நீங்க தாக்கினீர்களாமே.. புகார் வந்திருக்கு.. பஞ்சாயத்துக்கு வாங்க.. ரஞ்சன்குமாருக்கு பறந்த சம்மன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி.பிரிவு மாநிலத் தலைவர் ரஞ்சன் குமாரை விளக்கம் கொடுக்க நேரில் வருமாறு அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

ஏற்கனவே ரூபி மனோகரனுக்கு ராமசாமி நேற்று சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இப்போது ரஞ்சன் குமாருக்கும் அழைப்புச் சென்றுள்ளது.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி அனுப்பிய சம்மன் விவரம் வருமாறு;

சத்தியமூர்த்தி பவன்

சத்தியமூர்த்தி பவன்

நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தப்பணிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் கடந்த நவம்பர் 15, 16 ஆகிய இரு தேதிகளில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. முதல் நாள் கூட்டம் நடைபெறுகிறபோது நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் இருந்து 6 பேருந்துகளில் அழைத்துவரப்பட்டவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு முன்பாக முழக்கங்களை எழுப்பிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தாக்கியதாக புகார்

தாக்கியதாக புகார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு தினேஷ் குண்டுராவ் மற்றும் முக்கிய தலைவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்குள் வருவதை தடுத்து, முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு வந்தவர்களை தாங்கள் தாக்கியதாக உங்கள் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 24

நவம்பர் 24

எனவே, வருகிற நவம்பர் 24 ஆம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடைபெறவுள்ள ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் தாங்கள் நேரில் ஆஜராகி நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி தனது சம்மனில் தெரிவித்துள்ளார்.

களைகட்டும் பஞ்சாயத்து

களைகட்டும் பஞ்சாயத்து

காங்கிரஸ் கட்சிக்கும் கோஷ்டிப் பூசலுக்கும் அப்படி என்ன தான் பந்தமோ தெரியவில்லை, அடிதடிகள் இல்லாமல் சண்டை சச்சரவுகள் இல்லாமல் எந்த நிகழ்வும் நடந்ததில்லை. உள்ளூர் முதல் தேசியளவில் வரை இது தான் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை தருவதாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+