சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ப்ளான் பண்ணி தான் பன்றாங்க..! ஒன்றிய அரசின் சமஸ்கிருத திணிப்பு முயற்சி.. ஆவேசமான எம்பி சு.வெங்கடேசன்

Google Oneindia Tamil News

சென்னை : முதலாமாண்டு மருத்துவ கல்லூரி மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில், ஒன்றிய அரசின் சமஸ்கிருத திணிப்பு முயற்சியின் பகுதியாகவே இந்த வழிகாட்டுதல் செய்யப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

நேற்று மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழகத்தின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.

மேலும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் அணிசேகர் மதுரை மாநகர் மேயர் இந்திராணி பொன் வசந்த் ஆகியோரும் பங்கேற்றனர்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருத உறுதிமொழி தவறான விஷயம்.. அமைச்சர் மா.சு! மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருத உறுதிமொழி தவறான விஷயம்.. அமைச்சர் மா.சு!

மதுரையில் அதிர்ச்சி

மதுரையில் அதிர்ச்சி

அப்பொழுது முதலாம் ஆண்டை சேர்ந்த மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர் உறுதிமொழியில் கிப்போ கிராட்டிக் ஓத் (hippocratic oath) உறுதிமொழிக்கு பதிலாக மக ரிஷி சரத் சப்த் என்று அழைக்க கூடிய சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழகத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

டீன் நீக்கம்

டீன் நீக்கம்

இதனையடுத்து மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு இது குறித்து விளக்கம் அளிக்க மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பினார் நோட்டீஸ் அனுப்பிய சில மணி நேரங்களிலேயே மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலு அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

Recommended Video

    மதுரை: கல்லூரியில் சமஸ்கிருத உறுதிமொழி...காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட டீன்!
    சமஸ்கிருதத்தில் உறுதி மொழி

    சமஸ்கிருதத்தில் உறுதி மொழி

    மட்டுமல்லாமல் தமிழகத்தில் அனைத்து மருத்துவ கல்லூரியும் முதலாம் ஆண்டு மாணவர்கள் எப்போதும் எடுக்கக்கூடிய முறைப்படி உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

    சு.வெங்கடேசன் கண்டனம்

    சு.வெங்கடேசன் கண்டனம்

    இந்நிலையில் சமஸ்கிரதத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட செய்தி அதிர்ச்சியைத் தருகிறது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கூறியுள்ளார் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரம் சப்த் உறுதிமொழி எடுத்துக்கொண்ட செய்தி அதிர்ச்சியை தருகிறது. ஒன்றிய அரசின் சமஸ்கிருத திணிப்பு முயற்சியின் பகுதியாகவே இந்த வழிகாட்டுதல் செய்யப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்தியது வன்மையான கண்டனத்திற்கு உரியது." என கூறியுள்ளார்.

    English summary
    Member of Parliament Su Venkatesh strongly condemned the guidelines as part of the union government Sanskrit dumping effort in the matter of pledging in Sanskrit at the first year medical college students' reception.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X