சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"துன்புறுத்த கூடாது".. தன்பாலின ஈர்ப்பாளர்கள் வழக்கில்.. LGBTQ உரிமையை நிலைநாட்டிய சென்னை ஹைகோர்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: தன்பாலின ஈர்ப்பாளர்கள் தொடர்பான வழக்கு ஒன்றில் இன்று சென்னை ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. LGBTQ+ சமூகம் தொடர்பான முக்கியமான வழக்கு விசாரணையில் LGBTQ+ சமூகத்தினருக்கான கொள்கையை வகுக்க வேண்டும் சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது. அதோடு இந்த வழக்கை விசாரித்த நீதிபதியே இதற்காக கவுன்சிலிங் சென்ற நெகிழ்ச்சி சம்பவமும் நடைபெற்றுள்ளது.

எல்ஜிபிடிக்யூ + சமூகத்தினர் எனப்படும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் இருபாலின சமூகத்தினர் கொண்டாடும் பிரைட் மாதம் ஆகும் இது. ஜூன் மாதத்தை தங்களின் மாதமாக எல்ஜிபிடிக்யூவினர் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் பிரைட் மாதத்தில் எல்ஜிபிடிக்யூ + தொடர்பான முக்கியமான வழக்கு ஒன்றில் சென்னை ஹைகோர்ட்டில் இன்று முக்கிய தீர்ப்பு வழங்கியது.

15 நிமிடம்.. தரையிறங்கும் முன் திடீரென மோசமாக குலுங்கிய.. விஸ்தாரா விமானம்.. 3 பயணிகள் படுகாயம்! 15 நிமிடம்.. தரையிறங்கும் முன் திடீரென மோசமாக குலுங்கிய.. விஸ்தாரா விமானம்.. 3 பயணிகள் படுகாயம்!

மதுரையை சேர்ந்த இரண்டு தன் பாலின ஈர்ப்பு கொண்ட பெண்கள், காதலில் விழுந்து சென்னையில் குடியேறி உள்ளனர். இவர்கள் ஒன்றாக வசித்து வந்த நிலையில், இவர்களின் பெற்றோர் போலீசில் இவர்களை காணவில்லை என்று புகார் அளித்தனர். இவர்கள் இருவரும் விருப்பத்தோடு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், காணாமல் போய்விட்டதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

 வரவேற்பு

வரவேற்பு

இந்த நிலையில் இந்த வழக்கில் போலீசிடம் இருந்தும், தங்களின் பெற்றோரிடம் இருந்தும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று இருவரும் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். சென்னை ஹைகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கில் வழங்கிய தீர்ப்புதான் வரவேற்பை பெற்றுள்ளது. அதில், இதுபோல வீட்டை விட்டு வெளியேறும் எல்ஜிபிடிக்யூ + சமூகத்தினருக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்.

 முடிக்க வேண்டும்

முடிக்க வேண்டும்

எல்ஜிபிடிக்யூ + சமூகத்தினர் வீட்டை விட்டு வெளியேறி, அதற்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டால் அந்த வழக்கை உடனே விசாரித்து, இரண்டு பேரும் சம்மதத்தோடு வெளியேறியது உறுதி செய்யப்பட்டால் வழக்கை முடித்து வைக்க வேண்டும். எல்ஜிபிடிக்யூ + சமூகத்தினரை அவர்களின் பெற்றோரோ, விசாரணை என்ற பெயரில் போலீசோ துன்புறுத்த கூடாது என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

கவுன்சிலிங்

கவுன்சிலிங்

அதோடு இது போன்ற வழக்குகளில் எல்ஜிபிடிக்யூ + சமூகத்தினரின் பெற்றோருக்கு கவுன்சிலுங் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த இரண்டு பெண்களின் பெற்றோருக்கும் கவுன்சிலிங் கொடுக்க நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டார். அதோடு இந்த கவுன்சிலிங்கில் நீதிபதியும் கலந்து கொண்டு, எல்ஜிபிடிக்யூ + சமூகத்தினர் குறித்து தெரிந்து கொண்ட நெகிழ்த்ச்சியான் சம்பவும் நடந்ததும்.

சிறப்பு

சிறப்பு

இந்த கவுன்சிலிங்கிற்கு பின் பேசிய நீதிபதி ஆனந்த், நானும் கூட எல்ஜிபிடிக்யூ + சமூகத்தினர் குறித்த புரிதல் இல்லாமலே இருந்தேன். தன்பாலின உறவு கொண்டவர்களோடு பழகியது இல்லை என்பதால் அவர்கள் குறித்தும், அவர்களின் உணர்வுகள் குறித்தும் போதிய புரிதல் இல்லாமல் இருந்தேன். எல்ஜிபிடிக்யூ + சமூகத்தினரை முழுமையாக ஏற்றுக்கொள்வதில் ஒருவித தயக்கம் மக்கள் இடையே இப்போது இருக்கிறது.

தையம்

தையம்

எதிர்பாலின உறவு கொள்ளும் சமூகத்தினர் எல்ஜிபிடிக்யூ + சமூகத்தினரை முழுமையாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. எல்ஜிபிடிக்யூ + சமூகத்தினர் குறித்த புரிதல் சமுதாயத்தில் முழுமையாக இல்லை. இதனால்தான் நானும் கவுன்சிலிங் கலந்து கொண்டேன். கே, லெஸ்பியன், ஹோமோ போன்ற வார்த்தைகளே இங்கு தவறாக பார்க்கப்படுகிறது, பிரயோகிக்கப்படுகிறது.

புரிதலை மாற்றியுள்ளது

புரிதலை மாற்றியுள்ளது

இந்த வழக்கும், மனுதாரர்கள் உடன் நான் பேசியதும், நான் கலந்து கொண்ட கவுன்சிலிங்கும் எனது புரிதலை மாற்றியுள்ளது. எல்ஜிபிடிக்யூ + சமூகத்தினர் குறித்த முன்முடிவுகளை நான் மாற்றிக்கொண்டேன். என்னை இருளில் இருந்து வெளியே கொண்டு வந்த ஆசிரியராக இந்த வழக்கையும், மனுதாரர்களையும், இந்த கவுன்சிலிங்கையும் நான் பார்க்கிறேன். எல்ஜிபிடிக்யூ + சமூகத்தினரை சமமாக பார்க்கக் வேண்டிய, சமமாக நடத்த வேண்டிய, அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டிய சூழ்நிலையில், கட்டாயத்தில் நாம் இருக்கிறோம், என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டார்.

எல்ஜிபிடிக்யூ

எல்ஜிபிடிக்யூ

இந்த வழக்கில் மேலும் உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எல்ஜிபிடிக்யூ + சமூகத்தினரை பாதுகாக்கும் வகையில் திட்டங்களை கொள்கைகளை வைக்கும் குழுவை உருவாக்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் இதற்காக திட்டங்களை கொண்டு வர வேண்டும். எல்ஜிபிடிக்யூ + சமூகத்தினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முறையற்ற பாலின மாற்று அறுவை சிகிச்சை தடை செய்ய வேண்டும், அந்த செயலில் ஈடுபடும் மருத்துவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும்.

போலீஸ்

போலீஸ்

அதோடு போலீஸ் தொடங்கி நீதித்துறை வரை அனைவருக்கும் எல்ஜிபிடிக்யூ + சமூகத்தினர் குறித்த விழிப்புணர்வை வேண்டும். எல்ஜிபிடிக்யூ + சமூகத்தினருக்கு சம உரிமை வழங்க வேண்டும். இவர்களுக்கான தனி கழிப்பறை ஏற்படுத்த வேண்டும். ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் இதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். .

English summary
Historical order: Madras HC uplifts LGBTQIA+ Community right, Judge explains the change in his prejudice after the counseling.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X