சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொதுக்குழு கூட்டியதே செல்லாது.. ஓபிஎஸ் பரபர வாதம்.. நான் என்ன செய்வது? உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டுவதே விதிமீறல், சட்டத்திற்கு புறம்பாக பொதுக்குழுவை கூட்டுகிறார்கள் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு இன்று உயர் நீதிமன்றத்தில் வாதம் வைத்தது.

Recommended Video

    ADMK General Meeting | உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய வைத்திலிங்கம், புகழேந்தி - வீடியோ

    அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக பல்வேறு வழக்குகள் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வழக்கு தொடுத்தனர்.

    இந்த வழக்கில், அதிமுக பொதுக்குழுவிற்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு சென்னை உயர் நீதிமன்றத்தில் 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு இடைக்கால தடையும் உச்ச நீதிமன்றம் மூலம் விதிக்கப்பட்டது.

    இரண்டில் ஒன்று பார்க்க முடிவு.. மதுரையில் போட்டி பொதுக்குழு! பரபரக்கும் பன்னீர்செல்வம் டீம்! இரண்டில் ஒன்று பார்க்க முடிவு.. மதுரையில் போட்டி பொதுக்குழு! பரபரக்கும் பன்னீர்செல்வம் டீம்!

    உயர் நீதிமன்றம்

    உயர் நீதிமன்றம்

    இந்த தீர்ப்பு காரணமாக தானாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்த இன்னொரு அவமதிப்பு வழக்கு பொருள் அற்றதாக மாறிவிடும். அதாவது 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்ப்பை எடப்பாடி பழனிசாமி தரப்பு மீறிவிட்டதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கு தானாக பொருள் அற்றதாக மாறிவிடும். இதையடுத்து இன்று அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

     பொதுக்குழு

    பொதுக்குழு

    இந்த நிலையில்தான் ஜூலை 11ம் தேதி நடக்க பொதுக்குழுவிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி முன்பாக ஓ பன்னீர்செல்வம் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த மனுவில் பொதுக்குழு காரணமாக மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுக்குழு கூட்டத்துக்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும், ஆனால் மிகவும் தாமதமாக அழைப்பு விடுத்துள்ளனர். இது விதிப்படி தவறு.

    ஒருங்கிணைப்பாளர்

    ஒருங்கிணைப்பாளர்

    அதோடு ஒருங்கிணைப்பாளராக நான் முறையாக அழைப்பு விடுக்கவில்லை. அதனால் பொதுக்குழுவை அனுமதிக்க கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு மனுதாக்கல் செய்தது. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் நேற்று பொதுக்குழுவிற்கு தடை விதிக்க முடியாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது ஓ பன்னீர்செல்வம் தரப்பு.

    என்ன வாதம்?

    என்ன வாதம்?

    அதன்பின் ஓ பன்னீர்செல்வம் தரப்பு வைத்த வாதத்தில், கூட்டத்திற்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்தாலும் மற்ற விவகாரங்கள் பற்றி விசாரிக்க வேண்டும். மற்ற விவகாரங்கள் பற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்றார். இதற்கு நீதிபதி எழுப்பிய கேள்வியில், உச்சநீதிமன்றம் சொல்லிவிட்ட நிலையில் நான் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்? என்று கேட்டார் . மற்ற விவகாரங்கள் பற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்தது.

    நீதிபதி: மற்ற விவகாரம் என்றால் என்ன?

    நீதிபதி: மற்ற விவகாரம் என்றால் என்ன?

    ஓபிஎஸ்: பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு சிக்கல் உள்ளது. அதை பற்றி விசாரிக்க வேண்டும். மேலும், தற்போது பொதுக்குழு கூட்டியதே செல்லாது என்பதே எங்கள் வழக்கு. பொதுக்குழு சட்டத்திற்கு புறம்பாக கூடுவதால் விதிகள் மீறப்பட்ட வாய்ப்பு.விதிகளுக்கு புறம்பாக, ஒற்றைத் தலைமையைக் கொண்டு வரும் வகையில் பொதுக்குழுவை கூட்ட முயற்சிக்கின்றனர்.. ஜூலை 11 ஆம் தேதி நடக்கவுள்ள பொதுக்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வர முயற்சி நடக்கிறது. பொதுக்குழு அழைப்பு யார் பெயரில் இருக்கிறது என்பதே பிரச்சனை, என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு வாதம்வைத்தது .

    எடப்பாடி தரப்பு பதில்

    எடப்பாடி தரப்பு பதில்

    எடப்பாடி தரப்பு: இதையடுத்து எடப்பாடி தரப்பு வைத்த வாதத்தில் ஜூன் 23ம் தேதியே பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூடும் என்று அறிவித்துவிட்டோம். முன்பே நாங்கள் அறிவித்துவிட்டோம். இது செய்திகளில் வந்துவிட்டது. இதனால் கூட்டம் நடத்தும் உரிமையை பறிக்க கூடாது. இந்த வழக்கில் பதிலளிக்க ஒரு வார கால அவகாசம் வேண்டும். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் பொதுக்குழுவுக்கு தடை கோர முடியாது. அக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் நிவாரணம் கோர முடியும். இப்போது தடை விதிக்க முடியாது, என்று எடப்பாடி தரப்பு வாதம் வைத்தது.

    English summary
    O Panneerselvam says AIADMK general council is illegal: What can we do? asks MHCஅதிமுக பொதுக்குழு கூட்டுவதே விதிமீறல், சட்டத்திற்கு புறம்பாக பொதுக்குழுவை கூட்டுகிறார்கள் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு இன்று உயர் நீதிமன்றத்தில் வாதம் வைத்தது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X