கணவரிடம் "கோரிக்கை மனு" கொடுத்த கிருத்திகா.. இன்னும் அதிரடி ஆக்ஷனில் இறங்காத உதயநிதி ஸ்டாலின்
சென்னை: எனக்கும் உதயநிதிக்கும் ஏதேனும் சண்டை வந்தால் அதை மகேஷ் அண்ணன்தான் பேசி சமாதானம் செய்வார் என மலரும் நினைவுகள் குறித்து கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் பிறந்தவர் கிருத்திகா. இவர் லயோலா கல்லூரியில் தனது விஸ்காம் படிப்பை முடித்தார். படிக்கும்போதே குறும்படங்களை எடுக்கும் ஆர்வம் கொண்டவர். இவர் 2013 இல் வந்த வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகம் ஆனார்.
இவர் திருநங்கைகளின் வாழ்க்கை மேம்படுவதற்காக போராடி வருகிறார். இவர்களுக்காகவே stand by me என்ற ஆவண படத்தை தயாரித்துள்ளார். இவர் பேப்பர் போட் என்ற வெப் சீரிஸையும் இயக்கியுள்ளார். உதயநிதி எம்எல்ஏவாக வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரிடமும் மனைவி கிருத்திகாவிடமும் நிறைய செய்தி சேனல்கள் நேர்காணலை நடத்தி வருகின்றன.

கிருத்திகா
அந்த வகையில் கிருத்திகாவிடம் ஒரு சேனல் நடத்திய நேர்காணலில், நானும் உதய்யும் எங்கள் நண்பர்களுடன் ஊட்டி முதல் கேரளா வரை பல்வேறு இடங்களுக்கு ஒரே வேனில் கேங்காக சென்றுள்ளோம். அங்கு புதிய மக்கள், புதிய கலாச்சாரம், புதிய உணவு இவற்றை எல்லாம் பார்த்து மகிழ்ந்துள்ளோம். டிராவலிங் என்றால் எனக்கும் உதய்க்கும் மிகவும் பிடிக்கும்.

குழந்தைகளுடன் நேரம்
குழந்தைகளுடன் நேரத்தை செலவிட இருவருமே விரும்புவோம். ஆனால் எம்எல்ஏ ஆன நிலையில் உதயநிதியால் எங்களுடன் நேரத்தை செலவிட முடியவில்லை. அண்மையில் கூட ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்ல உதய்யை அழைத்தேன். அவர் தனக்கு வேலை இருப்பதாக சொல்லிவிட்டார். இதனால் நான் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்று வந்தேன்.

மக்களுக்கு சேவை
அப்போதுதான் மக்களுக்கும் சேவை செய் ஆனால் குழந்தைகளுடனும் நேரத்தை செலவிட வேண்டும். இரண்டையுமே பேலன்ஸ் செய்ய வேண்டும் என கோரிக்கையாக வைத்திருந்தேன். ஆனால் எனது கோரிக்கை இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. நானும் உதய்யும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

சண்டை நிகழும்
காதலிக்கும் போது மெச்சூரிட்டி இல்லாததால் இருவருக்கும் அடிக்கடி சண்டை நிகழும். இருவரும் பேசிக் கொள்ள மாட்டோம். விஷயத்தை தெரிந்து கொண்டு அன்பில் மகேஷ் அண்ணன்தான் எங்களை சமாதானப்படுத்தி வைப்பார். இது போன்ற சங்கடமான நேரங்களிலும் உதவுபவர்கள்தான் நண்பர்கள். அந்த வகையில் உதயநிதிக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என கிருத்திகா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
இது போன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு பேட்டியில் கூறுகையில், என்னை உதயநிதி தொடர்பு கொண்டு உடனே ஒரு கோயிலுக்கு வா என அழைத்தார். நான் எதற்காக என கேட்டேன். அவர் நீ முதலில் வா என்றார். சரி என நானும் அவர் சொன்ன கோயிலுக்கு சென்றேன். அப்போது அங்கு ஒரு குழுவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்து கொண்டிருந்தது.

பாசத் தங்கை கிருத்திகா
உடனே உதயநிதி அதில் இருந்த ஒரு பெண்ணை பார்த்து, அந்த பெண்ணை நான் காதலிக்கிறேன், அவர் பெயர் கிருத்திகா என்றார். உடனே எங்களை பார்த்ததும் கிருத்திகா வெட்கப்பட்டு கொண்டே அந்த இடத்தை விட்டே ஓடிவிட்டார். அன்று முதல் இன்று வரை நிறம் மாறாமல் இருக்கும் பாச தங்கை அவர். எனது சொந்த தங்கையாகவே அவரை பார்க்கிறேன் என அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
-
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications