அடுத்த விக்கெட் காலி.. ஆடிப்போன ஓபிஎஸ் தரப்பு.. எடப்பாடி அணிக்கு தாவிய மைத்ரேயன்!
x
சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் எம்பி உறுப்பினருமான மைத்ரேயன் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மாறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் நாளை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் சந்தித்து ஆதரவை பெற்று வருகிறார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு மொத்தமுள்ள 75 மாவட்டச் செயலாளர்களில் 60 க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஓபிஎஸ்ஸுக்கு தற்போது வரை 6 மாவட்டச் செயலாளர்கள்தான் இருக்கிறார்கள்.

6 பேரும்
இந்த 6 பேரும் எப்போது வேண்டுமானாலும் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார். அப்போது அவருக்கு ஆதரவாக மைத்ரேயன், ஆறுக்குட்டி எம்எல்ஏ, மாஃபா பாண்டியராஜன், கேபி முனுசாமி, மறைந்த பிஎச் பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

10 எம்எல்ஏக்கள் ஆதரவு
ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 10 எம்எல்ஏ இருந்தனர். இந்த நிலையில் முன்னாள் எம்பி மைத்ரேயன் கடந்த 5 ஆண்டுகளாக ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக இருந்து வந்தார். அது போல் அதிமுகவின் இரு அணிகளும் 6 மாதங்களில் இணைந்த போது அணிகள் இணைந்தாலும் முகங்கள் இணையவில்லை என முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஓபிஎஸ் அணி
அதாவது ஓபிஎஸ் அணியில் இடம்பெற்றிருந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்பதை அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டியிருந்தார். கடந்த 14 ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட செல்போனை எடுத்துச் செல்லக் கூடாது என கூறியதால் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேறினார் மைத்ரேயன்.

அதிமுகவில் பிரச்சினை
அதிமுகவில் பிரச்சினை அதிகரிக்க அதிகரிக்க ஓபிஎஸ்ஸுடன் பக்கபலமாக இருந்தார். நேற்று முன் தினம் கூட ஓபிஎஸ் தரப்பினர் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் மைத்ரேயன் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

முக்கியத் தலைவர்கள்
ஓபிஎஸ்ஸுடன் இருந்த முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவராக கரைந்து எடப்பாடி பழனிச்சாமி பக்கம் செல்கிறார்கள். மீதமுள்ள வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், குன்னம் ராமசந்திந்திரன் உள்ளிட்டோர் எந்த நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பது போக போகத்தான் தெரியும்.
-
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
எம்.ஜி.ஆர் சொன்ன திருடன் போலீஸ் கதை! கருணாநிதி சொன்ன கட்டுமரக் கதை! - 1980ல் மீண்டும் அதிமுக ஆட்சி -
நயன்தாரா பெயரை தவறாக சொல்லிவிட்டேன்.. எந்த உள்நோக்கமும் இல்லை.. வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம்! -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்! -
2021 தேர்தல் முடிவுகள்.. மக்கள் மனநிலையை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டிய கருத்துக் கணிப்புகள்! -
5 வருஷமா மறக்க முடியல.. 2021ல் ஜஸ்ட் பாஸ்ஸில் வென்ற எம்.எல்.ஏ.க்கள்! தி-நகர் ரிசல்ட் தான் ஹைலைட்டே! -
தமிழ்நாடு, புதுச்சேரியில்.. தேர்தல் ரிசல்டை தீர்மானிக்க போகும் 5 மேஜர் விஷயங்கள்! இதுதான் பிரச்சனையே -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
‘என்ன ஓபிஎஸ் எவ்வளவு செலவு செய்வீங்க’.. நேர்காணலுக்கு தயாரான ஸ்டாலின்.. பரபரக்கும் போடிநாயக்கனூர் -
லால்குடியில் களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவை பரிசு மழையில் நனைய வைத்த லீமா ரோஸ்! -
நயன்தாரா: சி.வி.சண்முகம், திண்டுக்கல்லார் பேச்சு வைரலாகியும் அதிமுக தலைமை ஏன் மவுனம்? என்ன நடக்கிறது -
"விசில்" நம் தேசிய கீதம்.. மேடையில் ஓப்பனாக பேசிய ஓ.பன்னீர்செல்வம்












Click it and Unblock the Notifications