சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முல்லை பெரியாறு: ஒன்று சேர்ந்து கூட்டாக அறிக்கைவிட்ட ஓபிஎஸ், இபிஎஸ்! ஐந்து மாவட்டங்களில் போராட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்படாமல், கேரளத்தின் நிர்பந்தம் காரணமாக நீர் இருப்பை குறைந்ததாக கூறி திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பில் தேனி,திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "எப்பொழுதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ் நாட்டின் அடிப்படை உரிமைகளை, அந்தக் கட்சியினர் அடகு வைப்பதும், தங்கள் சுயநலனுக்காகவும், அரசியல் அழுத்தங்களினாலும் தமிழ் நாட்டின் ஜீவாதார உரிமைகளை பலி கொடுப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

தென் தமிழ் நாட்டில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட மக்களின் வேளாண்மை மற்றும் குடிநீர் தேவைகளுக்கான முக்கிய ஆதாரமாக விளங்குவது வைகை ஆற்றில் ஓடிவரும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் ஆகும். தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகள் உள்ளடங்கிய நிலப் பரப்பில், மக்கள் பாசனத்திற்கும், குடிதண்ணீர் தேவைகளுக்கும் தண்ணீரின்றி அல்லற்பட்டு வறுமையில் வாடி, அவற்றின் விளைவாக சமூகம் நலிவடைந்து இருந்ததைக் கண்டு அந்த மக்களின் துயர் துடைப்பதற்கென்று, மறைந்த மனிதாபிமான பெருந்தகை, போற்றுதலுக்குரிய பென்னி குவிக் அவர்கள் தனது சொந்த செல்வத்தையும் வழங்கி கட்டிய அணை முல்லைப் பெரியாறு அணையாகும்.

தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அதிமுக ஆட்டம் காணும் அளவுக்கு ஆட்டம்பாம் வைத்த சசிகலா தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அதிமுக ஆட்டம் காணும் அளவுக்கு ஆட்டம்பாம் வைத்த சசிகலா

விவசாயம் செழித்தது

விவசாயம் செழித்தது

முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்கப்பட்டு, அந்தத் தண்ணீர் மேற்சொன்ன 5 மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டதன் காரணமாகத் தான் அந்தப் பகுதிகளில் விவசாயம் செழித்தது: வறுமை நீங்கியது. பல லட்சக்கணக்கான மக்களுக்கு விவசாய வேலை வாய்ப்புகள் கிடைத்தன. எனவே, முல்லைப் பெரியாறு அணையும், அதில் தேக்கப்படும் தண்ணீரும் தமிழ் நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாய் விளங்குகின்றன என்பதை எப்பொழுதும் நினைவிற்கொண்டு தமிழ் நாடு அரசு செயல்பட வேண்டும்.

5 மாவட்ட மக்கள் பயன்

5 மாவட்ட மக்கள் பயன்

முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு உரியது என்பதையும்; அந்த அணை பாதுகாப்பாக இருக்கிறது என்பதையும்; அது எப்பொழுதும் தமிழ் நாடு அரசின் கட்டுப்பாட்டிலேயே தொடர வேண்டும் என்பதையும்; முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கப்படுவது சாத்தியமானது என்பதையும்; அதன் விளைவாக, தமிழகத்தின் 5 மாவட்டங்கள் பெரும் பயனடையும் என்பதையும், அசைக்க முடியாத புள்ளி விபரங்களோடு உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைத்து, வாதிட்டு, வெற்றி பெற்றவர் முன்னாள் முதல்வர் ஜெயலிதா என்பதை வரலாறு நமக்கு கூறிக்கொண்டே இருக்கிறது.

குடிதண்ணீர்

குடிதண்ணீர்

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கப்பட்டால்தான் தமிழ் நாட்டின் 5 மாவட்டங்களில் 7 லட்சம் விவசாயிகளின் பாசனத்திற்கும், 80 லட்சம் மக்களின் குடிதண்ணீர் தேவைகளுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்கும் என்பதை பல புள்ளி விவரங்களுடனும், ஆதாரங்களுடனும், உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைத்து கடும் சட்டப் போராட்டத்தை நடத்தினார் தம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட அந்த மாபெரும் முயற்சியின் காரணமாக முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்கு தண்ணீர் தேக்கி கொள்ளலாம் என்ற உறுதியான தீர்ப்பை 15 ஆண்டுகளுக்கு முன்னரே உச்சநீதிமன்றம் அளித்தது. அணையின் உறுதித் தன்மையை மேலும் நிலைநாட்டிக்கொண்டு 2 அடி அளவுக்கு தண்ணீர் தேக்கியும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கேரள சட்டம் செல்லாது

கேரள சட்டம் செல்லாது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிரமேற்கொண்டு எடுத்த முயற்சிகளால்,. 2014-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி (அதாவது 43.28 மீட்டர்) தண்ணீர் தேக்க அனுமதி அளித்தது மட்டுமல்லாமல், 2006-ல் கேரள சட்டமன்றத்தில் 136 அடி மட்டுமே தண்ணீர் தேக்க அனுமதிக்கும் வகையில் திருத்தப்பட்ட சட்டத்தையும் ரத்து செய்து, தமிழ் நாட்டு மக்களின் உரிமையை உறுதிபட நிலைநாட்டியது. அதனைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், பேபி அணை, சிற்றணை பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் 152 அடி நீரை தேக்கி வைத்துக்கொள்ளலாம் எனவும், இதற்கு கோன அரசு எந்தவித மறுப்பும் தெரிவிக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பில் கூறி உள்ளது.

திமுக அரசு

திமுக அரசு

ஆனால், ஜெயலலிதா அவர்களின் தொடர் சட்டப் போராட்டம் நடத்தி பெறப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு இன்றைக்கு கேள்விக்குறியாகி இருப்பதை கைக்கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்ற திமு.க. அரசின் மெத்தனப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
152 அடி தண்ணீர் தேக்கப்பட்டால் மட்டுமே கடைமடைப் பகுதிகளான சிவகங்கை சாாதபுரம் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கும். குடிதண்ணீர் தேவைகளுக்கும் தண்ணீர் உறுதி செய்யப்படும் என்பதை யதார்த்த நிலை தெளிவுபடுத்துகிறது.

கேரள அரசு

கேரள அரசு

கேரள அரசு மீண்டும், மீண்டும் முல்லைப் பெரியாறு அணை குறித்து உண்மைக்குப் புறம்பாகவும், தவறான தகவல்களின் அடிப்படையிலும் எழுப்பி வரும் பிரச்சனைகளுக்குப் பணிந்து, இரண்டு நாட்களுக்கு முன்னர் அணையில் நீர் 138 அடியை நெருங்கும் நேரத்திலேயே கோள அமைச்சர்கள், அதிகாரிகளை சாட்சிக்கு வைத்துக்கொண்டு தமிழ் நாடு அரசு நீரை திறக்க மதகுகளை உயர்த்தி இருக்கிறது.

உரிமை கேள்விக்குறி

உரிமை கேள்விக்குறி

முல்லைப் பெரியாறு அணை தமிழ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த் தேக்கம். அந்த அணையில் நீர் இருப்பை கண்காணிப்பது போல கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சாட்சிக்கு அழைத்து அவர்களது மேற்பார்வையில் மதகுகளைத் திறந்தது. முல்லைப் பெரியாறு அணையின் மீது தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை கேள்விக்குறியாக்கும் செயல் என்பதை நீண்ட அரசியல் அனுபவமுடைய அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு நினைவூட்டுகிறோம்.

சட்ட போராட்டம்

சட்ட போராட்டம்

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டு, அதன்மூலம் தென் தமிழ் நாட்டின் 5 மாவட்டங்களில், குறிப்பாக கடையடைப் பகுதியான சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் பாசனத்திற்கும் குடிநீர்த் தேவைக்கும் போதுமான தண்ணி இருப்பதை உறுதி செய்வதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 'முன்னெடுத்த சட்ட ரீதியான போராட்டங்களை நினைவில் கொண்டு, அப்போராட்டங்களின் மூலம் பெறப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிலைநாட்டும் வகையில் தற்போதைய தமிழ் நாடு அரசு உறுதித் தன்மையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

காவிரி நீர்

காவிரி நீர்

காவேரி நீர்ப் பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமைகளையும் பற்றில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளையும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விஷயங்களில் எந்தச் சூழ்நிலையிலும் உறுதி குலைத்துமிகளின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு செயல்படுவது மிகவும் இன்றியமையாத கடமை என்பதை திமுக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.

ஐந்து மாவட்டங்கள்

ஐந்து மாவட்டங்கள்

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனத் தேவையையும், குடிதண்ணீர் தேவைகளையும் கருத்தில் கொள்ளாமல் செயப்பட்டு வரும் திமுக அரசின் நிலைப்பாட்டினையும், மாநில மக்களின் உரிமைக்காகப் போராடுவதில் திமுக அரசு காட்டும் ஏனோதான மனநிலையையும் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகின்ற 09.11.2021 செவ்வாய்க் கிழமை காலை 11 மணியளவில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டத் தலைநகரங்களில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

சுயாட்சி உணர்வு

"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியு மாநில சுயாட்சிக் கொள்கைகளை உயிரௌப் போற்றுகின்ற இயக்கம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் மாநில சுயாட்சி உணர்வுகளோடு தமிழ் நாட்டு மக்களின் நலன் காக்க எப்பொழுதும் முன்களச் செயல் வீரர்களாகப் பணியாற்றும் இயக்கம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதார உரிமைகளைக் காக்க, கழகத்தின் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களில், விவசாயப் பெருங்குடி மக்களும், நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரனான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அறிக்கையில் ஓபிஎஸ் இபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

English summary
Mullaperiyar Dam issue: AIADMK has announced that protests will be held in Theni, Dindigul, Madurai, Sivagangai and Ramanathapuram districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X