’அக்னிபத்’ விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்! மோடி, அமித்ஷா திட்டமெல்லாம் சாபக்கேடு! சீறிய நாதக சீமான்!
சென்னை : நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே இராணுவப்பணியெனும் ஒப்பந்த அடிப்படையில் கொண்டுவரப்படும் 'அக்னிபாத்' எனும் புதிய ஆள்சேர்ப்பு முறையானது நாட்டின் பாதுகாப்பில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே பணியெனும் அடிப்படையில், இந்திய இராணுவத்தின் முப்படைகளுக்கு ஆள்சேர்க்கக் கொண்டுவரப்பட்டுள்ள 'அக்னிபாத்' எனும் புதிய நடைமுறையானது நாடெங்கிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதன் விளைவுகளை எண்ணிப்பார்க்கையில் பெரும் அச்சத்தைத் தருகின்றது. எட்டு ஆண்டுகால பாஜகவின் அரசாட்சியில் கொண்டுவரப்பட்ட பேரழிவுத் திட்டங்களுக்கெதிராக மக்கள் போராடும்போதெல்லாம், எல்லையில் நிற்கும் இராணுவ வீரர்களை நோக்கிக் கைகாட்டி மக்களின் வாயடைக்க முயன்ற பாஜக.

கடும் கண்டனம்
தற்போது இராணுவ வீரர்களின் மதிப்பையே குலைக்கும் வகையில் திட்டம் தீட்டியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்திய இராணுவத்தில் சேர உரிய கல்வித்தகுதியும், உடற்தகுதியும் இருந்தால், 17.5 வயது முதல் 21 வயது வரையிலான இருபாலரும் முப்படைகளில் சேரலாம்; ஆனால், அவர்களது பணிக்காலம் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகளென நிர்ணயம் செய்யப்பட்டு, பணிக்காலம் முடிந்ததும் 11 - 12 இலட்ச ரூபாய் நிதியுதவியோடு 75 விழுக்காட்டினர் வெளியேற்றப்படுவார்கள் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது மோசமான நிர்வாக முன்முடிவாகும்.

மிகத்தவறான நடைமுறை
நாட்டின் எல்லையைக் காக்க வேண்டுமெனும் அர்ப்பணிப்புணர்வோடும், தியாக மனப்பான்மையோடும் படைகளில் சேரும் இளைஞர்களைப் பணத்தைக் கொடுத்து நிறைவுறச்செய்து, நான்கே ஆண்டுகளில் வெளியேற்ற முனைவது மிகத்தவறான நடைமுறையாகும். முப்படைகளில் சேருவதை நாட்டுக்கு ஆற்றும் பெருந்தொண்டெனக் கருதி, இலட்சக்கணக்கான இளைஞர்கள் இராணுவத்தில் பணிபுரிய பயிற்சியும், முயற்சியும் எடுத்துக்கொண்டிருக்கையில், அவர்களது கனவினைப் பொசுக்கும் வகையில் ஒன்றிய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு இராணுவப்பாதுகாப்பு நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கிற மிகப்பெரும் சறுக்கலாகும்.

மவுனம் வெட்கக்கேடானது
இராணுவப் பயிற்சிபெற்று, அத்துறையில் பெரும் நாட்டம் கொண்டு நிற்கும் இளைஞர்களை இளம் வயதிலேயே அப்பணியிலிருந்து வெளியேற்றும்போது, அவர்களிடையே இது விரக்தி மனநிலையை ஏற்படுத்துவதோடு, அவர்களைத் தவறானப்பாதைக்கு இட்டுச்செல்லும் பேராபத்தும் உண்டு. அவ்வாறு செல்கிறபட்சத்தில், அவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கே எதிரானவர்களாக மாறி, விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடவும் கூடும். பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்படும் நிலையிலும் பாஜகவின் ஆட்சியாளர் பெருமக்கள் கள்ளமௌனம் சாதித்து, நாட்டில் நிலவும் கலவரச்சூழலையும் அமைதியாக வேடிக்கைப் பார்த்து நிற்பது வெட்கக்கேடானது.

நாட்டின் சாபக்கேடு
ஒன்றிய இணை அமைச்சரின் மகன் விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றிக்கொன்றாலும், நாடெங்கிலும் மக்கள் உரிமைகளுக்காகப் பெருந்திரளாகப் போராடினாலும், நாடு அசாதாரணச்சூழலை எதிர்கொண்டு, இந்தியாவின் ஓர்மை குறித்தானப் பெருமைகள் தகர்ந்துபோய், பன்னாட்டரங்கில் சந்தி சிரித்தாலும் எவ்விதக் கவலையுமற்று நிற்கும் இந்நாட்டின் ஆட்சியாளர்களான பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரது செயல்பாடுகள் இந்நாட்டின் சாபக்கேடாகும்.

அக்னிபாத் வேண்டாம்
'நாடு, 'நாடு' என்றுகூறி, நாளும் அரசியல் செய்திடும் ஒன்றிய அரசாட்சியின் பெருமக்கள், நாட்டைக் காக்கிற இலட்சணத்தை இத்திட்டமொன்றே மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் என்பது உறுதி. ஆகவே, நாட்டில் நிலவும் அசாதாரணச்சூழலை முடிவுக்குக் கொண்டு வர, இந்திய இராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் பணிக்குக் கொண்டு வந்திருக்கும், 'அக்னிபாத்' எனும் புதிய முறையை உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications