Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கே.பி.முனுசாமி திமுக கைக்கூலி.. அமைச்சருக்கு நெருக்கம்.. சீக்ரெட் லீக் ஆகுது- ஓபிஎஸ் ஆதரவாளர் பகீர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவின் ரகசியங்களை திமுகவிடம் தெரிவித்து திமுகவின் கைக்கூலி போல செயல்படுகிறார் என்று கே.பி.முனுசாமி மீது ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் 'பகீர்' குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

Recommended Video

    Sasikala வேதனை! AIADMK வீணாய் போக சுயநலமே காரணம் *Politics

    கே.பி.முனுசாமியின் மகன் சதீஷுக்கு கிருஷ்ணகிரியில் பால்வளத் துறைக்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு வழங்கி திமுக அமைச்சர் காந்தி உதவி செய்துள்ளார் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    கே.பி.முனுசாமி, பன்னீர்செல்வத்துக்கு திமுகவுடன் தொடர்பு உள்ளதாக கூறியிருந்த நிலையில், கோவை செல்வராஜின் இந்தக் குற்றச்சாட்டு அதிமுகவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

    சர்ச்சையை ஏற்படுத்திய சந்திப்பு

    சர்ச்சையை ஏற்படுத்திய சந்திப்பு

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். தேனி மாவட்டத்தின் முன்னேற்றம் குறித்தும், நலத்திட்டங்கள் குறித்தும் பேசுவதற்காக முதல்வரை சந்தித்ததாக அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலனில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார் என்று ஓபிஆர் பாராட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    துரோகி ஓபிஎஸ்

    துரோகி ஓபிஎஸ்

    அதிமுகவில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் மோதல் எழுந்துள்ள நிலையில், ஓபிஎஸ் துரோகி எனக் குற்றம்சாட்டும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள், ஓபிஎஸ்ஸின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் திமுக ஆட்சியைப் பாராட்டியதைக் குற்றம்சாட்டி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும், துரோகத்தின் அடையாளமாக ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். திமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார் ஓபிஎஸ் என கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

     திமுகவின் கைக்கூலி

    திமுகவின் கைக்கூலி

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதிமுகவுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக ஓபிஎஸ் தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அதிமுகவின் ரகசியங்களை திமுகவினரிடம் கூறி வருகிறார். அவர் திமுகவின் கைக்கூலியாகவே செயல்பட்டு வருகிறார் என ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

    கே.பி.முனுசாமி மகன்

    கே.பி.முனுசாமி மகன்

    இதுகுறித்து பேசிய கோவை செல்வராஜ் , கே.பி.முனுசாமி கடந்த வாரம் ஓ.பன்னீர்செல்வம் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி இருந்தார். ஆனால் முனுசாமியின் மகன் சதீஷுக்கு கிருஷ்ணகிரியில் பால்வளத் துறைக்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் வழங்கி திமுக அமைச்சர் காந்தி தான் உதவி செய்துள்ளார். கே.பி.முனுசாமியின் மகன் சதீஷ் தொடங்கியுள்ள பெட்ரோல் பங்கையும் திமுக அமைச்சர் காந்தி தான் திறந்து வைத்துள்ளார்.

    முகத்திரை கிழிந்தது

    முகத்திரை கிழிந்தது

    பால்வளத் துறைக்கு சொந்தமான இடம் 99 ஆண்டுகள் வாடகைக்கு கே.பி.முனுசாமியின் மகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மூலம் அதிமுகவின் ரகசியங்களை திமுகவிற்கு கூறும் கே.பி.முனுசாமியின் முகத்திரை கிழிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த விஷயம் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியுமா என்று தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    ராஜினாமா செய்ய வேண்டும்

    ராஜினாமா செய்ய வேண்டும்

    மேலும் பேசிய அவர், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு ஆட்பட்ட 7 முன்னாள் அமைச்சர்களும் கட்சிப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், தங்களை நிரபராதிகள் என அவர்கள் நிரூபிக்கும் வரை அவர்கள் கட்சி பதவியில் இருந்து விட்டு விலக்கி வைக்கப்பட வேண்டும். எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் குடும்ப அரசியல் லஞ்சம் போன்றவற்றை எதிர்க்கும் கட்சியாக அதிமுக இருந்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

    காமராஜ் மீதான ரெய்டு

    காமராஜ் மீதான ரெய்டு

    தேர்தலில் போட்டியிடும்போது தாக்கல் செய்கின்ற சொத்து மதிப்பிற்கும் தற்போது உள்ள சொத்து மதிப்பிற்கும் ஒப்பிட்டு பார்த்து நடவடிக்கை எடுப்பார்கள். அதன் அடிப்படையில் தான் முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடக்கின்றது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறும்போது அப்பாவி தொண்டர்களை வெளியே நிற்க வைத்து ஏன் கோஷம் போட வைக்க வேண்டும். தனிநபர்கள் கட்சி தொண்டர்களை இப்படி பயன்படுத்தக் கூடாது என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+