அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு எதிரொலி... முல்லை பெரியாறு அணைக்கு செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்..!
சென்னை: முல்லைப் பெரியாறு அணையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை நேரில் பார்வையிடுகிறார்.
முல்லை பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்கு அண்மையில் தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் உரிமையை திமுக அரசு விட்டுக்கொடுப்பதாக விமர்சனங்கள் எழத் தொடங்கின. மேலும், இந்த விவகாரத்தை மையமாக வைத்து தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களிலும் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனிடையே முல்லை பெரியாறு அணையிலிருந்து கேரளப் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதை கண்டித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர். லோயர் கேம்பில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் கூட நடத்தினர்.
முல்லை பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்ட விவகாரம் இப்படி நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை முல்லை பெரியாறு அணைக்கு செல்கிறார். இதற்காக சென்னையிலிருந்து மதுரை வரை விமானம் மூலம் செல்லும் அவர் அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக பயணிக்கிறார்.
முல்லை பெரியாறு அணை தமிழகத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பதாகவும் தமிழகத்தின் உரிமை விட்டுக்கொடுக்கப்பட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் துரைமுருகன் வருகையை ஓட்டி தமிழக நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் முல்லைப் பெரியாறு அணையில் இன்றே முகாமிடுகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு தேக்கடியில் தங்கி முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தும் திட்டத்தில் இருக்கிறார் அமைச்சர் துரைமுருகன். படகில் சென்று அமைச்சர் துரைமுருகன் ஆய்வு நடத்தவுள்ளதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பிலும், தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பிலும் செய்யப்பட்டுள்ளன.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications