Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜேந்திர பாலாஜி மீது வரிசையாக வரும் புகார்கள்.. வெயிட் அண்ட் சி.. டிவிஸ்ட் வைக்கும் அமைச்சர் நாசர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இது தொடர்பாக புகார்கள் வந்த நிலையில் ராஜேந்திரபாலாஜி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்படலாம் என்பதை அறிந்து அவர் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

 தலைமறைவான ராஜேந்திர பாலாஜி

தலைமறைவான ராஜேந்திர பாலாஜி

ஆனால் இந்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் ராஜேந்திரபாலாஜியை கைது செய்யலாம் என்று போலீசாருக்கு அனுமதி அளித்தது. இந்த தகவல் அறிந்தவுடன் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகி விட்டார். 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் ராஜேந்திரபாலாஜி எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

பொறுத்து இருந்து பாருங்கள்

பொறுத்து இருந்து பாருங்கள்

இந்த நிலையில் ராஜேந்திரபாலாஜி மீது மேலும் பல புகார்கள் அடுத்தடுத்து வந்துள்ளதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருவள்ளூரில் நிருபர்களிடம் பேட்டியளித்த அவர், ' வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த முன்னாள் அமைச்சர் மீது பல புகார்கள் வந்துள்ளது. பொறுத்து இருந்து பாருங்கள். தற்போதைய ஆட்சியில் எதிர்கட்சி மட்டுமல்ல; ஆளும்கட்சி தவறு செய்தால் கூட முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கைவிரித்து விட்டனர்

கைவிரித்து விட்டனர்

இதனால் முன்னாள் அமைச்சர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சாமு நாசர் கூறினார். இதன்பிறகு மேலும் பேசிய அமைச்சர், ' தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை துவங்கியபோது தங்கள் கைகளை மீறி போய்விட்டதாக கடந்த ஆட்சியாளர்கள் உயர்நீதிமன்றத்தில் கைவிரித்து விட்டனர்.

Recommended Video

    களமிறக்கப்பட்ட போலீஸ் சிறப்பு தனிப்படை.. Rajendra Balaji தலைமறைவு
    மு.க.ஸ்டாலின் திறமை

    மு.க.ஸ்டாலின் திறமை

    ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறமையாக கையாண்டு மக்களை காப்பாற்றினார்.அதே போன்று தற்போது ஒமிக்ரான் வைரஸ், மூன்றாம் நிலை வந்தாலும் தமிழக அரசும் முதல்வரும் அதனை திறம்பட எதிர்கொள்வார்கள் என்று அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+