அடுத்து லாக்டவுன் தானா? அப்படியே கொரோனா மாதிரி.. முதலில் கேஸ் சப்ளை, இப்போ ஹோட்டல் மூடல்.. திக்திக்
சென்னை: கொரோனா காலத்தில் மக்கள் குழப்பமடைந்தனர். ஹோட்டல்கள் மூடப்பட்டன. பொது போக்குவரத்து முடக்கப்பட்டது. முதல்முறையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இப்போது கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு சூழல் தான் ஏற்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் சப்ளை காரணமாகப் பொதுமக்களிடையே பீதியும் குழப்பமும் தான் நிறைந்துள்ளது.
டெல்லியின் செக்டார் 16 பகுதியில், பிரமோத் குமார் தனது சிறிய பஜ்ஜி கடையைச் செவ்வாய்க்கிழமை மாலை திறந்தபோது, அவருக்குள் ஒருவித நிச்சயமற்ற தன்மை சூழ்ந்திருந்தது. அடுத்த நாள் கடை திறக்க முடியுமா என்பது அவருக்குத் தெரியாமல் இருந்தது. வழக்கமாகக் கள்ளச்சந்தையில் அவர் வாங்கும் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்ந்திருந்தது. இந்த திடீர் விலை உயர்வின் காரணமாக, அவர் தனது சமோசாவின் விலையை 50% அதிகரித்திருந்தார்.

கேஸ் சிலிண்டர்
அடுத்த நாளுக்கான சிலிண்டரை ஆர்டர் செய்ய பிரமோத் முயற்சி செய்தபோது, விநியோகஸ்தரின் பதில் திருப்திகரமாக இல்லை. "காசியாபாத்தில் இருந்து ஒரு சிலிண்டர் கொண்டு வர ஒருவரிடம் பேசியுள்ளேன். அது வரவில்லை என்றால், நம்மால் கடையைத் திறக்க முடியாது" என்று விநியோகஸ்தர் கூறினார். அவர் மேலும், "அருகிலுள்ள செக்டார் 18 அட்டா மார்க்கெட் பகுதியில் செயல்படும் பல தாபாக்கள் மற்றும் உணவகங்கள் இப்போதே மூடத் தொடங்கிவிட்டன" என்றும் பிரமோத் கவலையுடன் தெரிவித்தார்.
அவரது அச்சங்களுக்கு மாறாக, அடுத்த நாள் காலை பிரமோத் தனது கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு சிலிண்டரை ரூ.2,300 கொடுத்து வாங்கியுள்ளார். பிரமோத் மட்டும் இந்தச் சிக்கலை எதிர்கொள்ளவில்லை. அவரது அண்டைவீட்டாரான சிவ்பால் குமார், ஒரு கப் டீ விலையை ரூ.10ல் இருந்து ரூ.15ஆக உயர்த்தியிருந்தார். மற்றொரு டீக்கடை உரிமையாளர் தனது தேநீரின் விலையை ரூ.20ஆக உயர்த்தியிருப்பதாக சிவ்பால் குறிப்பிட்டார்.
ஹோட்டல்கள் மூடல்
பெரிய மற்றும் சிறிய அளவிலான பல ஹோட்டல்கள், எல்பிஜி சிலிண்டர்கள் இல்லாததால், மூடப்படும் அபாயத்தில் உள்ளன அல்லது ஏற்கெனவே மூடப்பட்டுவிட்டன. உணவகங்கள் மூடப்படுவதும், மெனுவில் உள்ள உணவுப் பொருட்கள் குறைக்கப்படுகிறது. சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி என இந்தியா முழுக்க முக்கிய நகரங்களில் இதே நிலை தான். இதனால் ஹோட்டல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், டெலிவரி வேலை செய்யும் லட்சக்கணக்கான தற்காலிகப் பணியாளர்களையும் இது கடுமையாகப் பாதித்துள்ளது. பல நகரங்களில் எல்பிஜி நெருக்கடி காரணமாக டெலிவரி பணிகள் 50-60% குறைந்துவிட்டதாகவும் அது கூறியது.
கேஸ் சிலிண்டர் சப்ளையில் எந்தத் தடையும் இல்லை என்று மக்களுக்கு அரசு உறுதியளிக்க முயன்றது. ஆனால் தற்போதைய கள நிலவரமும், மக்கள் மனதில் படிந்த பீதியும் முற்றிலும் வேறொரு யதார்த்தத்தைக் காட்டுகின்றன. நொய்டாவின் செக்டார் 22-ல் உள்ள ஒரு தாபாவில், இரவு ரொட்டிக்காகக் காத்திருந்த ஒருவர், "இது கொரோனா ஊரடங்கு போல உணர்கிறது. ஆனால் அப்போதும்கூட எங்களுக்கு உணவு கிடைத்தது. கொரோனா, ஊரடங்கு, பணமதிப்பிழப்பு... இதையெல்லாம் நாங்கள்தான் தொடர்ந்து எதிர்கொள்கிறோம்" என்றார்.
சிலிண்டர் புக்கிங்
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான போர், இந்தியாவின் எல்பிஜி விநியோகச் சங்கிலியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசு இப்போது தனிநபர் பயன்பாடு கேஸ் சிலிண்டர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. இதனால் புக் செய்யும் குடும்பங்களுக்கு 5 முதல் 7 நாட்களில் சிலிண்டர்கள் கிடைத்து வருகின்றன. ஆனால் வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்சர் சப்ளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் உள்ள ஹோட்டல் மற்றும் உணவக சங்கங்கள் சிலிண்டர்கள் இல்லாததால் அவதிப்படுவதாகக் கூறுகின்றன. பல உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன, மற்றவையும் விரைவில் இதே நிலைக்குத் தள்ளப்படலாம்.
குடும்பங்களுக்கான கேஸ் சப்ளையிலும் கூட இப்போது மெல்லப் பாதிப்புகள் தெரிய ஆரம்பித்துவிட்டது. கேஸ் ஏஜென்சிகள் முன்பு நீண்ட வரிசைகளைப் பார்க்க முடிகிறது. கண்டிப்பாக கேஸ் வேண்டும் என இருப்போர் கள்ளச்சந்தையில் ரூ.3,000ஐ கொடுத்தும் வாங்க வேண்டி இருக்கிறது. அதேபோல தனி நபர்கள் இன்டக்ஷன் அடுப்புகள் பக்கம் போக ஆரம்பித்துள்ளனர். இதனால் அவையும் வேகமாக விற்றுத் தீர்கின்றன..
பாதிப்பு இல்லை
அதேநேரம் உண்மையில் சப்ளையில் மோசமான பாதிப்பு எதுவும் இல்லை என்றும் தவறான தகவல்கள் காரணமாகவே குழப்பம் ஏற்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே மக்கள் தேவையில்லாமல் புக்கிங் செய்கிறார்கள் என்றும் பதுக்கல்களும் நடக்கின்றன என்று அரசு அதிகாரிகள் புதன்கிழமை எச்சரித்தனர். பொதுமக்கள் அமைதியாகவும், எல்பிஜி பற்றாக்குறை பற்றிய தவறான செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் அவர்கள் வலியுறுத்தினர். உற்பத்தித்திறனை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி 25% அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வட இந்தியாவில் சில இடங்களில் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. சிலிண்டர் கிடைக்காததால், ஒரு வாரமாக என் குடும்பத்தினர் அடுப்பில் விறகில் சமைத்து வருகின்றனர். எல்பிஜி சப்ளையை பாதிக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். உள்நாட்டு நுகர்வோருக்கான எரிவாயு விநியோகத்தில் பற்றாக்குறை இல்லை என்றும் அவர் உறுதியளித்தார்.
மத்திய அரசு
கள்ளச்சந்தையைத் தடுக்கவும், விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கவும், பெட்ரோலிய அமைச்சகம் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை (ESMA) பயன்படுத்தியது. எல்பிஜி ரீஃபில் புக்கிங்கிற்கான காத்திருப்பு காலம் 21 நாட்களில் இருந்து 25 நாட்களாகவும், இரட்டை இணைப்புகளுக்கு 30 நாட்களாகவும் அதிகரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு சில நாட்களுக்கு முன்புதான், 14 நாட்களாக இருந்த காத்திருப்பு காலம் 21 நாட்களாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது..
மேலும், மார்ச் 7ம் தேதி 14.2 கிலோ குடும்ப பயன்பாடு சிலிண்டரின் விலை ரூ.60 அதிகரிக்கப்பட்டது. வணிக ரீதியிலான 19 கிலோ சிலிண்டரின் விலை ரூ.115 உயர்த்தப்பட்டது. அதிகப்படியான முன்பதிவுகளைக் கட்டுப்படுத்த, அரசு காத்திருப்பு காலத்தையும், எல்பிஜி சிலிண்டர்களின் விலையையும் அதிகரித்தாலும், இந்த நடவடிக்கைகள் நுகர்வோர் மத்தியில் மேலும் பீதியை உருவாக்கின.
டெலிவரி சேவை
அதேபோல டெலிவரி ஊழியர்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது எல்பிஜி பற்றாக்குறையால் பல முக்கிய ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் டெலிவரி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மும்பை, டெல்லி என்.சி.ஆர், பெங்களூரு, சென்னை, புனே, ஜெய்ப்பூர் போன்ற நகரங்களில் டெலிவரிப் பணிகளை 50-60% குறைத்துவிட்டதாக எச்சரித்தது.
நிலைமையைச் சமாளிக்க சில ஹோட்டல்கள் மீண்டும் விறகு அடுப்புகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. மேலும், உணவகங்கள் மூடத் தொடங்கிவிட்டன. இந்த நிலைமை எவ்வளவு காலம் நீடிக்கும், எவ்வளவு மோசமாகலாம் என்பதுதான் இப்போது எல்லாரிடமும் உள்ள கேள்வியாக இருக்கிறது.
-
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications