தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார்! ஸ்டாலினை தொடும் தூரத்தில் விஜய்! லயோலா கருத்து கணிப்பு
சென்னை: தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார் என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முதல்வர் ரேஸில் ஸ்டாலினை தொடும் தூரத்தில் விஜய் இருக்கிறார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.
சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு (ஐபிடிஎஸ்) சார்பில் வரும் சட்டசபை தேர்தலில் யார் முதல்வர் என்ற கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளாக இவர்கள் கருத்துக் கணிப்புகளை நடத்தி வருகிறார்கள். இவர்களது கணிப்புகள் பெரும்பாலும் நம்பகத்தன்மை கொண்டது என்ற சொல்லப்படுகிறது.
அந்த வகையில் பல்வேறு தரவுகள், பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் இன்று வெளியானது. அதில் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதிகபடியானோர் ஸ்டாலினை சொல்லியிருக்கிறார்கள். அது போல் அவருக்கு அடுத்து விஜய், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான் அல்லது கனிமொழி என சொல்லியிருக்கிறார்கள்.
நகர்ப்புறங்களில் யாருக்கு ஆதரவு என்ற கேள்விக்கு திமுகவுக்கு என்று 24.77 சதவீதத்தினரும், தவெகவுக்கு என 23.46 சதவீதத்தினரும், அதிமுகவுக்கு என 20.55 சதவீதத்தினரும், நாதகவுக்கு என 6.7 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
இதே வாக்கு வங்கி என்ற கணக்கில் பார்த்தால் தவெகவுக்கு 19.20 சதவீதமும், திமுகவுக்கு 17.7 சதவீதமும் அதிமுகவுக்கு 15.32 சதவீதமும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
எனவே யாருக்கு ஆதரவு என்பதில் முதல்வர் ஸ்டாலின் முதலிடத்திலும் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் விஜய் முதலிடத்திலும் இருப்பதால் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு இருவருக்கு வாய்ப்பிருப்பதாக கருதப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
-
தமிழ்நாட்டையே அதிர வைத்த திருமணம்.. தவெக வேட்பாளரான ஆர்.எஸ்.முருகன்.. விஜய் சீட் கொடுத்த பின்னணி! -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்? -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு












Click it and Unblock the Notifications