தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை..ஆனாலும் கவனம் தேவை - டாக்டர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இதுவரை இல்லை என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இதுவரை இல்லை என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவை பார்வையிட்டு, இந்த வார்டில் அமையவுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் ஆலோசனை வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ண்ணன், தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ளது என்றும், இருப்பினும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார். தடுப்பூசி அதிகம் செலுத்திக் கொண்டதால் நோய்எதிர்ப்பு அதிகரித்து உள்ளதாகவும், இருந்தாலும் கவனக் குறைவாக இருக்க கூடாது எனவும் கூறினார்.
குரங்கு அம்மை நோய்க்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கு அம்மை நோய்க்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி 1.22 கோடி பேர் இதுவரை போட்டுக்கொள்ளவில்லை.
தமிழகத்தில் கொரோனா 100 க்கு கீழே தான் பரவி உள்ளது. பொதுமக்களுக்கு வேண்டுகோள் மெகா தடுப்பூசி முகாமில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். விமான நிலையங்களில் பயணிகளிடம் சோதனை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பயோ மெட்ரிக் முறையை அடிப்படையாக படிப்படியாக அனைத்து மருத்துவ மனைகளும் செயல்படுத்த உள்ளோம். மருத்துவமனையில் மருத்துவர்கள் வராமலிருந்தால் நோயாளிகளே புகார் செய்யலாம். தவறு செய்யும் மருத்துவர்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
செல்போனை வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்டர்நெட் அடிக்சன் மையம் திறக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்களுக்கு ஆலோசனையும் சிகிச்சையும் வழங்கப்படும். பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு பரிசீலனை நடந்து வருகிறது என தெரிவித்தார்.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications