அதிமுக ஆட்சியில் எவ்ளோ.. இப்போ எவ்ளோ? ‘லிஸ்ட்’ போட்டு பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி!
சென்னை : மாண்டஸ் புயலின்போது தமிழ்நாடு அரசின் மின் வாரியம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும் பராமரிப்பு பணிகளாலும், மாண்டஸ் புயலால் 1134 மின் கம்பங்கள் மட்டுமே சேதமடைந்துள்ளன எனத் தெரிவித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியின்போது ஏற்பட்ட புயல்களின்போதான மின் கம்ப சேதம் குறித்த பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.
2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் ஏற்பட்ட தானே, கஜா, நிவர் உள்ளிட்ட புயல்களால் ஏற்பட்ட சேத விவரத்தை வெளியிட்டுள்ள செந்தில் பாலாஜி, தற்போதைய திமுக அரசின் நடவடிக்கையால் 1,134 மின் கம்பங்கள் மட்டுமே சேதமடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் திமுக அரசு மெத்தனம் காட்டியதாக விமர்சித்த நிலையில் அதற்கு பதிலடியாக இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

மாண்டஸ் புயல் சேதம்
மாமல்லபுரம் அருகே கடந்த டிசம்பர் 9ஆம் தேதி இரவு கரையை கடந்த மாண்டஸ் புயலால், சென்னை நகரில் 400க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதேபோல் 200க்கும் மேற்பட்ட மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. காற்றின் சீற்றம் காரணமாக மின் கம்பங்கள், 200க்கும் மேற்பட்ட சாலைகள், 15க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களும் சேதம் அடைந்தன. மேலும், புயல் மற்றும் சூறைக்காற்றால் மெட்ரோ ரயில் நிலையங்களின் மேற்கூரைகள் சேதமடைந்தன. சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிலைமையை சீரமைக்க களப்பணியில் ஈடுபட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெருமளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது. மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தன. 17 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இந்தப் பணிகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டனர். புயல் கரையைக் கடந்துகொண்டிருந்த நேரத்தில் சுமார் 5000 பணியாளர்களும் ஒட்டுமொத்தமாக 25,000 பணியாளர்களும் புயல் தொடர்பான நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மின்துறை அமைச்சர்
புயல் காற்றால் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக 10 துணை மின் நிலையங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 600 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், புயல் கரையைக் கடந்தபிறகு அடுத்த நாள் மதியத்திற்குள் பாதி இடங்களுக்கு மேல் மின் இணைப்புகள் சரிசெய்யப்பட்டன. மீதி இடங்களிலும் விரைந்து மின்சாரம் தரப்பட்டதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அப்போது தெரிவித்தார். எனினும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புயல் நடவடிக்கைகளில் திமுக அரசு மெத்தனம் காட்டியதாக விமர்சித்தன.

செந்தில் பாலாஜி ட்வீட்
மேலும், வர்தா, கஜா புயல் போன்றவற்றின்பொது அதிமுக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் அதிமுகவினர் கூறி வந்தனர். இந்நிலையில், அதிமுக ஆட்சியின்போது ஏற்பட்ட புயல் பாதிப்புகளின் போது ஏற்பட்ட மின் கம்பங்கள் சேதத்தையும், தற்போதைய நிலவரத்தையும் ஒப்பிட்டு பட்டியல் போட்டு ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

அன்றும் - இன்றும்
இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, "தேனினும் இனிய தமிழ் பேசிடும் மக்கள், வானினும் உயர்வாக வணங்கிடும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு மின் வாரியம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும் பராமரிப்பு பணிகளாலும், மாண்டஸ் புயலால் 1134 மின் கம்பங்கள் மட்டுமே சேதமடைந்துள்ளன.
2011 : தானே புயலால் 52,000 மின் கம்பங்கள் சேதம்.
2016 : வர்தா புயலால் 49,100 மின் கம்பங்கள் சேதம்.
2017 : ஒக்கி புயலால் 15,858 மின் கம்பங்கள் சேதம்.
2018 : கஜா புயலால் 3.30 லட்சம் கம்பங்கள் சேதம்.
2020 : நிவர் புயலால் 8,000 மின் கம்பங்கள் சேதம்.
எனத் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications