மனு
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும் என தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 40 பேர் பலியாக சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தவெக சார்பில் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.
கரூரில் நேற்று இரவு நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் விஜய்யை பார்க்க வந்திருந்த குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கரூர் மருத்துவமனையில் மேலும் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். நேரில் வந்து பார்வையிட்ட ஸ்டாலின் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் வழங்குவதாக கூறினார். கூட்ட நெரிசல் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் திட்டமிட்ட சதி என்று கூறிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இது தொடர்பாக விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தேசிய மகளிர் உரிமைகள் ஆணையத்தில் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.
-
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்!












Click it and Unblock the Notifications