சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மது கடைகளை திறக்க முடியும்னா.. கோயில்களும், பள்ளிகளும் ஏன் திறக்க கூடாது?.. கஸ்தூரி கேட்ட கேள்வி

டாஸ்மாக் திறப்பு குறித்து நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "மதுபான கடைகளை திறக்க முடிந்தால், கோயில்களும், பள்ளிகளும் ஏன்
இருக்கக்கூடாது?" என்று நடிகை கஸ்தூரி பகிரங்கமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

Recommended Video

    மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது.. முதல்வர் இல்லம் நோக்கி 5 சிறுவர்கள் நடைப்பயணம்

    நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான கஸ்தூரி 2 நாளைக்கு முன்பு ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், "டாஸ்மாக்கை இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி நன்றி. நானும் கூட கண்டிப்பாக திறப்பார்கள் என்றே எண்ணினேன். என் கணக்கு தப்பாய் போனதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. தாய்மார்கள், குழந்தைகள் சார்பாக மீண்டும் நன்றி! " என்றார்.

    lockdown: kasturi has raised question about tasmac open issue

    கஸ்தூரி இப்படி சொல்லிய சில மணி நேரத்திலேயே மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்தது.. உடனே கஸ்தூரி, "அவசரபட்டுட்டேனே. என் கணக்கு பொய்ச்சிருச்சுன்னு சந்தோஷ பட்டுட்டேனே. அரசு பண்றது தப்பு. நாடு முழுவதும் இன்று நடந்த கூத்தை பார்த்த பிறகுமா மது விற்பனையை திறக்க துணிகிறீர்கள்? குடி கொரோனா ரெண்டுக்கும் ஒரே சமயத்தில் பலியிடுகிறீர்கள்" என்று கூறியிருந்தார்.

    ஒரே நாளில் இந்த 2 ட்விட்களுமே பரபரப்பாக பேசப்பட்டன.. இந்நிலையில், சென்னையை தவிர பிற மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்போவதால், இப்போதும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், "மதுபானக் கடைகளை திறக்க முடிந்தால், கோயில்களும், பள்ளிகளும் ஏன் இருக்கக்கூடாது? ஏனென்றால் இது வருவாயை பற்றியது, ஒரு ஒழுக்கமான சமூகம் பற்றியது அல்ல என்றும், எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புகள், எதிர்பார்க்கப்பட்ட விளக்கங்கள் என்றும், நமது தேசிய பொழுது போக்கு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன" என்று தெரிவித்துள்ளார்.

    lockdown: kasturi has raised question about tasmac open issue

    கஸ்தூரியின் கருத்தை பலரும் ஆதரித்து வருகின்றனர்.. அதில் ஒருவர், "மக்கள் மேல் அக்கறை இருக்கும் நீங்க இதை கேட்பீர்களா? 2லட்சத்து 19 ஆயிரம் கோடியில் 80% அரசு ஊழியர் மற்றும் பென்சனாக மட்டும் செல்கிறது அதிலும் 80% அரசு அலுவலகங்கள் செயல்படாமலே !! இதை எதிர்த்து பேச முடியுமா ?? ஏன் அவர்கள் பாதி சம்பளத்தை கூட தர மறுக்கிறார்கள் ??" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    English summary
    lockdown: kasturi has raised question about tasmac open issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X