சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

Recommended Video

    NEET, JEE தேர்வுகளுக்கு எதிராக ஒன்றிணையும் முதல்வர்கள்.. உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு

    இந்த ஆண்டு நீட் தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.

    இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் எழுதி உள்ளார்.

    ஜிஎஸ்டி இழப்பீடு எங்கே... நீட் ஜெஇஇ... ஒத்தி வைக்க வேண்டும்... பஞ்சாப் முதல்வர் கொதிப்பு!!ஜிஎஸ்டி இழப்பீடு எங்கே... நீட் ஜெஇஇ... ஒத்தி வைக்க வேண்டும்... பஞ்சாப் முதல்வர் கொதிப்பு!!

    நீட் தேர்வு ரத்து

    நீட் தேர்வு ரத்து

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    பிரதமருக்கு கோரிக்கை

    பிரதமருக்கு கோரிக்கை

    ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார்.

    தொற்று பாதிப்பு

    தொற்று பாதிப்பு

    தமிழக அரசு தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து வருவதையும், அதற்கான சட்ட போராட்டங்களையும் தாங்கள் நன்கு அறிவீர்கள். மத்திய அரசும், தமிழக அரசும் கொரோனா தொற்று எதிராக தீவிரமாக கடந்த சில மாதங்களாக போராடி வருகின்றன. இந்த சூழலில் நீட் தேர்வை நடத்துவது மாணவர்களுக்கு தொற்று பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. அத்துடன் கொரோனா தொற்றுக்கு நடுவே நீட் தேர்வுக்கு தயாராவது மாணவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.

    மாணவர் சேர்க்கை

    மாணவர் சேர்க்கை

    எனவே மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டு 12ம் வகுபபு தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன். தமிழகம் ஏற்கனவே 12ம் வகுப்பு தேர்வை நடத்தி முடித்து, முடிவுகளை வெளியிட்டு விட்டது என்பதையும் தங்களிடம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதத்தில் கூறியுள்ளார்.

    English summary
    Tamil Nadu Health Minister Vijayabaskar has written a letter to the Central Government urging it to cancel the current NEET exam due to the coronavirus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X