சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனிமேலும் நடுநிலையா? வாய்ப்பே இல்லை.. மொத்தமாக பாஜக பக்கம் சாய்ந்த ரஜினியின் ஆன்மீக அரசியல்!

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் முன்பே மொத்தமாக பாஜகவிற்கு ஆதரவளிக்க தொடங்கிவிட்டார்.

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் முன்பே மொத்தமாக பாஜகவிற்கு ஆதரவளிக்க தொடங்கிவிட்டார். இன்று கலைவாணர் அரங்கத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் பாராட்டி பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து இதோடு இரண்டு வருடம் ஆக போகிறது. ஆனால் இன்னும் அவர் நடிகர் ரஜினிகாந்தாக மட்டும்தான் இருக்கிறார். அரசியல்வாதி ரஜினியாக மாற அவர் ஏனோ தொடர்ந்து யோசித்து வருகிறார்.

சிஸ்டம் சரியில்லை என்று கூறிவிட்டு கட்சி அறிவிப்பை வெளியிட்ட ரஜினி தற்போது அதே சிஸ்டத்தை மெயின்டெய்ன் செய்து கொண்டு இருக்கும் அதிமுக தலைவர்களுடனும், பாஜக தலைவர்களுடனும் தான் நெருக்கமாக இருக்கிறார். அதிலும் இன்று அவர் சென்னையில் காஷ்மீர் பற்றி பேசியது எல்லாம் பக்கா பாஜக நிலைப்பாடு என்றுதான் கூற வேண்டும்.

இதற்கு முன்

இதற்கு முன்

ரஜினிகாந்த் இதற்கு முன்பே அதிமுக, பாஜக இரண்டிற்கும் ஆதரவாக பேசி இருக்கிறார். பத்து பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி.. மோடிதான் பலசாலி என்று பேட்டி அளித்துள்ளார். போலீஸ் மீது கை வைத்தது தவறு, தூத்துக்குடி போராட்டக்காரர்கள் எல்லாம் சமூக விரோதிகள் என்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது அதிமுகவிற்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனாலும் அவ்வப்போதும் கல்விக் கொள்கை போன்ற விஷயங்களில் அரசுக்கு எதிராக பேசி, நானும் ''மய்யம்தான்'' என்று நடுநிலையாக தன்னை காட்டிக்கொண்டார். ஆனால் இன்று சென்னையில் அமித் ஷா முன்பு ரஜினி சாந்தமாக சொன்ன கருத்துக்கள், அவர் இனியும் நடுநிலையாக இருப்பாரா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. அவர் கட்சி தொடங்குவாரா அல்லது பாஜக, அதிமுகவில் போய் ஐக்கியம் ஆக போகிறாரா என்ற கேள்வியை கூட இது உருவாக்கி உள்ளது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், காஷ்மீர் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். மிக முக்கியமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.அமித் ஷாவும் மோடியும், கிருஷ்ணனும் அர்ஜுனனும் போன்றவர்கள்.

நல்லது

நல்லது

காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது. அவரது பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. இப்போது அமித் ஷா யார் என்று மக்களுக்கு தெரிந்து இருக்கும். எல்லா மக்களுக்கும் அமித் ஷா யார் என்று இப்போது புரிந்து இருக்கும். இந்த நாட்டிற்காக நான் அவரிடம் நன்றி சொல்லிக்கிறேன், என்று குறிப்பிட்டார்.

மொத்தமாக வெளிப்படை

மொத்தமாக வெளிப்படை

இத்தனை நாட்கள் விமர்சனத்திற்கு அஞ்சி பாஜகவை மறைமுகமாக ஆதரித்து வந்த ரஜினிகாந்த் இப்போது அப்படியே களமிறங்கி வெளிப்படையாக பாஜகவை ஆதரிக்க தொடங்கி உள்ளார். அதுவும் அமித் ஷாவை அவர் புகழ்ந்த விதம் பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. ''காஷ்மீர் மிஷன் சக்ஸஸ்'' என்று பாஜக உறுப்பினர்களுக்கு இணையாக அமித் ஷாவை ரஜினி புகழ்ந்துள்ளார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

தமிழகத்தில் காஷ்மீர் பிரிவை திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் என்று பிரதான கட்சிகள் எல்லாம் கடுமையாக எதிர்க்கிறது. தமிழகத்தை சேர்ந்த பெருவாரியான மக்களும் இதை எதிர்க்கிறார்கள். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வெளிப்படையாக ரஜினி பாஜக ஆதரவு நிலைப்பட்டை எடுத்து உள்ளார். இது கொஞ்சம் ரஜினி ரசிகர்களையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஆன்மிக அரசியல்

ஆன்மிக அரசியல்

அப்படி என்றால் ரஜினி சொன்ன ஆன்மீக அரசியல் என்பது பாஜக ஆதரவு ஆன்மீகம் தானா? கட்சி தொடங்கி ரஜினி பாஜகவுடன் கூட்டணி வைக்க போகிறாரா? என்றெல்லாம் அவரின் தொண்டர்களும், நலம் வவிரும்பிகளும் இப்போதே இணையத்தில் கேட்க தொடங்கிவிட்டனர். இன்னும் தொடங்கப்படாத ரஜினியின் அரசியல் பயணத்திற்கு அவரின் இந்த பாஜக ஆதரவு நிலைப்பாடு எந்த விதத்தில் உதவ போகிறது, எப்படி காலை வார போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!

English summary
Neutral, Nah no more: Actor Rajinikanth started supported BJP frankly, In his recent speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X