Loyola IPDS Survey: என்னது விஜய் கிங் மேங்கரா? 2024ல் அண்ணாமலை ஜெயிப்பாரு சொன்னவங்கதானே இவங்க!
சென்னை: எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் கிங் மேக்கரா இருப்பார் என்று, லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் ஐபிடிஎஸ் என்ற அமைப்பு கருத்துக் கணிப்புகளை வெளியிட்டிருக்கிறது. ஆனால், இதற்கு முன்னர் கடந்த 2024ல் அண்ணாமலை கோவையில் ஜெயிப்பார் என்று சொன்னதும் இதே அமைப்புதான். ஆனால் ஜெயிக்கவில்லை. இதனை குறிப்பிட்டு இந்த கருத்து கணிப்புகள் மீது விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. இன்று செய்தியாளர்களை சந்தித்த, லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் ஐபிடிஎஸ் என்ற அமைப்பு, தனது கணிப்புகளை வெளியிட்டிருந்தது.

கணிப்புகள் சொல்வது என்ன?
- தவெக - 19.20%
- ஷதிமுக - 17.7%
- அதிமுக - 15.32%
- நாதகவுக்கு - 6%
- காங்கிரஸ் - 4.10%
- பாமக - 4.09%
- பாஜக 3.5%
விஜய் கிங் மேக்கர்?
என வாக்குகளை பெறும் என்று கணிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக, "ஆட்சி அதிகாரத்தில் இந்த முறை திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் அமர முடியாது. இந்த தேர்தலை பொறுத்தவரை, விஜய் என்கிற நபர் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளுக்கும் ஆபத்து. திமுக இன்னும் 10 பேரை சேர்த்தாலும் வேலைக்கு ஆகாது. விஜய் கிங் மேக்கராக இருப்பார்.
அதிலும் அதிமுகவுக்கு விஜய் மிகவும் ஆபத்தானவர். 80 தொகுதிகளில் கட்சி டெபாசிட்டை இழக்கும்" என்றும் ஐபிடிஎஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.
முதலமைச்சராக விஜய்
அதேபோல அடுத்த முதல்வர் யார் என்கிற கணிப்பு குறித்து பதிலளித்த ஐபிடிஎஸ் அமைப்பு, மு.க.ஸ்டாலின், விஜய் என இருவரும் முதலிடம் பிடித்திருக்கிறார்கள் என்றும், எடப்பாடி பழனிசாமி இரண்டாவது இடமும், அண்ணாமலை 3வது இடமும், சீமான் மற்றும் கனிமொழி 4வது இடத்தையும் பிடித்திருப்பதாக தெரிவித்திருந்தனர்.
கணிப்பு எல்லாம் ஓகேதான். ஆனால், சொல்றது பூராவும் தப்பா இருக்கே! என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாக்களில் சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கின்றன.
பொய்துப்போன கணிப்பு
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் அண்ணாமலை பாஜக சார்பில் போட்டியிட்டிருந்தார். இந்த தொகுதியில் அவர் ஜெயிப்பார் என்று ஐபிடிஎஸ் அமைப்பு கணித்திருந்தது. அண்ணாமலை 38.9% வாக்குகளை பெற்று ஜெயிப்பார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் 32.79% அளவுக்குதான் அண்ணாமலை வாக்குகளை பெற்றார்.
ஐபிடிஎஸ் மீது விமர்சனம்
மட்டுமல்லாது, இரண்டாம் இடம் பெறுவார் என்று ஐபிடிஎஸ் அமைப்பு சொல்லியிருந்த, திமுகவின் கணபதி ராஜ்குமார் முதலிடம் பெற்று வெற்றி பெற்றார். அண்ணாமலை தோல்வியடைந்தார்.
இப்படி தவறாக கணிப்புகளை வெளிட்ட அமைப்புதானே ஐபிடிஎஸ்! என்று விமர்சித்து பதிவுகளை போட்டு வருகின்றனர்.
-
விஜய் பற்றி.. டெல்லிக்கு பறந்த உளவுத்துறை ரிப்போர்ட்.. ஆட்டத்தை கலைத்து ஆடப்போகும் அமித் ஷா? -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications