கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்!
சென்னை: கரூர் துயர சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ.யின் விசாரணைக்காக டெல்லியில் ஆஜராகியிருக்கிறார் நடிகர் விஜய். டெல்லியில் ஆஜராக விலக்களிக்க வேண்டும் என சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விஜய் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் ஆஜராகியுள்ளார்.
விஜய்யை அடுத்து திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனை ஏற்றுக் கொண்ட செந்தில்பாலாஜி 17-ந்தேதி டெல்லியில் ஆஜராக இருக்கிறார்.

இந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்ப சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, செந்தில்பாலாஜியோடு மருத்துவ மனைக்குச் சென்ற விஜபிக்கள், நடந்துள்ள சம்பவம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய திமுக அரசின் உயரதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்ப சிபிஐ தரப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாம்.
தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும் நிலையில், இவர்களெல்லாம் டெல்லிக்கு அழைக்கப்படுவார்கள் என்று கோட்டை வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. அதாவது, தேர்தலில் பிசியாக இருக்கும் திமுகவை டென்சன் படுத்த அமைச்சர்கள் பலருக்கும் குறி வைத்துள்ள டெல்லி, தமிழக அதிகாரிகளை அழைப்பதன் மூலம் திமுகவின் பதட்டத்தை கூடுதலாக்க இந்த திட்டம் என்கிறார்கள்.
செந்தில் பாலாஜி சிபிஐ சம்மன்
ஏற்கனவே...செந்தில்பாலாஜிக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அதனை வாங்க மறுத்ததுடன் வழக்கறிஞர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் செ.ப.! தேர்தல் நெருங்கும் நிலையில் தனக்கு சம்மனா? என அதிர்ச்சி யடைந்துள்ள செந்தில்பாலாஜி, முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே சொன்ன ஒரு வார்த்தை அவரிடம் மீண்டும் மீண்டும் எதிரொலிப்பதால் அந்த அதிர்ச்சியும், சம்மன் அதிர்ச்சியும் சேர்ந்து அவரை அப்-செட்டாக்கியிருக்கிறது என்கிறார்கள் திமுக உடன் பிறப்புகள்.
அதென்ன ஸ்டாலின் சொன்ன வார்த்தைகள் ? என திமுக வட்டாரங்களில் விசாரித்த போது, ''மூன்று நாட்களுக்கு முன்பு ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்களையும் தொடர்பு கொண்டு, மாவட்டத்திலுள்ள தொகுதிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது? இந்த பகுதி களில் வீக்காக இருப்பதாக உளவுத்துறை ரிப்போர்ட் தந்துள்ளது...அந்த பகுதிகளை கவனியுங்கள் என உத்தரவு பிறப்பித்துக்கொண்டிருந்தார்.
நீங்கள் கோவையில் போட்டி
அந்த வகையில் செந்தில்பாலாஜியிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், கரூர் மற்றும் கோவை மாவட்ட நிலவரங்களைக் கேட்டறிந்தவர், ஒரு கட்டத்தில், 'இந்த முறை நீங்கள் கோவையில் போட்டியிடுங்களேன். எந்த தொகுதின்னு நீங்களே சொல்லுங்கள். வேலுமணியை எதிர்க்கும் வலிமையான கேண்டிடேட் நீங்க தான். நீங்க போட்டி யிட்டால் கோவையின் அனைத்து தொகுதிகளிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துமே' என்றெல்லாம் சொல்ல, 'தலைவரே, கோவை வேண்டாம் தலைவரே...' என பதறிப் போய்ட்டாராம் செந்தில் பாலாஜி.
கரூர் செந்தில் பாலாஜி
கரூர் மாவட்டத்தில் திமுகவினர் யார் நின்றாலும் அவர்களை ஈசியாக ஜெயிக்க வைத்து விடுவார் செந்தில்பாலாஜி. அந்த மாவட்டத்தை பொறித்தவரை, எந்த கவலையும் இல்லை. ஆனால், கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளில் அதிமுகவே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதற்கு காரணம், அதிமுக மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான். கரூர் எப்படி செந்தில்பாலாஜியின் ஆளுகை யில் இருக்கிறதோ...அதேபோல, கோவை மாவட்ட தொகுதிகள் வேலுமணியின் ஆளுகையில் இருக்கின்றன.
இந்த தேர்தலில் அதனை உடைக்க வேண்டும் என்பது தான் முதல்வர் ஸ்டாலினின் விருப்பம். அதனால்தான், கோவை மாவட்ட பொறுப்பாள ராக இருக்கும் செந்தில்பாலாஜி, கோவையில் போட்டியிட்டால், அந்த தாக்கமே 10 தொகுதிகளிலும் எதிரொலிக்கும். வேலுமணியின் ஆதிக்கத்தைக் குறைக்க முடியும். செந்தில் பாலாஜியின் ஃபீல்ட் வொர்க்கால் 10 தொகுதிகளிலும் திமுகவை ஜெயிக்க வைக்க அவரால் முடியும் என முதல்வர் ஸ்டாலின் யோசித்திருக்கிறார். அதனால் தான், கோவையில் போட்டியிடுங்களேன் என செந்தில் பாலாஜியிடம் சாதாரணமாகக் கேட்டிருக்கிறார் முதல்வர். வேறு எதுவும் இல்லை'' என்று சுட்டிகாட்டுகிறார்கள் திமுக உடன்பிறப்புகள்.
- சிறப்பு நிருபர் எழில்
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications