சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டாலின்தான் முதல் எதிரி.. திமுகதான் பெரிய போட்டி.. பாஜகவினரிடம் மோடி பேச்சு!

லோக் சபா தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின்தான் பாஜகவின் முதல் எதிரி என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: லோக் சபா தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின்தான் பாஜகவின் முதல் எதிரி என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பாஜக உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் பேசினார். கடந்த ஒரு வாரமாக புதுச்சேரி மற்றும் தமிழக உறுப்பினர்களுடன் மோடி மாற்றி மாற்றி பேசி வருகிறார்.

லோக் சபா தேர்தலை முன்னிட்டு மோடி உறுப்பினர்களை சந்தித்து இப்படி பேசி வருகிறார். இந்த முறை மோடி தமிழகத்தில் அதிக கவனம் செலுத்தி உள்ளதாக தகவல்கள் வருகிறது.

முக்கிய விஷயம்

முக்கிய விஷயம்

இதில் பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. இதில் பிரதமர் மோடி தமிழகத்தில் வைக்க போகும் தேர்தல் கூட்டணி குறித்து விளக்கம் அளித்தார். அதில், தமிழகத்தில் பாஜக கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது. பழைய நண்பர்களை இணைத்துக்கொள்ள தயார்; வாஜ்பாய் வழியில் தமிழகத்தில் கூட்டணி அமைக்கப்படும் என்று மோடி குறிப்பிட்டு இருந்தது பெரிய வைரலானது.

விளம்பரம் கிடைக்கும்

விளம்பரம் கிடைக்கும்

இந்த கான்பிரன்ஸ் மூலம் தமிழகத்தில் பாஜகவிற்கு நல்ல விளம்பரம் கிடைக்கும். பாஜக உறுப்பினர்கள், தொண்டர்கள் இதனால் மகிழ்ச்சி அடைவார்கள். தேர்தல் பணிகள் சுறுசுறுப்பாக நடக்கும். தமிழக கட்சிகளும் இதனால் கூட்டணிக்கு தயாராகும் என்று மோடி, இந்த கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தயார் ஆனது

தயார் ஆனது

இந்த கூட்டத்தில் மோடி, லோக்சபா தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ.க தயாராகிவிட்டது. நமக்கு முக்கிய எதிரி ஸ்டாலின்தான். தி.மு.க. வெற்றி பெறாமல் தடுக்க, அனைத்து விதமான தேர்தல் முயற்சிகளையும், பா.ஜ.க எடுக்கும், ஏற்கனவே எடுத்து வருகிறது

வாய்ப்பு அமையும்

வாய்ப்பு அமையும்

தமிழகத்தில் பாஜகவிற்கு நல்ல வாய்ப்பு அமையும். இங்கும் பாஜகவிற்கு இடம் உள்ளது. கேரளாவில் சபரிமலை பிரச்சனையால் பாஜக பலன் பெற்றுள்ளது. அதே மாதிரி தம்மிகத்திலும் வாய்ப்பு வரும். அப்படி ஒரு சாதகமான சூழ்நிலை உருவாக்கப்படும் என்று மோடி தமிழக தலைவர்களிடம் பேசியுள்ளார்.

English summary
MK Stalin and DMK are our first enemies says, PM Modi in the meeting with Tamilnadu BJP cadres.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X