இந்த நமீதா நம்ம வனிதா அக்கா மாதிரி இருப்பாங்களோ.. ப்ரோமோவை கண்டு ஜட்ஜ் செய்யும் நெட்டிசன்கள்
சென்னை: பிக்பாஸ் முதல் ப்ரோமோ வெளியான நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள திருநங்கை நமீதா மாரிமுத்து நம்ம வனிதா மாதிரி இருப்பாய்ங்களோ என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டுள்ளார்கள்.
பிக்பாஸ் வீட்டின் காட்சிகள் தினந்தோறும் இரவு 10 மணிக்கு வெளியாகிறது. அதற்கு முன்னதாக தினமும் 3 ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிடுகிறது. நிகழ்ச்சிக்கு முன்னர் வெளியான இரு ப்ரோமோக்களில் பிக்பாஸ் வீடே ரணகளம் ஆகும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
அதாவது தற்போது பிக்பாஸ் வீட்டில் லக்சூரி டாஸ்கிற்கான டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு போட்டியாளரும் கடந்து வந்த பாதை குறித்து சொல்ல வேண்டும். நேற்றைய டாஸ்கில் இசைவாணியும் சின்னப்பொண்ணுவும் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து கூறிவிட்டனர்.

பிக்பாஸ் டைட்டில் வின்னர்
இன்றைய தினம் இமான் அண்ணாச்சி அவர் கடந்து வந்த பாதை குறித்து கூறுகிறார். அப்போது ஒரு காமெடி நடிகர் பிக்பாஸ் டைட்டில் வின்னராக வேண்டும் என்கிறார். அதற்கு நதியா , அதெல்லாம் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என்கிறார். அவரை தொடர்ந்து பேசும் நமிதா, கஷ்டப்படுறோம், கஷ்டப்படுறோம் என்று சொன்னால் எப்படி, கஷ்டப்பட்டால்தான் ஒரு நல்ல இடத்திற்கு போக முடியும் என்கிறார்.

நிரூபிற்கும் அபிஷேக்கிற்கும் சண்டை
அண்ணாச்சி பேசும் போது நிரூப் சிரித்ததை நடிகர் சிபி தட்டி கேட்கிறார். அதற்கு நிரூப்பும் அண்ணே சிரிச்சது தப்பா என கேட்கிறார். அதற்கு அண்ணாச்சி அதெல்லாம் இல்லையே சிரிக்கலாமே என்கிறார். எனினும் சிபி கோபமாக கத்திவிட்டு அந்த இடத்திலிருந்து வெளியேறுகிறார். அது போல் நிரூபிற்கும் அபிஷேக்கிற்கும் இடையே சண்டை நடக்கிறது.

வீட்ல சண்டை
அப்போது வாஷ் ரூமில் இருந்த நமிதா மாரிமுத்து, வீட்டுல சண்டை ஆரம்பிக்க போகுது என்கிறார். இதனால் இன்றைய நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ப்ரோமோவை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளார்கள். சிரித்தது ஒரு குத்தமாய்யா என கேட்டுள்ளார்கள். ப்ரோமோவுல இப்படிதான் கத்துவாங்க ஆனா எபிசோடை பார்த்தா புஸ்ஸுணு இருக்கும் என்கிறார் ஒரு வலைஞர்.

நமிதா வனிதா
காமெடி பன்றதுக்கெல்லாம் கோபம் படறீங்களா, இந்த பேட்ச் கொஞ்சம் வேற மாதிரி , அல்ட்டா ஆயிகோடா பிக்பாஸு என்கிறார் இன்னொரு வலைஞர். எனக்கு என்னமோ நமிதா வனிதா மாதிரி இருப்பாங்களோன்னு தோணுது என்கிறார் ஒரு வலைஞர். பிக்பாஸ் சீசன் 3 இல் வந்த வனிதா விஜயகுமார் கொளுத்தி போட்டு கொளுத்தி போட்டு வீட்டுக்குள் சண்டையை மூட்டி நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டை உயர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications