"வருங்கால முதல்வர்” கோஷம்.. உடனே கண்டித்த வைகோ! “நாங்கள் வாக்கு வங்கி கட்சி அல்ல” மேடையிலேயே பேச்சு
சென்னை: மதிமுக தொண்டர்கள் வைகோ வரும்போது 'வருங்கால முதல்வர்' கோஷமிட்டதை வைகோ கண்டித்துள்ளார். மேலும் "நாங்கள் பெரிய வாக்கு வங்கியை பின்னணியாகக் கொண்ட கட்சி என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. அதேபோல், எந்தக் காலத்திலும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று முழங்கியதும் இல்லை" என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மதிமுக பேரூர் செயலாளர் கருணாநிதி இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மணமக்களை வாழ்த்திப் பேசினார். வைகோ மேடைக்கு வந்தபோது, உற்சாகமடைந்த தொண்டர் ஒருவர், "வருங்கால முதலமைச்சரே வாழ்க!" என உரக்க முழக்கமிட்டார். இதைக் கேட்ட வைகோ, உடனடியாக கண்டித்தார்.

வைகோ பேசும்போது, "நான் திருமண மண்டபத்திற்குள் நுழையும்போது ஒருவர் 'வருங்கால முதல்வர்' என முழக்கமிட்டார். இது எனக்குத் தேவையில்லாத ஒன்று. கட்சி தொடங்கிய காலத்திலேயே இத்தகைய கோஷங்களை நான் தடுத்து நிறுத்திவிட்டேன். இப்போதும் சொல்கிறேன், எங்களுக்கு அத்தகைய ஆசை ஏதுமில்லை.
மதிமுக ஒரு மிகப்பெரிய வாக்கு வங்கியைத் தன்வசம் வைத்திருக்கும் கட்சி என்று நான் என்றுமே தம்பட்டம் அடித்ததில்லை. அதேபோல், ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் அரசியல் செய்யவில்லை. லட்சியங்களுக்காகவும், மக்களுக்காகவும் மட்டுமே எங்களது பயணம் தொடர்கிறது" எனத் தெரிவித்தார்.
சமீபகாலமாக தமிழக அரசியலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற குரல் விவாதம் ஆகி வருகிறது. இது குறித்துச் செய்தியாளர்கள் வைகோவிடம் கேள்வி எழுப்பினர். "திமுக கூட்டணியில் நீடிக்கும் நீங்கள், ஆட்சியில் பங்கு கோரிக்கை குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?" எனப் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அந்தக் கேள்விக்குப் பதிலளிக்காத வைகோ, சட்டென தனது காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார்.
-
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன? -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!












Click it and Unblock the Notifications