சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சந்திர கிரகணம்... என்னென்ன நம்பிக்கைகள் - கர்ப்பிணிகள் ஏன் வெளியே நடமாடக்கூடாது

சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ எதுவாக இருந்தாலும் அப்போது வெளிப்படும் கதிர்வீச்சுகள் கர்ப்பிணிகளை பாதித்துவிடக் கூடாது என்றே அந்த நேரங்களில் வெளியே நடமாடக் கூடாது என்று சொல்கிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: ரிஷப ராசியில் ராகு பயணிக்க கூடவே சந்திரன் இணைகிறார். சந்திர கிரகணம் நாளை கார்த்திகை நட்சத்திரத்தில் நிகழ்கிறது. ராகு க்ரஷ்த சந்திர கிரகணம் நிகழ உள்ளது. சந்திர கிரகணம், சூரிய கிரகணம் நிகழும் போது கர்ப்பிணிகள், வயதானவர்கள் வெளியே வரக்கூடாது என்று சொல்வார்கள். சந்திர கிரகணம் நிகழும் போது என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

சந்திரனையோ, சூரியனையோ ராகு மறைக்கும்போது ராகு க்ரஷ்தம் என்றும், கேது மறைக்கும்போது கேது க்ரஷ்தம் என்றும் சாஸ்த்திரங்கள் கூறுகின்றன பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களைத் தான் தரும் என்பார்கள். சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வதுண்டு.

580 ஆண்டுகளில் மிக நீண்ட பகுதி சந்திர கிரகணம் நவம்பர் 19 அன்று நிகழவிருக்கிறது. இந்த சந்திர கிரகணம் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் தென்படும் என்று வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் பகல் நேரத்தில் ஏற்படுவதால் பொதுவாக தோஷமில்லை என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

கார்த்திகை தீபநாளன்று கிரிவலம் செல்ல அனுமதி வேண்டும்! அதிமுக வேண்டுகோள்! கார்த்திகை தீபநாளன்று கிரிவலம் செல்ல அனுமதி வேண்டும்! அதிமுக வேண்டுகோள்!

பகுதி சந்திர கிரகணம்

பகுதி சந்திர கிரகணம்

சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் நிகழும். அப்போது, ​​பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் போது ஒரு பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது.

குழந்தைகளுக்கு பாதிப்பு

குழந்தைகளுக்கு பாதிப்பு

கர்ப்பிணி பெண்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கிரகணம் நிகழும்பொழுது பொது ஜனங்களை விட, கர்ப்பிணி பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே நல்லது. அப்படியே வெளியே வந்து வெளி வெளிச்சம் பட்டால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் தாக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறன. அதன் காரணமாக பிறக்ககூடிய குழந்தைகளுக்கு சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன.

கிரகண நேரத்தில் சாப்பிட வேண்டாம்

கிரகண நேரத்தில் சாப்பிட வேண்டாம்

கிரகண நேரத்தில் சமையல் செய்ய கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது. தண்ணீர் அருந்தக்கூடாது. நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யக்கூடாது. கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்பையை போட்டு வைப்பது மரபாகும். கிரகண நேரத்தின் போது, எதுவும் சாப்பிடக் கூடாது. முன்னதாகவே சாப்பிட்டுக் கொள்ளலாம். அதேபோல், கிரகணம் முடியும் போது, தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியங்களையும் மனோபலத்தையும் தரும் என்கிறது சாஸ்திரம்.

தர்ப்பணம்

தர்ப்பணம்

கிரக தோஷங்களையெல்லாம் நீக்கிவிடும் இதனை கிரகணத் தர்ப்பணம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. கிரகணத்தின் போது, ஜபம், தியானம் செய்து கொண்டிருக்கலாம். தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், சிவ புராணம் சொல்வது, கேட்பது நன்மை தரும்.

 விளக்கேற்றுவது அவசியம்

விளக்கேற்றுவது அவசியம்

சந்திரகிரகண நேரத்தில், யாகசாலை அமைத்து ஹோமங்கள் செய்வது மிகவும் பலம் தரும். நூறு மடங்கு புண்ணியங்களையும் பலத்தையும் தரும். கிரகணம் முடிந்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு விட்டு அருகில் கோயில்களுக்குச் சென்று அர்ச்சனை செய்யலாம். அரிசி, நல்லெண்ணெய் முதலானவற்றை தானம் தருவது மிகுந்த பலனையும் புண்ணியத்தையும் தரும். நாளைய தினம் தீபத்திருநாள் என்பதால் அனைவருமே தீபம் ஏற்றி வழிபாடுவார்கள் என்பதால் புண்ணியம் அதிகரிக்கும்.

English summary
Lunar Eclipse What Hope - Why Pregnant Women Should Not Move Out The Moon joins as Rahu travels in the zodiac sign of Pisces. The lunar eclipse will occur tomorrow under the star Karthika. Rahu Krishna lunar eclipse is about to occur. During the lunar eclipse and solar eclipse, pregnant women and the elderly will be told not to come out. Let’s see what can and cannot be done when a lunar eclipse occurs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X