சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சினிமா,டிவி படப்பிடிப்புகள் எப்படி நடக்கணும் - மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறை ரிலீஸ்

சினிமா படப்பிடிப்பின் போது கேமராவிற்கு முன்பு நிற்பவர்களைத் தவிர அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சினிமா, டிவி படப்பிப்பின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமு

Google Oneindia Tamil News

சென்னை: சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்பு தளத்தில் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், எச்சில் துப்பக்கூடாது கேமராவிற்கு முன்பு நிற்பவர்களைத் தவிர அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சினிமா, டிவி படப்பிப்பின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Recommended Video

    Surya Soorarai Pottru OTT Release | பின்னணி என்ன?

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. கடந்த 150 நாட்களாக திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகள் இல்லாமல் பல லட்சக்கணக்கான மக்கள் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். சில இடங்களில் டிவி சீரியல் மட்டும் கடும் கட்டுப்பாடுகளுடன் குறைவான தொழிலாளர்களுடன் நடைபெற்று வருகிறது.

    MIB India have released general principles media production industry

    இந்த நிலையில் மத்திய அரசுக்கும், அந்தந்த மாநில அரசுகளுக்கும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலதரப்பில் இருந்தும் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இயக்குநர் பாரதிராஜாவும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் ஜவடேகர், மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்தால் சினிமா ஷூட்டிங்

    நடத்தப்படலாம் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்த வெளியான அறிவிப்பினை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் பிரகாஷ் ஜவடேகர்.

    MIB India have released general principles media production industry

    v

    மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்:

    ஆரோக்கிய சேது ஆப் பயன்படுத்த வேண்டும். படப்பிடிப்பு நடைபெறும் போது அனைவரும் 6 அடி தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்த வேண்டும்.

    படப்பிடிப்பு தளத்தில் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், எச்சில் துப்பக்கூடாது. கேமரா முன்பு நடிப்பவர்களைத் தவிர அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் மாஸ்க் அணிந்து இருப்பது அவசியம்.

    புதிய கல்விக்கொள்கை பற்றி உங்க கருத்தை சொல்லுங்க - ஆசிரியர்களிடம் கருத்து கேட்கும் மத்திய அரசுபுதிய கல்விக்கொள்கை பற்றி உங்க கருத்தை சொல்லுங்க - ஆசிரியர்களிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு

    உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கையுறை கட்டாயம் அணிய வேண்டும். மைக் போன்ற பொருட்களை பயன்படுத்திய பிறகு நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். உடைகள், விக், ஒப்பனை பொருட்களை பகிர்ந்து கொள்வதை முடிந்து அளவிற்கு தவிர்க்க வேண்டும்.

    நடிகர்களும் கேமரா முன் நிற்கும்போது தவிர மற்ற நேரங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். மேக் அப் போடும் கலைஞர்கள் பாதுகாப்பு கவசம் உடைகள் அணிய வேண்டும்.

    வெளிப்புற படப்பிடிப்பின்போது கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Today MIB India have released a detailed SOP for resuming work in the media production industry. The general principles behind the SOP will help create a safe working environment for cast and crew in the industry PrakashJavdekar post his twitter page.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X