அந்தரங்க அறையான ஆஸ்பத்திரி..அறைகுறை ஆடையுடன் சிக்கிய நபர்! கூட இருந்தது நர்ஸா? புகாரும்..விளக்கமும்!
கோவை: கோவை மாவட்டம் வடவள்ளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து படுக்கையறையாக பயன்படுத்தி வந்ததாக வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதில்," தினசரி நாளிதழ்கள் மற்றும் செய்தி சேனல்களில் வடவள்ளி நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பாக மாற்றி பயன்படுத்தி கொண்டிருப்பதாக செய்திகள் வரப்பட்டுள்ளது.
அதன் அறிக்கை கீழ் வருமாறு," கோயம்புத்தூர் மாநகராட்சி கடந்த 2011-12-ம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது அப்போது வடவள்ளி பகுதி கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. ஊரக பகுதியில் செயல்பட்டு வந்த வடவள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

வடவள்ளி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டிட வசதி இல்லாததால் வடவள்ளி பெரியார் நகரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு அறை மட்டுமே கொண்ட கட்டிடத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. வடவள்ளி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 14.02.2026 அன்று மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
தற்போது புகார் பெறப்பட்ட உள்ள கட்டிடம் தேசிய நகர்புற வளர்ச்சி நிதியின் கீழ் முதலில் வடவள்ளி நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய பயன்பாட்டிற்காக கட்டப்பட்டது. கட்டிடம் நான்கு அறைகள் மட்டுமே கொண்ட சிறிய கட்டிடமாக உள்ள நிலையில் கட்டிடம் துணை சுகாதார நிலையமாக செயல்பட்டு வருகிறது.
கடந்த மே 2025 முதல் மேற்கண்ட துணை சுகாதார நிலைய கட்டிடத்தில் திருமதி.கனிதா என்ற நகர்புற சுகாதார செவிலியர் குடியமர்த்தம் செய்யப்பட்டு திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனைகள் புதன் கிழமைகளில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் செலுத்துதல் மற்றும் சிறு உபாதைகளுக்கான சிகிச்சைகள் தினம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமதி கனிதாவின் கணவர் திரு ஷ்யாம் சுந்தர் பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பாக பயன்படுத்துவதாக புகார் பெறப்பட்டது.
அந்த துணை சுகாதார நிலையம் இன்று ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு செய்தபோது சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் திருமதி கனிதா மற்றும் அவரது கணவர் திருமதி. ஷ்யாம் சுந்தர் வீட்டு உபயோகப் பொருட்களை வைத்திருந்தனர். மேலும், அந்த துணை சுகாதார பகுதில் மேற்படி பொருட்களை பயன்டுத்தியதற்காக அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பபட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இதை கவனிக்க தவறிய மாநகர சுகாதார அலுவலர் அவர்களுக்கு விளக்கம் கோரப்பட்டுள்ளது. தற்போது இருக்கின்ற நான்கு அறைகளில் இரண்டு அறைகள் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஒதுக்குமாறும் இரண்டு அறைகளை மட்டும் தங்குவதற்கும் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது. நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் என்ற பெயரை துணை சுகாதார நிலையம் என மாற்றி எழுதவும், சிகிச்சை அறைகளுக்கும் குடியிருப்பு பகுதிக்கும் இடையில் தடுப்பு சுவர் எழுப்பவும் குடியிருப்பு பகுதிக்கு தனி வாசல் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது." என கூறப்பட்டுள்ளது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications